2 கல்யாணம் பண்ணி ரெண்டு பேரயும் விவாகரத்து பண்ணன நடிகையா இது! தீபாவளிக்கு வாங்கன சொகுசு கார்ல சந்தோஷமா போறாங்க
இந்தியாவில் ஆடி (Audi) நிறுவனத்தின் கார்களுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ஆடி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் அதிக சொகுசு கார்களை (Luxury Cars) விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக ஆடி திகழ்கிறது. ஆடி நிறுவனத்தின் கார்களை பொறுத்தவரையில், அதன் ஏ6 (Audi A6) கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆடி ஏ6 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 65.72 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 72.06 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஷாருக்கான் (Shah Rukh Khan) மற்றும் அலியா பட் (Alia Bhatt) போன்ற நடிகர், நடிகைகளிடம் எல்லாம் ஆடி ஏ6 கார் இருக்கிறது. இந்த வரிசையில் சஹத் கன்னாவும் (Chahatt Khanna) ஆடி ஏ6 காரை வைத்துள்ளார். இவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆவார்.
கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆடி ஏ6 காரை சஹத் கன்னா வாங்கினார். இவருக்கு தற்போது வரை 2 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் அவை இரண்டுமே விவாகரத்தில்தான் முடிந்துள்ளன. இருப்பினும் ஃபிட்னஸில் சஹத் கன்னா தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

எனவே மும்பையில் உள்ள ஜிம்களில் அவரை அடிக்கடி பார்க்க முடியும். இந்த சூழலில் அவரது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், சஹத் கன்னா அவரது ஆடி ஏ6 காரில் ஏறுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
முன்னதாக அவர் கட்டிடம் ஒன்றின் உள்ளே இருந்து வெளியே வருகிறார். பின்னர் முகத்தில் புன்னகையுடன், அங்கிருந்தவர்களுக்கு போட்டோவிற்கு அவர் போஸ் கொடுக்கவும் செய்தார். அனேகமாக அவர் ஜிம்மில் இருந்து வெளியே வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. உடைகளை பார்த்தால், அப்படிதான் தெரிகிறது. சரி, அவரது ஆடி ஏ6 காரை பற்றிய விஷயங்களுக்கு வருவோம். தற்போதைய நிலையில் இந்த கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவை ஏ6 45 டிஎஃப்எஸ்ஐ பிரீமியம் ப்ளஸ் (A6 45 TFSI Premium Plus) மற்றும் ஏ6 45 டிஎஃப்எஸ்ஐ டெக்னாலஜி (A6 45 TFSI Technology) ஆகியவை ஆகும். இந்த 2 வேரியண்ட்களிலும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 265 பிஎஸ் பவர் மற்றும் 370 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. வசதிகளை (Features) பொறுத்தவரையில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் உடன் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமானவையாக உள்ளன.
இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், மல்டி கலர் ஆம்பியண்ட் லைட்டிங், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள் உள்ளிட்ட வசதிகளும், ஆடி ஏ6 காரில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class) ஆகிய கார்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஆடி ஏ6 சொகுசு செடான் கார் திகழ்கிறது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








