சொகுசா இருக்கும்... சூப்பரான லேண்ட் ரோவர் காரை வாங்கிய பிரபல நடிகர்... இவரை உங்களுக்கு யார்னு தெரியுதா?
பிரபல நடிகர் ஒருவர் சூப்பரான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சன்னி தியோல் (Sunny Deol). இவர் தற்போது மிகவும் விலை உயர்ந்த புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வாங்கியிருப்பது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 (Land Rover Defender 110) ஆகும். இது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் 5-டோர் வெர்ஷன் (Five-door Version) என்பது குறிப்பிடத்தக்கது.

சன்னி தியோல் வெள்ளை நிறத்தில், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 காரை வாங்கியுள்ளார். இந்த காருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. சன்னி தியோலின் ரசிகர்களும், கார் ஆர்வலர்கள் பலரும் இந்த புகைப்படங்களை ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். இங்கே குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் உள்ளது.

சன்னி தியோல் குடும்பத்தினர், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர்களை விரும்ப கூடியவர்கள். அவர்களிடம் வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த பல்வேறு மாடல்கள் இருக்கின்றன. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரானது, மிகவும் பிரபலமான பிரீமியம் லைஃப்-ஸ்டைல் சொகுசு எஸ்யூவி கார் ஆகும். ஆஃப்-ரோடுகளில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சாகசம் செய்யும். அதே நேரத்தில் உட்புறத்தில் சொகுசாகவும் இருக்கும்.

2 பாடி ஸ்டைல்களில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் கிடைக்கிறது. இதில் 3 டோர் வெர்ஷன், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 (Land Rover Defender 90) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில் 5 டோர் வெர்ஷன், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில், 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என ஒட்டுமொத்தமாக 3 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 300 பிஎஸ் பவரை உருவாக்க கூடியது. மற்றொரு பெட்ரோல் இன்ஜின், 3.0 லிட்டர் டர்போ யூனிட் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 400 பிஎஸ் பவரை உருவாக்க கூடியது. மறுபக்கம் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் வழங்கப்படும் ஒரே ஒரு டீசல் இன்ஜின், 3.0 லிட்டர் யூனிட் ஆகும்.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 300 பிஎஸ் பவரை உருவாக்கும். இந்த அனைத்து இன்ஜின்களுடனும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், சன்னி தியோல் குடும்பத்தினரிடம் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களும், கிளாசிக் கார்களும் ஏராளமாக இருக்கின்றன.

இதில், மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்எல்500 (Mercedes-Benz SL500), புதிய தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் (New Generation Mercedes-Benz S-Class) போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதுதவிர போர்ஷே 911 (Porsche 911) மற்றும் போர்ஷே கேயென் (Porsche Cayenne) போன்ற கார்களும் சன்னி தியோல் குடும்பத்தினரிடம் இருக்கின்றன.

ஹூண்டாய் சாண்டா ஃபீ (Hyundai Santa Fe), ஆடி க்யூ5 (Audi Q5) மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் எம்எல் க்ளாஸ் (Mercedes-Benz ML-Class) போன்ற கார்களும் சன்னி தியோல் குடும்பத்தினர் வைத்திருக்கும் கார்களில் முக்கியமானவையாகும். சன்னி தியோல் குடும்பத்தினரிடம் இருக்கும் கார்களின் பட்டியல் அனுமார் வால் போல் இன்னும் நீண்டு கொண்டே செல்லும்.

ஏனெனில் பஜீரோ எஸ்எஃப்எக்ஸ் (Pajero SFX), பிஎம்டபிள்யூ எக்ஸ்6 (BMW X6) மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) போன்ற கார்களையும் சன்னி தியோல் குடும்பத்தினர் வைத்துள்ளனர். சன்னி தியோலின் குடும்பம் மிகப்பெரியது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதற்கு ஏற்றபடி அவர்களிடம் இருக்கும் கார்களின் பட்டியலும் மிகப்பெரியதாக உள்ளது.

பொதுவாகவே பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் போன்றவர்கள் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி குவிப்பது வாடிக்கையான ஒன்றுதான். சன்னி தியோல் குடும்பத்தினரும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. அவர்களிடம் இருக்கும் மிகவும் விலை உயர்ந்த கார்களே இதற்கு சாட்சி.


Click it and Unblock the Notifications