இந்தியாவில் புல்லட் ப்ரூஃப் காரில் வலம் வரும் இந்திய நடிகர்! அட பாவமே உள்ளூருலையே பதுங்கி பதுங்கி வாழுறாரே!

தன்னுடைய சொந்த ஊரிலேயே புல்லட் ப்ரூஃப் காரில் வலம் வரும் சோகம் ஓர் இந்திய நடிகருக்கு ஏற்பட்டு இருக்கின்றது. அவர் யார்? அவர் பயன்படுத்தும் புல்லட் ப்ரூஃப் காரின் சிறப்புகள் என்ன? என்ன காரணத்திற்காக அவர் புல்லட் ப்ரூஃப் காரை பயன்படுத்தி வருகின்றார்?, இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் சல்மான் கானும் ஒருவர் ஆவார். இவர் பாலிவுட் திரை உலகின் மிகப் பெரிய ஆக்டர்களில் ஒருவராகவும் காட்சியளிக்கின்றார். இந்த நபரே சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட காரில் வந்திறங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்தார்.

Salman khan bulletproof car

நடிகரின் இந்த செயல், இந்த நடிகருக்கு ஏன் இந்த நிலைமை என்கிற கேள்வியையே எழும்ப செய்திருக்கின்றது. அதிகப்படியான கொலை மிரட்டல்கள் நடிகர் சல்மான் கானுக்கு வந்துக் கொண்டிருப்பதே அவரின் இந்த நிலைமைக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்கூட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா என்பவரை சமூக விரோதிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.

இதுபோன்று சமூகத்தில் அந்தஸ்து மிக்க ஒரு சிலர் நாட்டில் துப்பாக்கிக்கு தொடர்ச்சியாக இரையாகிய வண்ணம் இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே நடிகர் சல்மானுக்கு நாள்தோறும் கொலை மிரட்டல்கள் அதிகரித்த வண்ணம் இருந்திருக்கின்றது. இந்த நிலையே அவரை புல்லட் ப்ரூஃப் கார் பயன்பாட்டிற்கு தள்ளி இருக்கின்றது.

சல்மான் மிக பயன்படுத்தி இருப்பது நிஸான் பேட்ரோல் (Nissan Patrol) புல்லட் ப்ரூஃப் காராகும். இந்த காரை அவர் சமீபத்திலேயே வாங்கினார். முன்னதாக அவர் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 200 (Toyota Land Cruiser LC200) புல்லட் ப்ரூஃப் காரை அவர் பயன்படுத்தி வந்தார். இந்த காரையே அவர் ரீ-பிளேஸ் செய்து தற்போது நிஸான் பேட்ரோல் புல்லட் ப்ரூஃப் கார் பயன்பாட்டிற்கு மாறி இருக்கின்றார்.

இந்த கார் மட்டுமில்லைங்க அவருடைய பாதுகாப்பு பணியில் மும்பை நகர காவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் சேர்த்து அவருடைய தனிப்பட்ட பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்பு வளையமும் அவருக்கு ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்தனை பாதுகாப்பு படை சூழவே அவர் மும்பை பிரைவேட் விமான முனையத்திற்கு நிஸான் பேட்ரோல் காரில் வந்திருக்கின்றார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. சல்மான் கான் இந்த காரை பிரத்யேகமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து களமிறக்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. உலக அளவில் மிகவும் ஃபேமஸான காராக நிஸான் பேட்ரோல் இருக்கின்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை.

குறிப்பாக, இந்த காருக்கு வளைகுடா நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில் புல்லட் ப்ரூஃப் வசதியை நிஸான் வழங்குவதனாலேயே பலரின் விருப்பமான தேர்வாக அக்கார் இருக்கின்றது. அதுதவிர, அதிக சொகுசு அம்சங்களையும் இந்த கார் தனக்குள் மிக அதிகளவில் தாங்கி இருக்கின்றது.

ஆகையால், ஒரே நேரத்தில் பாதுகாப்பு மற்றும் லக்சூரி ரைடு ஆகிய இரண்டையும் வழங்கும் காராக நிஸான் பேட்ரோல் காட்சியளிக்கின்றது. இந்த காரணத்தினாலேயே இந்தியாவிலும் இந்த காருக்கு ரசிகர்கள் அதிகரித்துக் காணப்படுகின்றனர். இது ஓர் அதி திறன்மிக்க காரும்கூட, சல்மான் கான் பயன்படுத்தி வரும் நிஸான் பேட்ரோல் காரில் 5.6 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 405 எச்பி பவரையும், 560 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 வீல்கள் இயங்கும் திறன் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த கார் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, உலக சந்தையில் 4.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனும் இந்த காருக்கு வழங்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சல்மான் கானைப் போலவே இன்னும் பலர் சொந்த ஊரிலேயே பெரும் பாதுகாப்பு படைசூழ வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். தொழிலதிபர்கள் தொடங்கி சில லோக்கல் கவுன்சிலர்கள்கூட தங்களுடைய பாதுகாப்பு குண்டர்களுடன் வலம் வந்த வண்ணம் இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.

Article Published On: Wednesday, October 4, 2023, 10:53 [IST]
English summary
Bollywood actor salman khan uses bulletproof nissan patrol car here is video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+