பாலிவுட் அரசன் சல்மான்கான் கார் மற்றும் பைக் கலெக்ஷன்!
குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், 13 ஆண்டுகளுக்கு பின்னர் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை மிக தாமதமாக வழங்கப்பட்டாலும், இதனை பலரும் வரவேற்றுள்ளனர். 1,200 கோடி சொத்து மதிப்புடைய நடிகர் சல்மான்கானுக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனை, குடிபோதையில் கார் ஓட்டும் ஒவ்வொருக்கும் ஒரு பாடமாக அமையும்.
ஆயிரம் கோடியை தாண்டிய சொத்து மதிப்புடைய சல்லு என்று செல்லமாக அழைக்கப்படும் சல்மானுக்கு கார் மற்றும் பைக்குகள் என்றால் கொள்ளை பிரியம். வாழ்க்கைத் துணை இல்லாத குறையை அவரது கார்களும், பைக்குகளுமே தீர்த்து வைக்கின்றன. அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டிருப்பதால், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, அவரது வாகனங்களும் சோகமே உருவாக நிற்கின்றன. வாருங்கள், அவரது கார் கராஜிற்கு ஒரு விசிட் அடிக்கலாம்.

01. டொயோட்டா லேண்ட்க்ரூஸர்
குடிபோதையில் சல்மான்கான் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளான கார் மாடல் டொயோட்டா லேண்ட் க்ரூஸர். இந்த எஸ்யூவியால்தான் ஒரு உயிர் பறிக்கப்பட்டதுடன், 4 பேர் காயமடைந்தனர். இந்த எஸ்யூவி தற்போது சல்மான் கராஜில் இல்லை. பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்போது, இதனை ரூ லட்சத்தில் வாங்கினாராம்.

02. ஆடி கார்கள்
சல்மான்கானிடம் 3 ஆடி கார்கள் உள்ளன. அதில், ஒன்று ரூ.1.4 கோடி மதிப்புடயை ஆடி ஆர்8 கார் ஒன்று உள்ளது. அதிசக்திவாய்ந்த இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 542 பிஎச்பி பவரை அளிக்கக்கூடிய வல்லமை கொண்டது. அதிகபட்சமாக 301 கிமீ வேகம் வரை தொடக்கூடியது. ஆனால், இந்தியாவில் இதன் டாப் ஸ்பீடு கட்டுப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

03. ஆடி ஆர்எஸ்7
ரூ.1.28 கோடி மதிப்புடைய ஆடி ஆர்எஸ்7 காரும் கராஜில் அடக்கம். இது ஆடி ஏ7 காரின் ஆர்எஸ் பேட்ஜில் வரும் அதிசக்திவாய்ந்த வெர்ஷன். இந்த காரில் 560பிஎச்பி பவரை அளிக்கக்கூடிய 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 250 கிமீ வேகம் வரை தொடக்கூடிய வல்லமை கொண்டது.

04. பரிசாக வந்த ஆடி
பாடிகார்டு படத்திற்காக பரிசாக வழங்கப்பட்ட ஆடி க்யூ7 எஸ்யூவியும் சல்மான்கான் கராஜில் இருக்கிறது. இந்த கார் இல்லாத முன்னணி சினிமா நட்சத்திரங்களே இல்லை எனும் அளவுக்கு பிரபலமான மாடல்.

05. பிஎம்டபிள்யூ மாடல்கள்
சல்மான்கானிடம் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மற்றும் எக்ஸ்6 ஆகிய க்ராஸ்ஓவர் வகை சொகுசு கார்கள் உள்ளன. இவற்றை அப்போது ரூ.50 லட்சத்தை ஒட்டிய விலையில் இவர் வாங்கியதாக கூறப்படுகிறது. பிரத்யேகமான டிசைன் அனைவரையும் கவரும்.

06. லெக்சஸ் எல்எக்ஸ்570
ரூ.52 லட்சம் மதிப்புடைய லெக்சஸ் எல்எக்ஸ்570 சொகுசு எஸ்யூவி ஒன்றையும் இறக்குமதி செய்து வாங்கி வைத்துள்ளார் சல்மான்கான். டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு பிராண்டான லெக்சஸ் பாலிவுட் நட்சத்திரங்களின் பலரின் சக்சஸ் பிராண்டாக இருந்து வருகிறது.

07. பென்ஸ் கார்
உலகிலேயே சிறந்த சொகுசு காராக புகழப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கார் மாடலும் சல்மானிடம் உள்ளது. இந்த காரை ரூ.1.5 கோடி மதிப்பில் வாங்கினாராம். மிகச்சிறந்த இடவசதி, சொகுசு அம்சங்களையும், நவீன தொழில்நுட்ப வசதிகளையும் அளிக்கும் மாடல் இது.

08. லேண்ட்ரோவர் எஸ்யூவி
சல்மான்கானிடம் லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி ஒன்றையும் வைத்திருக்கிறார். இது ரூ.2 கோடி மதிப்பு கொண்டது. இந்த எஸ்யூவி ரிப்பேரானாதாக கூறி, சில ஆண்டுகளுக்கு முன் டிவிட்டரில் லேண்ட்ரோவரை போட்டு சல்மான்கான் வறுத்தெடுத்தது நினைவிருக்கலாம்.

09. பைக் மாடல்கள்
சல்மான்கான் சுஸுகி பைக் பிரியர். மேலும், அந்த பிரியம் காரணமாகவே அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் இருக்கிறார். சல்மான்கானிடம் ரூ.13.75 லட்சம் மதிப்புடைய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உள்ளது.

10. சுஸுகி இன்ட்ரூடர்
ரூ.15 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட சுஸுகி இன்ட்ரூடர் எம்1800 ஆர்இசட் சூப்பர் பைக் ஒன்றும் சல்மான்கானிடம் உண்டு.

11. இன்னொரு சூப்பர் பைக்
சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- ஆர் 1000இசட் பைக் மாடல் ஒன்றும் உள்ளது. இது ரூ.16 லட்சம் மதிப்புடையது.

12 யமஹா ஆர்1
சல்மான்கானிடம் யமஹா ஆர்1 பைக் ஒன்றும் உள்ளது. இந்த பைக்கை ரூ.14 லட்சத்தில் அப்போது வாங்கினாராம்.



Click it and Unblock the Notifications








