இஸட்+ பாதுகாப்பை ஒதுக்கி விட்டு இவருடன் தனியாக சென்ற முகேஷ் அம்பானி மகன்... காரணம் இதுதான்...
முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, இஸட்+ பாதுகாப்பை ஒதுக்கி விட்டு, இவருடன் தனியாக சென்றார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவிலும் பெரும் பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி திகழ்கிறார். எனவே இவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இஸட்+ (Z+) பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

முகேஷ் அம்பானி குடும்பத்தினர், வெளியில் எங்கு சென்றாலும், அவர்களது பாதுகாப்பிற்காக பல்வேறு கார்கள் அணிவகுத்து வரும். இதில், லேண்ட் ரோவர் டிஸ்கவரி, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யூ எக்ஸ்5, ஃபோர்டு எண்டெவர் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகிய கார்கள் குறிப்பிடத்தகுந்தவை.

இந்த கார்களை உள்ளடக்கிய பாதுகாப்பு கான்வாய் இல்லாமல், முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும்பாலும் வெளியில் எங்கும் செல்ல மாட்டார்கள். அப்படி சென்றாலும் கூட அது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகதான் இருக்கும்.

அப்படி ஒரு அரிய நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடம், ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் டிஎச்சி, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் உள்ளிட்ட கார்கள் உள்ளன. இதில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கடந்த சில மாதங்களுக்கு முன்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இதுதான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி ரக கார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பென்ட்லீ பென்டைகா வி12, பென்ட்லீ பென்டைகா வி8, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எஸ்விஆர் உள்ளிட்ட கார்களும் அம்பானி குடும்பத்தினரிடம் உள்ளது.

இந்த சூழலில், லம்போர்கினி உருஸ் கார் ஒன்றை அம்பானி குடும்பத்தினர் சமீபத்தில் வாங்கியுள்ளனர். இது எஸ்யூவி ரக கார் ஆகும். சூப்பர் எஸ்யூவி என்று கூட சொல்லலாம். இந்தியா உள்பட உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் லம்போர்கினி உருஸ் புகழ்பெற்ற மாடலாக திகழ்ந்து வருகிறது.

இந்தியாவில் தற்போது பலரும் லம்போர்கினி உருஸ் கார்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில், கன்னட நடிகர்கள் புனித் ராஜ்குமார் மற்றும் தர்ஷன் ஆகியோர் லம்போர்கினி உருஸ் கார்களை சமீபத்தில் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரின் விலை சுமார் 3 கோடி ரூபாய். ஆன் ரோடு விலை தோராயமாக சுமார் 3.50 கோடி ரூபாய். இதன் மூலம் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக லம்போர்கினி உருஸ் திகழ்கிறது.

லம்போர்கினி உருஸ் காரில், 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 641 பிஎஸ் பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதில், ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது இன்ஜின் சக்தியை காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்துகிறது.

இதனிடையே அம்பானி குடும்பத்தினர் வாங்கியுள்ள புதிய லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரை, முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி பயன்படுத்தி வருகிறார். இந்த காரில் ஆகாஷ் அம்பானியும், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் பயணிக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் பலரும், முகேஷ் அம்பானி குடும்பத்தினருடன் நெருங்கி நட்பு கொண்டவர்கள். முகேஷ் அம்பானி வீட்டு விசேஷங்களில், பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தவறாமல் கலந்து கொள்வதே இதற்கு சாட்சி.

இந்த வகையில், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், முகேஷ் அம்பானி மகன் ஆகாஷ் அம்பானியும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இதன் அடிப்படையில்தான் அவர்கள் இருவரும் காரில் ஒன்றாக பயணித்துள்ளனர். செல்போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
ரன்பீர் கபூர்தான் காரை ஓட்டி சென்றுள்ளார். ஆனால் லம்போர்கினி உருஸ் காருக்கு பாதுகாப்பாக கான்வாய் எதுவும் சென்றது போல் வீடியோவில் தெரியவில்லை. எனவே அவர்கள் இருவரும் தனியாக பயணிப்பதை விரும்பியிருக்கலாம் என கூறப்படுகிறது.

ரன்பீர் கபூரும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்தான். அவரிடம் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி, ஆடி ஏ8 எல் மற்றும் ஆடி ஆர்8 உள்ளிட்ட பல்வேறு கார்கள் உள்ளன.

இந்த சூழலில் ரன்பீர் கபூர் மேலும் ஒரு எஸ்யூவி காரை வாங்க திட்டமிட்டிருக்கலாம் எனவும், அதற்காக தனது நெருங்கிய நண்பரின் லம்போர்கினி உருஸ் காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க எடுத்து சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே இஸட்+ பாதுகாப்பு சூழ லம்போர்கினி உருஸ் வரும் மற்றொரு வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.


Click it and Unblock the Notifications








