சைலண்ட்டா... புல்லட் ஃப்ரூஃப் காரை வாங்கியுள்ள பிரபல நடிகர் - திடுத்திப்புனு வாங்குறதுக்கு காரணம் என்ன?

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் புதியதாக ஒரு புல்லட்ஃப்ரூஃப் செய்யப்பட்ட நிஸான் பேட்ரோல் எஸ்யூவி (Nissan Patrol SUV) காரை வாங்கியுள்ளதாக, அந்த கார் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை பற்றி முழுமையாக இனி பார்க்கலாம்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அறிமுகம் தேவையிருக்காது என நினைக்கிறேன். நிச்சயமாக அனைவரும் அவரை பற்றி அறிந்திருப்பீர்கள். ஆட்டோமொபைல் வாகனங்களில் அதிக ஆர்வம் கொண்டவர் என சொல்ல முடியாவிடினும், திரைப்பட நிகழ்ச்சிகளில் மாஸாக எண்ட்ரீ தருவதற்காகவே பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார். அந்த வரிசையில் புதியதாக இணைந்திருப்பது நிஸான் பேட்ரோல் எஸ்யூவி ஆகும்.

சைலண்ட்டா... புல்லட் ஃப்ரூஃப் காரை வாங்கியுள்ள பிரபல நடிகர்!

வெள்ளை நிற நிஸான் பேட்ரோல் கார் ஒன்றில் மும்பை சாலைகளில் பயணம் செய்யும்போது சமீபத்தில் சல்மான் கான் காட்சி தந்துள்ளார். இதுகுறித்த வீடியோவை கீழே காணலாம். இந்த வாகனத்தை மிக சமீபத்தில் தான் இவர் வாங்கி இருக்க வேண்டும். வீடியோவில், சல்மான் கானின் நிஸான் பேட்ரோல் வாகனத்திற்கு முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் அவரது பாதுகாப்பிற்காக கருப்பு நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் செல்வதை காணலாம்.

அத்துடன் மும்பை போலீஸாரும் தங்களது அரசாங்க ரோந்து வாகனமான மஹிந்திரா பொலிரோ நியோவில் செல்கின்றனர். சரி மீண்டும் நிஸான் பேட்ரோலுக்கு வருவோம், இந்த வாகனம் நமது இந்தியாவில் விற்பனையில் இல்லை. ஆதலால் இந்த வாகனத்தை சொந்த செலவில் வெளிநாட்டில் இருந்தே சல்மான் கான் இந்தியாவிற்கு கொண்டுவந்து இருப்பார். இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் வாகனங்களை காட்டிலும், இவ்வாறான வெளிநாட்டு வாகனங்கள் இறக்குமதி இன்னும் அதிக செலவை உண்டாக்கும்.

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான நிஸானின் விலையுயர்ந்த தயாரிப்பு வாகனங்களுள் பேட்ரோல் எஸ்யூவியும் ஒன்றாகும். இந்தியாவில் அவ்வளவாக பிரபலமானது இல்லை என்றாலும், மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளிலும், தெற்காசிய நாடுகளிலும் நிஸான் பேட்ரோல் பலரால் விரும்பி வாங்கப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் புல்லட் ஃப்ரூஃப் வாகனமாக மாற்ற நிறைய பேர் நிஸான் பேட்ரோலை தான் தேர்வு செய்கின்றனர்.

சல்மான் கான் வாங்கியுள்ள நிஸான் பேட்ரோல் வாகனத்தில் 5.6 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகப்பட்சமாக 405 எச்பி மற்றும் 560 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மேலும் இந்த வாகனத்தில் 4-சக்கர-டிரைவ் சிஸ்டமும் நிலையான தேர்வாக வழங்கப்படுகிறது.

சைலண்ட்டா... புல்லட் ஃப்ரூஃப் காரை வாங்கியுள்ள பிரபல நடிகர்!

1951ஆம் ஆண்டில் இருந்து பேட்ரோல் எஸ்யூவி வாகனங்களை நிஸான் உற்பத்தி செய்து வருகிறது என்றால், நம்ப முடிகிறதா? இந்த வாகனத்தின் 6ஆம் தலைமுறை தற்சமயம் பல வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ளது. தற்போதைய 6ஆம் தலைமுறை பேட்ரோல் கார் 2010ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டில் பேட்ரோலின் தோற்றத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த வாகனத்தின் அடையாளமே கம்பீரமான தோற்றம் மட்டுமின்றி, 5.1 மீட்டர் நீளமும் தான்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

5 மீட்டருக்கு அதிகமாக ஒரு கார் நீளத்தை கொண்டுள்ளது என்றாலே, அந்த கார் சாலையில் அனைவரது கவனத்தையும் கவரும் என்பது உறுதி. அதிலிலும் நமது இந்தியர்களில் பெரும்பாலானோர் நேரில் பேட்ரோல் வாகனத்தை பார்த்திருக்க மாட்டார்கள். ஆதலால், ரசிகர்களையும், மற்ற திரைப்பட கலைஞர்களையும் கவரும் வகையில் நிஸான் பேட்ரோல் வாகனத்தை சல்மான் கான் வாங்கியிருப்பது உண்மையில் ஸ்மார்ட்டான மூவ் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 6, 2023, 10:58 [IST]
English summary
Bollywood actor salman khan seen in new bulletproof nissan patrol suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+