இவரிடம் இந்த பென்ஸ் காரும் உள்ளதா... வெள்ளை நிற லக்சரி பென்ஸ் காரில் வந்து இறங்கிய பிரபல நடிகர்!!

இந்தியா மட்டுமின்றி, எந்தவொரு நாட்டிலும் விஐபி-கள் அவ்வப்போது லக்சரி கார்களை வாங்குவர் என்பது நமக்கு தெரிந்த விஷயமே. அதுவும் சினிமா பிரபலங்கள் என்றால் சொல்ல வேண்டாம். மாதத்திற்கு ஒரு கார் என வாங்கும் சினிமா நட்சத்திரங்கள் கூட நம் நாட்டில் இருக்க தான் செய்கின்றனர்.

அத்தகைய சினிமா நட்சத்திரங்களுள் ஒரு சிலர் புதிய காரை வாங்கிய பின்பு பழைய காரை விற்றுவிடுவர். அதேநேரம், வேறு சிலர் எத்தனை கார்களை வாங்கினாலும், பழைய கார்களை தொடர்ந்து தனது கேரேஜில் வைத்திருப்பர். இதனாலேயே குறிப்பாக ஒரு சில நடிகர்களின் கேரேஜ் ஆனது பல்வேறு வகையிலான கார்களுடன் மிக பெரியதாக இருக்கும். அவ்வாறு லக்சரி கார்களை வாங்கி குவிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர்களுள் ஒருவர் தான் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் ஆவார்.

வெள்ளை நிற லக்சரி பென்ஸ் காரில் வந்து இறங்கிய பிரபல நடிகர்!!

சமீபத்தில் புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ் 600 காரை வாங்கி இருந்த நடிகர் அஜய் தேவ்கான் தற்போது மற்றொரு புதிய காராக வெள்ளை நிற மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் செடானில் காட்சி தந்துள்ளார். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் காரை தேவ்கான் கடந்த 2022 மே மாதத்தில் வாங்கினார். அஜய் தேவ்கானின் இந்த எஸ்-கிளாஸ் கார் ஆனது அதன் எஸ்450 4மேட்டிக் வேரியண்ட் ஆகும்.

இது மெர்சிடிஸ் எஸ்-கிளாஸின் பெட்ரோல் வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டில் 3.0 லிட்டர் இன்லைன்-6 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜினின் மூலம் அதிகப்பட்சமாக 365 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும். இந்த வேரியண்ட்டின் பெயரில் உள்ள '4மேட்டிக்' என்பதை பார்த்தவுடனே தெரிந்திருக்கும் இது மெர்சிடிஸ்-பென்ஸின் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தை கொண்ட வேரியண்ட் என்று.

இந்த என்ஜின் உடன் 9ஜி-ட்ரோனிக் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அத்துடன் சிறந்த மைலேஜ் திறனுக்காக இ.க்யூ பூஸ்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டமும் இந்த மெர்சிடிஸ் காரில் வழங்கப்படுகிறது. இத்தகைய மாடர்ன் மெர்சிடிஸ்-பென்ஸ் செடான் காரை அஜய் தேவ்கான் மட்டுமின்றி, வேறு சில பாலிவுட் நடிகர்களும் வைத்துள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், நடிகர் ஷாரூக்கான், நடிகை கரீனா கபூர். இவர்கள் இருவரிடமும் எஸ்-கிளாஸ் கார் வெள்ளை நிறத்தில்தான் உள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் காரின் செயல்திறன்மிக்க வெர்சன் மெர்சிடிஸ்-மேபக் எஸ்-கிளாஸ் ஆகும். இந்த காரையும் சில பாலிவுட் பிரபலங்கள் வைத்துள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நடிகர் அஜய் தேவ்கானின் எஸ்-கிளாஸ் காரில் பெட்ரோல் என்ஜின் உள்ளதாக கூறினோம். இந்த பெட்ரோல் என்ஜின் மட்டுமின்றி, இந்த லக்சரி செடான் காரில் 2.9 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது. இந்த டீசல் என்ஜின் ஆனது எஸ் 350டி மற்றும் எஸ் 400டி 4மேட்டிக் வேரியண்ட்களில் வழங்கப்படுகின்றது.

வெள்ளை நிற லக்சரி பென்ஸ் காரில் வந்து இறங்கிய பிரபல நடிகர்!!

எஸ் 350டி வேரியண்ட்டில் இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 285 பிஎஸ் மற்றும் 600 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலையும், எஸ் 400டி வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 330 பிஎஸ் மற்றும் 700 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் உண்மையில் பாலிவுட் சினிமா துறையில் தற்சமயம் வேகமாக பிரபலமாகிவரும் கார் என்று பார்த்தால் அது மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ் 600 தான்.

ஏற்கனவே கூறியதுபோல், நடிகர் அஜய் தேவ்கான் சமீபத்தில் வாங்கிய மெர்சிடிஸ் கார்களுள் ஒன்றான இந்த மேபக் கார் லக்சரி செடான் கார்களை காட்டிலும் கம்பீரமான & நிமிர்ந்த தோற்றம் கொண்ட லக்சரி எஸ்யூவி கார்களை விரும்பும் சினிமா நட்சத்திரங்களின் பிரதான தேர்வாக மாறி வருகிறது. ஏனெனில் மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ் 600 காரை அஜய் தேவ்கான் மட்டுமின்றி, ரன்வீர் சிங், அர்ஜூன் கபூர் மற்றும் க்ரிடி சனோன் என வேறு சில பாலிவுட் ஸ்டார்களும் சமீபத்தில் வாங்கியுள்ளனர்.

Article Published On: Friday, February 10, 2023, 10:21 [IST]
English summary
Bollywood actor ajay devgn seen in new mercedes benz s class sedan car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+