ஆமீர்கான் பிறந்தநாள் ஸ்பெஷல்: கதைக்களம் மட்டுமல்ல... இவரது கார் களமும் வித்தியாசமானது!

Written By:

பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் நாயகனாக வலம் வரும் ஆமிர்கான் இன்று தனது 51 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வித்தியாசமான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவர்ந்ததுடன், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நடிகராகவும் ரசிகர்கள் மனதில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.

நடிகர், தயாரிப்பாளர், சமூக நல ஆர்வலர் என பன்முகம் கொண்ட அவர் எடுக்கும் கதைக்களமும் வித்தியாசமாக அமைவது மட்டுமல்ல, அவரது கார் களமும் வித்தியாசமானதுதான். வெரைட்டியான சொகுசு கார்களை வைத்து அழகு பார்க்கும் அமீர்கானின் கராஜிற்கு ஒரு விசிட் அடிப்போமா?

பென்ட்லீ கான்டினென்டல்

பென்ட்லீ கான்டினென்டல்

உலகின் மிகவும் உயர் வகை ஆடம்பர கார்களை தயாரிக்கும் பென்ட்லீ நிறுவனத்தின் கான்டினென்டல் சொகுசு காரை ஆமிர்கான் வைத்திருக்கிறார். பெரும் பணக்காரர்களின் வீடுகளுக்கு ராஜ கலையை ஏற்படுத்தி தரும், இந்த காருக்கு தனது மனதில் விசேஷ அந்தஸ்து கொடுத்து வைத்திருக்கிறார்.

ஸ்பெஷல் நம்பர்

ஸ்பெஷல் நம்பர்

ஜேம்ஸ்பாண்ட் பட தாக்கமாக இருக்கலாமோ என்று தெரியவில்லை. இந்த பென்ட்லீ கான்டினென்டல் ஆடம்பர காருக்கு 0007 என்ற பேன்ஸி எண்ணை வாங்கியிருக்கிறார். ஒருவேளை, ராசியாக கூட நினைத்திருக்கலாம். ஏனெனில், அவர் பயன்படுத்தும் பல கார்களில் 7 என்ற எண் இடம்பெற்றிருக்கிறது. சக்திவாய்ந்த வி8 எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த கார் மணிக்கு 300 கிமீ வேகம் வரை அசால்ட்டாக தொடக்கூடியது. ரூ.2.25 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்.

ரேஞ்ச்ரோவர்

ரேஞ்ச்ரோவர்

ஆமிர்கான் கராஜில் வசீகரிக்கும் மாடல்களில் ஒன்று லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச்ரோவர். இந்த எஸ்யூவி வகை காரை ஆமிர்கான் மாதம் ஒருமுறை மட்டுமே விரும்பி பயன்படுத்துகிறாராம். அவ்வளவு ஸ்பெஷலாக இதனை மனதில் இறுத்திக் கொண்டிருக்கிறார்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

வெளிப்புறத்தில் ஆணவத்தையும், உட்புறத்தில் சொகுசையும் சேர்த்து குழைத்து நிற்கும் இந்த எஸ்யூவியில் 503 பிஎச்பி பவரையும், 625 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 5.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த எஸ்யூவி ரூ.2.4 கோடி முதல் ரூ.4.2 கோடி வரையிலான விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட்

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட்

சரியான பின்புலம் கொண்டவர்களுக்கு மட்டுமே கார் விற்பனை செய்கிறது ரோல்ஸ்ராய்ஸ். அந்த வகையில், அந்த நிறுவனத்தின் மதிப்புமிக்க வாடிக்கையாளர் குடும்பத்தில் ஒருவர் ஆமிர்கான். ஆம், ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரையே வாங்கி வைத்திருக்கிறார் ஆமிர்கான். பெயரை கேட்டாலே மதிப்பை பல கோடி மடங்கு கூட்டும் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் சிறப்புகளை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரில் 6,592சிசி வி12 எஞ்சின் 536 பிஎச்பி பவரையும், 780 என்எம் டார்க்கையும் வாரி வழங்கும். இந்த கார் ரூ.3.10 கோடி விலை மதிப்பு கொண்டது. பென்ட்லீயும், ரோல்ஸ்ராய்ஸும் போட்டி போட்டு நிற்கும் ஆமிர்கான் கராஜில் இடம்பிடித்த அடுத்த கார் என்ன?

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ்

அமீர்கானின் கராஜில் இடம்பிடித்த அந்த பெருமைமிகு மாடல்களில் ஒன்று பிஎம்டபிள்யூ 6 சீரிஸ். சினிமாவில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்விலும் பர்ஃபெக்ஷனை அதிகம் விரும்பும் ஆமிர்கான் இந்த காரை மிகவும் விரும்பி தேர்ந்தெடுத்து வாங்கியிருக்கிறார்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

உயர்வகை லெதர் இருக்கைகள், 6 ஏர்பேக்குகள் கொண்ட பாதுகாப்பு, பல்வேறு வகையான தொழில்நுட்ப வசதிகள் என அமீர்கானை இந்த கார் கவர்ந்துவிட்டது. இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 5.4 வினாடிகளில் எட்டிவிடும். ஒரு கோடி ரூபாய் விலை மதிப்பு கொண்டது.

 டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா ஃபார்ச்சூனர் கம்பீரத்துக்கு மயங்காத அரசியல்வாதியும் இல்லை, ஆட்ட நாயகனும் இல்லை. ஆம், மிக கம்பீரமான டிசைனால் வசீகரிக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒன்றும் அமீர்கானிடம் இருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த எஸ்யூவியில் இருக்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 169 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க்கையும் வழங்கும். ரூ.25 லட்சம் விலையில் இந்த எஸ்யூவியை வாங்கியிருக்கிறார்.

குண்டு துளைக்காத கார்

குண்டு துளைக்காத கார்

சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியால், இவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததையடுத்து, ரூ.10 கோடி கொடுத்து குண்டு துளைக்காத மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 காரை ஆர்டர் செய்து வாங்கினார். பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இந்த காருக்காக விசேஷ பயிற்சியளிக்கப்பட்ட இரண்டு ஓட்டுனர்களும் பணியமர்த்தியிருக்கிறார்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

குண்டு வெடிப்பில் சேதமடைந்தாலும், பஞ்சரானாலும் குறிப்பிட்ட வேகத்தில் காரை செலுத்துவதற்கான விசேஷ டயர்கள், ஏகே-47 எந்திர துப்பாக்கியால் சுட்டாலும், சேதமடையாத ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் காரின் பாடி பேனல்கள் போன்ற பாதுகாப்பு கட்டமைப்பை பெற்றிருக்கிறது. கண்ணி வெடித் தாக்குதலிலும் இந்த காரின் அடிப்பாகம் சேதமடையாது. அவ்வளவு பக்காவான பாதுகாப்பை வழங்கும். இதே காரை கடந்த ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானியும் வாங்கியது நினைவிருக்கலாம்.

தொடர்புதைய செய்தித் தொகுப்பு

தொடர்புதைய செய்தித் தொகுப்பு

நடிகர் சிம்புவின் ஆஸ்தான கார் எது தெரயுமா?

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Bollywood Actor Aamir khan car collection.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark