பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சாதாரண காரில் வலம் வரப்போகும் பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும், பிரபல நடிகர் ஒருவர் நம்மை போல் சாதாரண காரில் வலம் வரவுள்ளார்.

பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சாதாரண காரில் வலம் வரப்போகும் பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ஷாருக்கான், ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக இருந்து வருகிறார். புத்தம் புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி ரக காரை, 2020 ஆட்டோ எக்ஸ்போவில் ஷாருக்கான்தான் வெளியிட்டார். 2020 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவானது, கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சாதாரண காரில் வலம் வரப்போகும் பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

இந்த சூழலில், புதிய ஹூண்டாய் கிரெட்டா கார் இந்திய மார்க்கெட்டில் நேற்று முன் தினம் (மார்ச் 16ம் தேதி) முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. லான்ச் செய்யப்பட்ட உடனே, ஹூண்டாய் இந்தியா நிர்வாகம் தரப்பில், ஷாருக்கானுக்கு ஒரு கிரெட்டா கார் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.

பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சாதாரண காரில் வலம் வரப்போகும் பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

ஆனால் ஷாருக்கான் பெற்றுள்ளது எந்த வேரியண்ட்? என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் மேட் பிளாக் ரூஃப் ரெயில்கள் மற்றும் க்ரில் அமைப்பில் பிளாக் க்ரோம் இருப்பது படத்தின் மூலமாக தெரியவருகிறது. இதனை வைத்து பார்க்கையில், இது ஹூண்டாய் கிரெட்டா காரின் டிசிடி வெர்ஷனாக இருக்கலாம் என தெரிகிறது.

பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சாதாரண காரில் வலம் வரப்போகும் பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

ஏனெனில் இந்த சிறப்பம்சங்கள் எல்லாம் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி ரக காரின் டிசிடி வெர்ஷனில்தான் பிரத்யேகமாக வழங்கப்படுகின்றன. அத்துடன் இது டாப் எண்ட் எஸ்எக்ஸ்(ஓ) வேரியண்ட்டாக இருக்கலாம் எனவும் தெரிகிறது. டாப் எண்ட் வேரியண்ட்டில், ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளது.

பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சாதாரண காரில் வலம் வரப்போகும் பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

இந்திய மார்க்கெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் ஹூண்டாய் கிரெட்டா கார் கிடைக்கிறது. புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரின் விலை 9.9 லட்ச ரூபாயில் (எக்ஸ் ஷோரூம், இந்தியா) இருந்து தொடங்குகிறது. இந்த காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சாதாரண காரில் வலம் வரப்போகும் பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

இதில், டிசிடி ட்யூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனானது, ஹூண்டாய் கிரெட்டா காரின் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு வெர்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. நடிகர் ஷாருக்கானுக்கு ஹூண்டாய் இந்தியா நிறுவனம் பரிசாக வழங்கியதாக கருதப்படும் டாப் எண்ட் வெர்ஷனின் விலை 17.2 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) ஆகும்.

பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சாதாரண காரில் வலம் வரப்போகும் பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

இந்த வேரியண்ட்டில், சக்தி வாய்ந்த 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் இதனுடன் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் ஆப்ஷன் உடன் மேனுவல் வெர்ஷன் கிடையாது.

பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சாதாரண காரில் வலம் வரப்போகும் பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

மற்ற இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களில் ஒன்றான 1.5 லிட்டர் பெட்ரோல் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே சமயம் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. புத்தம் புதிய ஹூண்டாய் கிரெட்டா கார் ஸ்போர்ட்டியான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சாதாரண காரில் வலம் வரப்போகும் பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

ஹூண்டாய் கிரெட்டா காரின் கேபினில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளுடன் புதிய 10.24 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்டெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்மார்ட் வாட்ச்சையும் ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது. காரை கட்டுப்படுத்த இந்த ஸ்மார்ட் வாட்ச்சை பயன்படுத்த முடியும்.

பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சாதாரண காரில் வலம் வரப்போகும் பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

ஹூண்டாய் கிரெட்டா காரின் டாப் எண்ட் வெர்ஷனில், பனரோமிக் சன் ரூஃப், போஸ் 8 ஸ்பீக்கர் சிஸ்டம், ஏர் பியூரிஃபையர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், சூப்பர் க்ளஸ்ட்டர் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்ப்ளே மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹூண்டாய் கிரெட்டா அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சாதாரண காரில் வலம் வரப்போகும் பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

இந்த சூழலில், பரிசாக கிடைத்த புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரில் நடிகர் ஷாருக்கான் வலம் வருவதை பார்க்க அவரது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். நமக்காக அதனை ஷாருக்கான் வெகு விரைவில் நிறைவேற்றுவார் என நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 18, 2020, 12:16 [IST]
English summary
Bollywood Actor Shahrukh Khan’s Latest Ride Is The All-New Hyundai Creta Worth 17.2 Lakhs. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+