புல்லட்ப்ரூஃப் கார் இல்லைனா வெளியே வர யோசிக்கும் நடிகர்! வீடு முழுக்க கார் & பைக்குகள் தான்...
சல்மான்கான் (Salman Khan), பிரபல பாலிவுட் நடிகர் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவின் முன்னணி நடிகர்கள் என்று எடுத்து பார்த்தால் அதில் நடிகர் சல்மான்கானின் பெயரும் இருக்கும். ஏனெனில், அந்த அளவிற்கு பெரிய ரசிகர் கூட்டத்தை சல்மான்கான் சம்பாதித்து வைத்துள்ளார். மற்ற பாலிவுட் நடிகர்களை போன்று சல்மான்கானும் விலையுயர்ந்த கார் & பைக்குகளை வாங்குவதை விரும்பக்கூடியவர். குறிப்பாக, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார்கள் என்றால் சல்மான்கானுக்கு கூடுதல் பிரியம் ஆகும். இத்தகையவரிடம் உள்ள விலையுயர்ந்த வாகனங்களை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ரேஞ்ச் ரோவர் (Range Rover): நடிகர் சல்மான்கான் சமீபத்தில்தான் புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் எஸ்வி லாங் வீல்பேஸ் காரை வாங்கினார். இது இல்லாமல், ரேஞ்ச் ரோவர் வோக் ஆட்டோபயோகிராபி காரை அவரது அம்மாவிற்காக வாங்கினார். ஆனால், இந்த காரை அதிகமாக பயன்படுத்துவது சல்மான்கான் தான். இதுமட்டுமின்றி, ஓல்டு-ஜென்ரேஷன் ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றும் வெள்ளை நிறத்தில் சல்மான்கானிடம் உள்ளது. இந்த ஓல்டு ரேஞ்ச் ரோவர் கார் அவ்வப்போது பிரேக் டவுன் ஆகிவிடுவதாக ஒருமுறை எக்ஸ் தளத்தில் சல்மான் கூறியிருந்தார் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

புல்லட்ப்ரூஃப் நிஸான் பேட்ரோல் (Bulletproof Nissan Patrol): நடிகர் சல்மான்கான் புதியதாக ரேஞ்ச் ரோவர் எஸ்வி லாங் வீல்பேஸ் காரை வாங்குவதற்கு முன்பு வரையில் சல்மான்கான் பரவலாக பயன்படுத்தியது புல்லட்ப்ரூஃப் பொருத்தப்பட்ட நிஸான் பேட்ரோல் கார் ஆகும். சில ரவுடிகளிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்ததை அடுத்து சல்மான்கான் இந்த காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தார். இது பேர்ல் வெள்ளை நிறத்தில் இந்த நடிகரிடம் உள்ளது.

புல்லட்ப்ரூஃப் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி200 (Toyota Land Cruiser LC200): புல்லட்ப்ரூஃப் நிஸான் பேட்ரோல் காரை பயன்படுத்துவதற்கு முன்பு வரையில் சல்மான் பயன்படுத்திவந்த புல்லட்ப்ரூஃப் கார் லேண்ட் க்ரூஸர் எல்சி200 ஆகும். இந்த வகையில் பார்த்தால், நீண்ட வருடங்களாக சல்மான்கான் புல்லட்ப்ரூஃப் கார்களை பயன்படுத்தி வருகிறார். இந்த குறிப்பிட்ட புல்லட்ப்ரூஃப் லேண்ட் க்ரூஸர் காரை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சல்மான் இந்தியாவிற்கு கொண்டுவந்தார்.

லெக்ஸஸ் எல்.எக்ஸ் (Lexus LX): நடிகர் சல்மான்கானிடம் உள்ள மிகவும் சர்ச்சைக்குள்ளான காராக இதனை சொல்லலாம். ஏனெனில், காரில் மோதலை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதாக சல்மான்கான் மீது ஒரு வழக்கு நீண்ட வருடங்களாக நடைபெற்று வந்தது. இதனை சில வருடங்களுக்கு முன்பு வரையில் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அந்த சம்பவத்தின்போது சல்மான்கான் பயன்படுத்திய கார் இந்த லெக்ஸஸ் எல்.எக்ஸ் ஆகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ் (Mercedes-Benz GL Class): மேற்கூறப்பட்ட வழக்கிற்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது ஒருமுறை இந்த பென்ஸ் காரில் சல்மான்கான் வந்திறங்கினார். இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. இது ஒரு ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் கொண்ட கார் ஆகும்.

சுஸுகி இண்ட்ரூடர் எம்1800ஆர் (Suzuki Intruder M1800R): சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் பிராண்ட் தூதர் நடிகர் சல்மான்கான் ஆவார். இதன் காரணமாகவே இவரிடம் சில விலையுயர்ந்த சுஸுகி பைக்குகளும் உள்ளன. அவற்றுள் ஒன்றான சுஸுகி இண்ட்ரூடர் எம்1800ஆர் பைக்கில் 1.8 லிட்டர் வி-ட்வின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

சுஸுகி ஹயபுஸா (Suzuki Hayabusa): சல்மான்கானிடம் உள்ள மற்றொரு விலையுயர்ந்த சுஸுகி பைக் இதுவாகும். சிவப்பு நிறத்திலான தனது சுஸுகி ஹயபுஸா பைக்கை தனது சில திரைப்படங்களிலும் சல்மான்கான் பயன்படுத்தி உள்ளார். சல்மான்கானிடம் இருப்பது ஓல்டு-ஜென்ரேஷன் ஹயபுஸா பைக் ஆகும். இதில் 1.3 லிட்டர் லிக்யுடு-கூல்டு, 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் சல்மான்கானிடம் பெரும்பாலான சொகுசு கார்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, தனது கார்களுக்கு '2727' என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட்டை பொருத்துவதை சல்மான்கான் வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீப காலமாக பைக்குகளில் அதிகமாக வெளியில் காட்சி தருவதில்லை என்றாலும், திரைப்படங்களில் பைக் காட்சிகளில் நடித்துதான் நடிகர் சல்மான்கான் பிரபலமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









