Just In
- 1 hr ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 2 hrs ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 3 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 3 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- News
திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின்
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபலம்... இவர் நடிகர் மட்டுமல்ல... யார்னு கண்டுபிடிங்க பாக்கலாம்
முன்னணி நடிகர் ஒருவர் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுனில் ஷெட்டி (Suniel Shetty) மிகச்சிறந்த பாலிவுட் நடிகர் மட்டும் கிடையாது. தயாரிப்பாளர், தொழில் அதிபர் என அவருக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. இந்திய சினிமா துறையில் 25 வருடங்களுக்கும் மேலாக சுனில் ஷெட்டி நீடித்து வருகிறார். இந்த மகத்தான பயணத்தில், 110 படங்களுக்கும் மேல் அவர் நடித்திருக்கிறார்.

கடின உழைப்பு நிச்சயமாக அதற்குரிய பலனை ஒருவருக்கு வழங்கும். சுனில் ஷெட்டி விஷயத்திலும் அது நிஜமாகியுள்ளது. சுனில் ஷெட்டியின் கராஜ் அதற்கு ஒரு சாட்சி மட்டும்தான். அவரது கராஜில் பல விலை உயர்ந்த மற்றும் கவர்ச்சிகரமான கார்கள் இருக்கின்றன. இந்த சூழலில் தற்போது புதிய கார் ஒன்றை பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தனது கராஜில் இணைத்துள்ளார். இது ஒரு சொகுசு எஸ்யூவி.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி (BMW X5 SUV) காரைதான் சுனில் ஷெட்டி தற்போது வாங்கியுள்ளார். பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரின் விலை 74.9 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது ஆரம்ப நிலை வேரியண்ட்டான எக்ஸ்டிரைவ் 30டி ஸ்போர்ட்டின் (xDrive 30d Sport) விலையாகும். டாப் வேரியண்ட்டான எக்ஸ்டிரைவ் 40ஐ எம் ஸ்போர்ட்டின் (xDrive 40i M Sport) விலை 84.4 லட்ச ரூபாய்.

இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரில் அட்டகாசமான வசதிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. சுனில் ஷெட்டியிடம் இருப்பதிலேயே அதிக வசதிகள் நிறைந்த கார்களில் ஒன்றாக புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியை குறிப்பிடலாம். அந்த அளவிற்கு ஏராளமான வசதிகளை இந்த கார் தன்னகத்தே கொண்டுள்ளது.

இதில், 12.3 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஐடிரைவ் உடன் 12.3 இன்ச் ஹெச்டி இன்போடெயின்மெண்ட் டச்ஸ்க்ரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் 3டி மேப், 4-ஜோன் ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் பனரோமின் சன்ரூஃப் ஆகியவற்றை முக்கியமானதாக குறிப்பிடலாம். இதுதவிர இன்னும் ஏராளமான வசதிகளை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி பெற்றுள்ளது.

அத்துடன் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியில், பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், கார்னரிங் பிரேக் கண்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் டெசண்ட் கண்ட்ரோல் மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் ஆகிய வசதிகளை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சொகுசு எஸ்யூவி பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், முதலாவது இன்ஜின் 3.0 லிட்டர் இன்லைன்-6 பெட்ரோல் யூனிட் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 340 பிஎஸ் பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 3.0 லிட்டர் இன்லைன்-6 டீசல் இன்ஜின் தேர்வும் இந்த எஸ்யூவியில் வழங்கப்படுகிறது.

இந்த இன்ஜின் 265 பிஎஸ் பவர் மற்றும் 620 என்எம் டார்க் திறனை வாரி வழங்க கூடியது. இந்திய சந்தையில், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ (Mercedes-Benz GLE), ஆடி க்யூ7 (Audi Q7), வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி (Land Rover Discovery) உள்ளிட்ட கார்களுக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கடும் போட்டியை வழங்கி வருகிறது.