ஒரு கோடி ரூபாக்கு இந்த காரையா அவங்க வாங்கினாங்க? இந்த நடிகை யாருனு தெரியுதா? நிச்சயம் நினைவிருக்க வாய்ப்பில்ல!
கௌஹர் கான், நம்மில் பலரால் அறியப்படாத ஓர் பாலிவுட் நடிகையே இவர் ஆவார். இந்தியில் எண்ணற்ற திரைப்படங்களில் அவர் நடித்து இருக்கின்றார். இத்துடன் சில டிவி ஷோக்களிலும் அவர் பணியாற்றி இருக்கின்றார். மிகவும் புகழ் பெற்ற மாடலாகவும் இவர் வலம் வந்திருக்கின்றார்.
மிக முக்கியமாக 2022 இல் மிகவும், அதாவது, அவருடைய 18 வயதில் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்து 'மிஸ் டேலண்டட்' பட்டத்தை வென்றார். இதற்கு பின்னரும் பல்வேறு மிஸ் இன்டர்நேஷனல் போட்டியில் அவர் பங்கேற்றிருக்கின்றனர்.

இத்தகைய பெரும் பிரபலமே கௌஹர் கான் ஆவார். இவரே தற்போது 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார். இந்தி நடிகை வாங்கி இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு கார் மாடல் ஆகும்.
லக்சூரி அம்சங்களை மிகவும் தாராளமாகக் கொண்டு பென்ஸ் தயாரிப்பு இதுவாகும். இதனால்தான் இந்த கார் மாடலுக்கு இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மிக முக்கியமாக பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகர்களின் ஃபேவரிட் கார் மாடலாகவும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ லக்சூரி கார் காட்சியளிக்கின்றது.

இந்த காரையே கௌஹர் கான் தற்போது டெலிவரி பெற்றிருக்கின்றார். நடிகையின் கார் கொள்முதல் பற்றிய தகவல் தற்போது இணையத்தின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. அவர் காரை அவருடைய கணவருடன் சென்று டெலிவரி பெற்றிருக்கின்றார். மேலும், பென்ஸ் ஜிஎல்இ காரை திரையில் இருந்து வெளிக்காட்டுவதற்கு முன்னர், சிறிய பென்ஸ் குழுந்தைகளுக்கான காரை அவர் திரையில் இருந்து வெளிக்காட்டினார்.
இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. நடிகை வாங்கி இருக்கும் இந்த கார் சமீபத்திலேயே ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாக இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. புதுப்பித்தலின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்களையும் சிறப்புகளையும் இந்த காரில் பென்ஸ் சேர்த்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Source: autohangar அந்தவகையில், காரின் கவர்ச்சி தோற்றத்தை மெருகேற்றும் வகையில் குரோம் ஃப்னிஷ்டு ஸ்கிட் பிளேட், பெரிய பென்ஸ் லோகோ கொண்ட பெரிய கிரில் ஆகியவை இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த லோகோவை இணைக்கும் வகையில் இரண்டு அழகிய குரோம் பட்டைகள் மற்றும் பம்பரிலும் குரோம் பூச்சுக் கொண்ட பேனல் ஆகியவை நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன.
இவையே காருக்கு அழுகு சேர்ப்பதில் முக்கிய பங்களிக்கின்றன. இதுதவிர, நடிகை வாங்கி இருக்கும் காரில் இன்னும் பல அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், அதிக இட வசதிக் கொண்ட பின் பயணிகளுக்கான இருக்கை, டேஷ்போர்டில் இரண்டு திரை செட்-அப், மரத்தாலான பேனல்கள் ஆகியவை காரின் உட்பக்கத்திற்கு பிரீமியம் லுக் சேர்க்கும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் இரண்டு திரைகளில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும் செயல்படும். இவற்றுடன் சேர்த்து, லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட், க்ரூஸ் கன்ட்ரோல், 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஏர்மேட்டிக் ஏர் சஸ்பென்ஷன் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இதேபோல் பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரில் பென்ஸ் வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 9 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிர ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
எஞ்சினைப் பொருத்த வரை 2.0லிட்டர், 4சிலிண்டர் டர்போசார்ஜட் மோட்டாரே நடிகை வாங்கி இருக்கும் ஜிஎல்இ 300டி தேர்வில் பென்ஸ் வழங்கி இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 245பிஎஸ் பவரையும், 500என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 9ஜி ட்ரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4வீல் டிரைவ் ஆகிய அம்சங்களையும் இந்த கார் தாங்கி இருக்கின்றது. இந்த கார் மாடல் இந்தியாவில் ஆடி க்யூ7 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் சொகுசு கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, இந்திய திரைப் பிரபலங்கள் சொகுசு கார்களை நடப்பு 2023 ஆம் ஆண்டில் அதிகளவில் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நடிகை நயன்தாராவிற்குகூட அவருடைய கணவன் விக்னேஷ் சிவன் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் மேபேக் காரை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









