மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்... காரணம் உங்கள் மனதை உருக வைக்கும்...

பிரபல நடிகர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்... காரணம் உங்கள் மனதை உருக வைக்கும்...

பாலிவுட் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலர் சொகுசு கார்களை அதிகம் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவர்கள் அதிகம் தேர்வு செய்யும் கார்களில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes-Benz GLS) உள்ளது. இது இந்திய சந்தையில், குறிப்பாக பாலிவுட் திரையுலகினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள எஸ்யூவி ரக கார் ஆகும்.

மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்... காரணம் உங்கள் மனதை உருக வைக்கும்...

இந்த சூழலில் பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான அனில் கபூர், தனது மனைவி சுனிதா கபூருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரை பரிசாக வழங்கியுள்ளார். சுனிதா கபூரின் பிறந்த நாளை முன்னிட்டு, அனில் கபூர் இந்த மிகவும் விலை உயர்ந்த பரிசை அவருக்கு வழங்கி அசத்தியுள்ளார். சுனிதா கபூருக்கு தற்போது ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்... காரணம் உங்கள் மனதை உருக வைக்கும்...

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய ஜிஎல்எஸ் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 99.90 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்... காரணம் உங்கள் மனதை உருக வைக்கும்...

பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவியில் பெரிய க்ரில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் நேர்த்தியான தோற்றம் முழு எல்இடி ஹெட்லேம்ப்களையும் இந்த கார் பெற்றுள்ளது. மேலும் பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் உருவத்தில் பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்... காரணம் உங்கள் மனதை உருக வைக்கும்...

பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய மாடல் 77 மிமீ நீளமானது, 22 மிமீ அகலமானது. அத்துடன் புதிய மாடல் 60 மிமீ நீளமான வீல்பேஸை பெற்றுள்ளது. அதே சமயம் பின் பகுதியில் எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பயணிகளுக்கு சௌகரியமான பயணத்தை உறுதி செய்யும் கேபினையும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி பெற்றுள்ளது.

மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்... காரணம் உங்கள் மனதை உருக வைக்கும்...

மேலும் 360 டிகிரி கேமரா உடன் ஆக்டிவ் பார்க் அஸிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் அஸிஸ்ட், ஆக்டிவ் பிரேக் அஸிஸ்ட் உள்ளிட்ட வசதிகளும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பயணிகளின் பாதுகாப்பிற்காக 9 ஏர்பேக்குகளையும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி பெற்றுள்ளது.

மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்... காரணம் உங்கள் மனதை உருக வைக்கும்...

400டி 4மேட்டிக் மற்றும் 450 4மேட்டிக் என மொத்தம் இரண்டு தேர்வுகளில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி கிடைக்கிறது. இதில், 400டி 4மேட்டிக் மாடலில் 2,925 சிசி, ஆறு-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 330 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கிய பிரபல நடிகர்... காரணம் உங்கள் மனதை உருக வைக்கும்...

அதே சமயம் 450 4மேட்டிக் மாடலில், 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 367 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அத்துடன் எலெக்ட்ரிக் மோட்டாரையும் இது பெற்றுள்ளது. இது கூடுதலாக 22 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Actor Anil Kapoor Buys Mercedes-Benz GLS SUV: The Reason Will Melt Your Heart. Read in Tamil
Story first published: Friday, March 26, 2021, 20:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X