விலை உயர்ந்த அப்பாச்சி பைக்கின் மீது ஆட்டோகிராஃப்ட் போட்டது அந்த நடிகரா! மனுசன் ஆள் அடையாளமே தெரியாம ஆகிட்டாரு

டிவிஎஸ் (TVS) நிறுவனத்தின் அதிக திறனை வெளிப்படுத்தும் பைக் மாடலாக அப்பாச்சி ஆர்ஆர் 310 (Apache RR310) இருக்கின்றது. சமீபத்தில் இந்த பைக்கை வாங்கிய இளைஞர் ஒருவர் அதற்கு சிறப்பு சேர்ப்பதாகக் கூறி அந்த பைக்கில் பிரபல நடிகர் ஒருவரின் ஆட்டோகிராஃப்டை வாங்கி இருக்கின்றார். இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஜான் ஆபிரகாமும் ஒருவர் ஆவார். முன்னணி இந்தி நட்சத்திர நடிகரான இவர் மிகப் பெரிய இருசக்கர வாகன காதலர் என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்னணி நடிகர்கள் சொகுசு கார்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்ற சூழலில், இவரோ இருசக்கர வாகனங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவராகக் காட்சியளிக்கின்றார்.

Abraham autograph on tvs apache

இந்த நிலையிலேயே அவரிடம் சென்று யுட்யூபரும், பைக் பிரியருமான அக்ஷய் கேதாரி, தன்னுடைய புதிய அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் கையொப்பம் வாங்கி இருக்கின்றார். இத்துடன், சில ஸ்கேல் மாடல்களையும் அந்த நடிகருக்கு பரிசளித்தார். யமஹா ஒய்இசட்ஆர்-எம்1, கவாஸாகி நிஞ்சா எச்2ஆர் ஆகிய பைக்குகளின் ஸ்கேல் மாடலையே அவர் வழங்கி இருக்கின்றார்.

இவற்றுடன் சேர்த்து மூன்றாவது ஒன்றாக சுஸுகி ஹயபுசா ஸ்கேல் மாடலையும் அந்த யுட்யூபர் வழங்கி இருக்கின்றார். இந்த ஸ்கேல் மாடல் அனைத்தும் சற்று ஸ்பெஷலானவை, அதேவேளையில், சுஸுகி ஹயபுசா ஜான் ஆபிரகாம் வைத்திருக்கும் அதே ஹயபுசாவின் நிறத்தில் அலங்கரித்து கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

Abraham autograph on tvs apache bike

ஆகையால், இது இன்னும் ஸ்பெஷலானதாகக் காட்சியளிக்கின்றது. இதற்கு அடுத்தபடியாகவே அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் ஆட்டோகிராஃப்ட் வாங்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக நடிகர் அந்த பைக்கை லேசாக ஆக்சலரேட்டும் செய்து பார்த்தார். இந்த சம்பவங்கள் அனைத்தும் முடிந்த பின்னர் நடிகர் ஜான் ஆபிரகாம் அழருடைய புதிய அப்ரில்லா ஆர்எஸ்வி4 ஆர்எஃப் வெளியே எடுத்து வருவதைக் காண முடிகின்றது.

யுட்யூபருடன் சேர்ந்து ஓர் ரைடை செய்ய அவர் அந்த பைக்கை வெளியே எடுத்து வந்திருக்கலாம் என யூகிக்க முடிகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒருவர் பின் ஒருவர் புறப்படுவதை நம்மால் பார்க்க முடிகின்றது. ஜான் ஆபிரகாம் மிகப் பெரிய இருசக்கர வாகன காதலர் ஆவார்.

Abraham with fan

இவர் தான் நடிக்கும் படங்களில்கூட பைக்குகளையே அதிகம் பயன்படுத்துவார். இவர் எந்த அளவிற்கு பைக் பிரியர் என்றால், அவர் இடத்தில் யமஹா வி-மேக்ஸ் 60 ஆம் ஆண்டு அனிவெர்சரி எடிசன், கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ் 14 ஆர், பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்ஆர், அப்ரில்லா ஆர்எஸ்வி4 ஆர்எஃப், யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1, ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர்-ஆர் ஃபையர்பிளேடு மற்றும் எம்வி அகுஸ்டா எஃப்4 ஆகிய பைக்குகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இதுதவிர, இன்னும் பல மோட்டார்சைக்கிள்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. மிக முக்கியமாக அரிய வகை பைக்குகளே அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றுடன் சேர்த்து சில அரிய வகை கார்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இத்தகைய மிகப் பெரிய பைக் பிரியர் என்பதாலேயே பைக் காதலர்களின் குருவாக ஜான் ஆபிரகாம் காட்சியளிக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 இந்தியாவில் ரூ.2 லட்சத்து71ஆயிரத்துக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது வெறும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. 312.2சிசி எஞ்ஜினே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 34பிஎஸ் பவரை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கால் வெறும் 2.93 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, November 20, 2023, 16:11 [IST]
English summary
Bollywood actor john abraham autographs on tvs apache rr 310
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X