Just In
- 1 hr ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 2 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 4 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 14 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- News
பள்ளிக்கு போக போகும் 10,12ம் வகுப்பு மாணவர்களே .. பள்ளி கல்வி துறை சொன்ன ஹேப்பி நியூஸ்
- Sports
எதிரணி வீரர்களை சீண்டறது கீழ்த்தரமானது.. இதுமூலமா நம்மோட பலவீனம்தான் வெளிப்படும்!
- Movies
திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!
- Finance
நரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முகத்தை மூடியபடி சைக்கிள் ஓட்டி வந்த பிரபல நடிகர்! யாரென்று தெரிந்ததும் ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்
முகத்தை மூடிக்கொண்டு பொது சாலையில் சைக்கிள் ஓட்டி வந்த பிரபல நடிகரை பார்த்து, மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

இந்தியாவில் தற்போதைய நிலையில் பெரும்பாலான வீடுகளில், கார் மற்றும் டூவீலர் போன்ற மோட்டார் வாகனங்கள் உள்ளன. ஒரு சில வீடுகளில், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மோட்டார் வாகனங்கள் இருக்கின்றன. மோட்டார் வாகனங்கள் மூலம் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக சென்று விடலாம்தான்.

ஆனால் இன்று பெரும்பாலானோர் சந்தித்து வரும் உடல் பருமன் பிரச்னைக்கு மோட்டார் வாகனங்களும் ஒரு காரணமாக உள்ளன. சைக்கிள் பயன்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாலேயே, மோட்டார் வாகனங்களை பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது. ஆனால் சைக்கிள் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு தற்போது அனைவர் மத்தியிலும் ஏற்பட்டு வருகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

தமிழகத்தில் காவல் துறையை சேர்ந்த ஒரு சிலர், வீட்டில் இருந்து காவல் நிலையத்திற்கு சைக்கிளில் சென்று வருவது தொடர்பாகவும், பணியின்போதும் கூட அவர்கள் சைக்கிளையே பயன்படுத்துவது தொடர்பாகவும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சூழலில், பிரபல மனிதர் ஒருவர் தற்போது பொது சாலையில் சர்வ சாதாரணமாக சைக்கிள் ஓட்டி வந்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பிர் கபூர்தான் (Ranbir Kapoor) அந்த பிரபல மனிதர். அவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மும்பை சாலைகளில் தற்போது சைக்கிள் ஓட்டியுள்ளார். இந்த நிகழ்வு விடுமுறை தினமான நேற்று (ஞாயிறு) நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் மும்பையில் உள்ள ஜூகு சர்க்கிள் சாலையில் ரன்பிர் கபூர் சைக்கிள் ஓட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகத்தை துணியால் மூடியபடி ரன்பிர் கபூர் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார். இருந்தாலும் ரசிகர்கள் ஒரு சிலர், அவரை அடையாளம் கண்டு கொண்டனர். ரன்பிர் கபூரை சாலையில் பார்த்த மகிழ்ச்சியில், அவர்கள் திக்குமுக்காடி போய் விட்டார்கள். அத்துடன் ரன்பிர் கபூர் சைக்கிள் ஓட்டும் காட்சிகளை, ஒரு சிலர் தங்களுடைய கைப்பேசியில் பதிவும் செய்தனர்.

பொதுவாக ஜூகு சர்க்கிள் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். ஆனால் ஞாயிறு காலை என்பதால், ரன்பிர் கபூர் சைக்கிள் ஓட்டிய சமயத்தில் போக்குவரத்து நெரிசல் பெரிதாக இல்லை. ஆனால் சைக்கிள் ஓட்டியபோது, ரன்பிர் கபூர் தலைகவசம் அணியவில்லை. எனினும் ரன்பிர் கபூருடன் வந்த அவருடைய நண்பர்கள் தலைகவசம் அணிந்திருந்தனர்.

சைக்கிள் ஓட்டும்போதும் கூட தலைகவசம் அணிந்து கொள்வது கூடுதல் பாதுகாப்பை தரும். சைக்கிள்களை ஓட்டும்போது அணிவதற்கென்றே பிரத்யேகமான தலைகவசங்கள் சந்தையில் மிக எளிதாக கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நவீன யுக சைக்கிள்களை ஓட்டும் பலர், முறையாக தலைகவசம் அணிந்திருப்பதை தற்போது சாலைகளில் பார்க்க முடிகிறது.

இதனிடையே ரன்பிர் கபூர் சைக்கிள் ஓட்டும்போது, தனது நண்பர்களுடன் பேசி கொண்டே வந்தார். அத்துடன் அவர்கள் தன்னுடன்தான் வருகின்றனரா? என்பதையும் அவ்வப்போது திரும்பி பார்த்து உறுதி செய்து கொண்டே வந்தார். ரன்பிர் கபூர் சைக்கிள் ஓட்டும் காணொளி, வைரல்பாயாணி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது. அதனை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

ரன்பிர் கபூர் உடற்பயிற்சிக்காக சாலையில் சைக்கிள் ஓட்டியிருக்கலாம். ஆனால் ரன்பிர் கபூரிடம் ஏராளமான சொகுசு கார்கள் உள்ளன. மற்ற பாலிவுட் நட்சத்திரங்களை போலவே ரன்பிர் கபூரிடம் சொகுசு கார்களை மிக அதிகமாக நேசிக்க கூடியவர்தான். இதற்கு உதாரணமாக அவரிடம் ரேஞ்ச் ரோவர் வோக் கார் ஒன்று இருக்கிறது.

இது தவிர ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி, ஆடி ஏ8எல் மற்றும் ஆடி ஆர்8 உள்ளிட்ட கார்களை ரன்பிர் கபூர் வைத்துள்ளார். ரன்பிர் கபூரை போல், உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டும் வழக்கம் பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரிடம் காணப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.