பக்கத்து தெருவுக்கு கூட புல்லட் ப்ரூஃப் காரில் பயணிக்கும் பிரபல நடிகர்!! இவருக்கா இப்படியொரு நிலைமை...

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் அவரது புல்லட் ப்ரூஃப் நிஸான் பேட்ரோல் எஸ்யூவி (Nissan Patrol SUV) வாகனத்தில் புறப்பட்டு செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. அந்த வீடியோவையும், நடிகர் சல்மான் கானின் இந்த புல்லட் ப்ரூஃப் காரை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆதலால், சல்மான் கானுக்கு அறிமுகமே தேவையில்லை. அந்த அளவிற்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில் பல்வேறு ரசிகர்களை கொண்டிருப்பவர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடிகர் சல்மான் கானுக்கு ஓர் கொலை மிரட்டல் வந்தது.

salman khan in bulletproof car

பஞ்சாப்பை சேர்ந்த கேங்க்ஸ்டர் ஒருவர் நடிகர் சல்மான் கானை ஏப்ரல் 30ஆம் தேதி கொல்லவுள்ளதாக பகிரங்கமாக போலீசாரிடம் போன் வாயிலாக தெரிவித்தார். இந்த கொலை மிரட்டல் சம்பவம் இந்தியா முழுவதும் அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ஏப்ரல் 30ஆம் தேதிக்கு உள்ளாகவே கொலை மிரட்டல் விடுத்தவர்களில் சிலரை போலீஸார் கைது செய்துவிட்டனர். மீதி பேர் நாட்டை விட்டு தப்பித்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த கொலை மிரட்டல் அடுத்த சில நாட்களிலேயே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இருப்பினும், உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காக டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் ஒன்றையும், நிஸான் பேட்ரோல் கார் ஒன்றையும் புல்லட் ப்ரூஃப் உடன் நடிகர் சல்மான் கான் புதியதாக வாங்கினார். சமீப காலமாக பொது நிகழ்ச்சிகளுக்கு எங்கேயாவது செல்வதாக இருந்தால், இந்த இரு புல்லட் ப்ரூஃப் கார்களில் ஒன்றை தான் அவர் பயன்படுத்துகிறார்.

salman khan in bulletproof car

இந்த நிலையில், மும்பையில் பாந்த்ரா என்ற பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் தனது அடுத்த படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துக் கொண்ட சல்மான் கான் அங்கிருந்து புல்லட் ப்ரூஃப் கொண்ட நிஸான் பேட்ரோல் எஸ்யூவி காரில் புறப்பட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. கீழே செய்தியின் இறுதியில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பாக நிறைய பாடிகார்ட்கள் செல்வதை காணலாம்.

கொலை மிரட்டலுக்கு பின், சமீப காலமாக இவ்வாறு தான் மிகுந்த பாதுகாப்புடன் நடிகர் சல்மான் கான் பிற இடங்களுக்கு சென்று வருகிறார். காரில் பயணிக்கும்போது கூட, ரசிகர்களுக்கு முகம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை என முன் இருக்கைகளில் அமராமல் பின் இருக்கையில் அமர்ந்தப்படியே பயணம் செய்கிறார். நிஸான் பேட்ரோல் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது பக்கா ஜப்பானிய ஸ்டைல் எஸ்யூவி கார் ஆகும்.

salman khan in bulletproof car

அளவில் பெரியதாக இருக்கும் இந்த நிஸான் காரை புல்லட் ப்ரூஃப் உடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நடிகர் சல்மான் கான் இறக்குமதி செய்துள்ளார். ஏனெனில் இந்தியாவில் தற்சமயம் நிஸான் பேட்ரோல் எஸ்யூவி கார் விற்பனையில் இல்லை. துபாய், கத்தார், குவைத் போன்ற வளைகுடா நாடுகளிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் தான் இந்த நிஸான் எஸ்யூவி கார் பிரபலமானதாக விளங்குகிறது. அதாவது, நம் இந்திய மக்கள் நிஸான் பேட்ரோலை பெரியதாக கண்டுக் கொள்ளவில்லை.

இதனால்தான் பேட்ரோல் காரை இந்தியாவில் விற்பனையில் இருந்து நிஸான் நீக்கியது. அதிகப்படியான விலையும் இதற்கு ஒரு காரணம் என சொல்லலாம். நடிகர் சல்மான் கானின் நிஸான் பேட்ரோல் காரில் 5.6 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக 405 எச்பி மற்றும் 560 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது என்ஜினின் ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் மிக வலிமையான, பாதுகாப்பான கார் என்று பார்த்தால், அதில் நிஸான் பேட்ரோலும் ஒன்றாகும். படங்களில் பார்ப்பதை காட்டிலும், நேரில் பார்க்கும்போது இந்த நிஸான் எஸ்யூவி கார் நன்கு அளவில் பெரியதாக, பிரமாண்டமாக இருக்கும். இத்தகைய காரை புல்லட் ப்ரூஃப் உடன் பெற்றால், கிட்டத்தட்ட இராணுவ பீரங்கி வண்டியை போன்றதே. ஆதலால், இது நடிகர் சல்மான் கானின் பயத்தை குறைக்க மிக சரியான வாகனம் ஆகும்.

Article Published On: Wednesday, August 30, 2023, 11:47 [IST]
English summary
Bollywood actor salman khan spotted in bulletproof nissan patrol suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X