'12 ஆவது ஃபெயில்'.. வச்சிருக்க கார், பைக்கோட விலையை கேட்டீங்கனா மண்டையே பிச்சுக்கும்!..

'12-ஆவது ஃபெயில்' என்ற உடன் 12 ஆம் வகுப்பில் தோல்வியுற்றவர் என நினைத்துக் கொள்ள வேண்டாம். விக்ராந்த் மேஸ்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய இந்தி திரைப்படம்தான் அது. பல படங்களில் இவர் நடித்திருந்தாலும், இந்த படமே அவரை பலரும் அறியக் கூடிய நபராக மாற்றியது. அந்த அளவிற்கே இந்த இந்தி படத்திற்கு நாடு தழுவிய அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்த மாதிரியான சூழலிலேயே இவர் திரைத் துறையை விட்டு விலகுவதாக அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார்.

பலரும் சினிமாவில் நுழைந்துவிட முடியாதா என மிகுந்த கனவுடன் காத்துக் கொண்டிருக்கையில், விக்ராந்த மேஸ்ஸி-யே வித்தியாசமாகவும், துணிச்சலாகவும் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கின்றார். தன்னுடைய இந்த முடிவை அவர் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. பாலிவுட் திரை உலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக பரவலாக பலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலேயே அதிர்ச்சி முடிவை அவர் எடுத்திருக்கின்றார், விக்ராந்த் மேஸ்ஸி.

Vikrant massey impressive luxury cars and bikes collection

திரை துறையை விட்டு விலகினாலும் அவர் ராஜ வாழ்க்கையையே வாழ்வார் என தெரிகின்றது. இதற்கு சான்றாக அவருடைய கார்களைக் கூறலாம். ஆமாங்க, இந்த பதிவில் விக்ராந்த் மேஸ்ஸி என்ன மாதிரியான ஆடம்பர வகை வாகனங்களை பயன்படுத்தி வருகின்றார் என்பது பற்றிய தகவலையே பார்க்க இருக்கின்றோம். அவரிடத்தில் விலை உயர்ந்த கார் மாடல்கள் மட்டுமல்ல பைக்குகளும் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றையே பார்க்க உள்ளோம். வாங்க பதிவிற்குள் போகலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes-Benz GLS): விக்ராந்த் மேஸ்ஸி பயன்படுத்தி வரும் மிகவும் காஸ்ட்லியான பைக் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இதன் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பே ரூ. 1.16 கோடிக்கும் அதிகம் ஆகும். இது ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் பணக்காரர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரின் பிரியமான கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது.

வால்வோ எஸ் 90 (Volvo S90): பென்ஸ் கார் மாடலுக்கு அடுத்தபடியாக விக்ராந்த் வைத்திருக்கும் மற்றுமொரு விலை உயர்ந்த ஆடம்பர கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இதன் மதிப்பு ரூ.60 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த செடான் ரக கார் மாடல் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆடம்பரமான பயணத்தை வழங்குவதில் மட்டுமல்ல அதீத பாதுகாப்பை வழங்குவதிலும் இந்த கார் மாடல் கை தேர்ந்த ஒன்றாகக் காட்சியளிக்கின்றது.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Swift Dzire): நடிகர் விக்ராந்த் ஆடம்பர கார்களை மட்டுமில்லைங்க சில எளிமையான வாகனங்களையும் பயன்படுத்தி வருகின்றார். அந்தவகையில் அவர் மிகவும் எளிமையான கார் மாடலான டிசையரையும் பயன்படுத்தி வருகின்றார். இதன் மதிப்பு ரூ. 8 லட்சம் ஆகும். அவருடைய வசதிக்கு இது மிகவும் எளிமையான கார் மாடல் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தன்னுடைய தினசரி பயன்பாட்டிற்காகவே இந்த காரை அவர் பயன்படுத்தி வருகின்றார்.

டுகாட்டி மான்ஸ்டர் (Ducati Monster): மிகவும் எளிமையான டிசையர் காரை பயன்படுத்தி வரும் இந்த நடிகர்தான் டுகாட்டி மான்ஸ்டர் எனும் மிக மிக காஸ்ட்லியான பைக் மாடலை பயன்படுத்தி வருகின்றார். இந்த பைக்கின் மதிப்பு ரூ. 12 லட்சத்திற்கும் அதிகம் என்பது கவனிக்கத்தகுந்தது. பைக்கின் மீது கொண்டிருக்கும் அதீத காதலின் காரணமாக இந்த அட்வான்ஸ்டு அம்சங்கள் மற்றும் அதீத ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட பைக்கை அவர் பயன்படுத்தி வருகின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற நடிகர்களிடம் இருந்து விக்ராந்த மேஸ்ஸி மாறுபட்டுக் காட்சியளிக்கின்றார். மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே அவர் கார்களை பயன்படுத்தி வருகின்றார். குறிப்பாக, டிசையர் கார் மாடலை அவர் பயன்படுத்தி வருவது ஆச்சரியமளிக்கும் விதமாக உள்ளது. விக்ராந்த் மேஸ்ஸி மிகவும் எளிமையான ஓர் நபர் என்பதற்கு சான்றாக இந்த கார் மாடல் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 15, 2024, 19:07 [IST]
English summary
Bollywood actor vikrant massey impressive luxury cars and bikes collection
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+