உல்லாச கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

பிரபல மனிதர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உல்லாச கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஷாகித் கபூர் (Shahid Kapoor). இவர் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு மிகவும் விலை உயர்ந்த புத்தம் புதிய கார் ஒன்றை ஷாகித் கபூர் வாங்கியுள்ளார். ஷாகித் கபூர் வாங்கியிருப்பது மெர்சிடிஸ்-மேபெக் எஸ்580 சலூன் (Mercedes-Maybach S580 saloon) ஆகும்.

உல்லாச கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

மெர்சிடிஸ்-மேபெக் எஸ்-க்ளாஸ் காரை ஷாகித் கபூர் சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தார். அதை தொடர்ந்து தற்போது இந்த புதிய காரை அவர் வாங்கியுள்ளார். இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை ஷாகித் கபூர் வாங்கியுள்ளார். இது வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உல்லாச கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

நாங்கள் ஏற்கனவே கூறியபடி மெர்சிடிஸ் மேபெக் எஸ்580 வேரியண்ட்டை ஷாகித் கபூர் வாங்கியுள்ளார். இது இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலையே 2.50 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்-ரோடு விலை கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக வரும். இதுதவிர எஸ்680 (S680) வேரியண்ட்டையும் மெர்சிடிஸ் மேபெக் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

உல்லாச கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

இதன் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 3.20 கோடி ரூபாய் ஆகும். இந்த வேரியண்ட் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாகவும் எஸ்680 வேரியண்ட்டின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இருப்பினும் 2023ம் ஆண்டு வரை எஸ்680 வேரியண்ட் விற்று தீர்ந்து விட்டதாக மெர்சிடிஸ் மேபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உல்லாச கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

இந்த நிறுவனம் இந்திய சந்தைக்கென குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே எஸ்680 வேரியண்ட்டை இறக்குமதி செய்கிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால், எஸ்680 வேரியண்ட்டையும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய திட்டமிட்டிருப்பதாக மெர்சிடிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

உல்லாச கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

புனேவிற்கு அருகே உள்ள சஹான் தொழிற்சாலையில் அசெம்பிள் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் கார் மிகவும் சொகுசானது. ஸ்டாண்டர்டு எஸ்-க்ளாஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மேபெக் எஸ்-க்ளாஸ் 180 மிமீ நீளமான வீல்பேஸை பெற்றுள்ளது.

உல்லாச கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

இதன் காரணமாக பயணிகளுக்கு சொகுசான பயணம் கிடைக்கும். இந்த காரின் நீளம் சுமார் 5.5 மீட்டர்கள் ஆகும். எனவே மிகவும் நீளமான கார்களில் ஒன்றாக இது உள்ளது. பொதுவாக சாதாரண கார்கள் வேகமாக செல்லும்போது, டயர் சத்தம் கேட்கும். ஆனால் இந்த காரின் கேபின் மிகவும் அமைதியாக இருக்கும். இந்த காரில் 19 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உல்லாச கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

ஆனால் இந்த காரின் வீல்களை 20 அல்லது 21 இன்ச்களாக அதிகரித்து கொள்ளும் வாய்ப்பையும் மெர்சிடிஸ் மேபெக் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த காரில் பயணிகளுக்கு மசாஜ் வசதியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மெர்சிடிஸ் மேபெக் எஸ்580 வேரியண்ட்டில், 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

உல்லாச கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

அத்துடன் 48 வோல்ட்ஸ் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. இது ஒருங்கிணைந்து 496 பிஹெச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு விலை உயர்ந்த காரைதான் ஷாகித் கபூர் தற்போது வாங்கியுள்ளார்.

உல்லாச கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய பிரபல மனிதர்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது!

ஷாகித் கபூரிடம் ஏற்கனவே மிகவும் விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது இந்த காரும் இணைந்துள்ளது. பொதுவாக நடிகர், நடிகைகள், திரைப்பட இயக்குனர்கள் போன்றவர்கள் விலை உயர்ந்த கார்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக பாலிவுட் திரையுலகை சேர்ந்த பலரும் விலை உயர்ந்த கார்களை வாங்குவது தொடர்பான செய்திகள் தற்போது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக மாறி விட்டன.

More from DriveSpark

Article Published On: Friday, April 1, 2022, 19:45 [IST]
English summary
Bollywood actor shahid kapoor buys mercedes maybach s580 details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+