அளவு எடுத்து செதுக்கன மெழுகு சிலை மாதிரி இருக்காங்க! கோடி ரூபாய் காரில் வந்து இளைஞர்களை கிறங்கடித்தது அவங்களா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி (Mercedes Benz GLC). சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரை, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். பருத்தி வீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பிரியா மணி (Priya Mani) மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் (Ranveer Singh) போன்றோரிடம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு எஸ்யூவி கார் உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் விலை 76.80 லட்ச ரூபாயாக உள்ளது.
இது இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை ஆகும். டாப் வேரியண்ட்டின் விலை 77.80 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆரம்ப நிலை மற்றும் டாப் என 2 வேரியண்ட்களின் ஆன்-ரோடு விலையும் (On-Road Price) 1 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக வரும்.

இவ்வளவு விலை உயர்ந்த காரில், பிரபல நடிகை ஒருவர் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது ஜார்ஜியா ஆண்ட்ரியானி (Giorgia Andriani) ஆவார்.
இத்தாலியில் (Italy) பிறந்தவரான இவர் தற்போது இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில், ஜார்ஜியா ஆண்ட்ரியானி சாலையில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரில் ஏறி செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

ஜார்ஜியா ஆண்ட்ரியானியை நேரில் பார்த்த காரணத்தால் ஆச்சரியமடைந்த ரசிகர்கள் பலரும், அவரை செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ஜார்ஜியா ஆண்ட்ரியானி மெழுகு சிலை போல் இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கமெண்ட்களை தட்டி வருகின்றனர்.
தற்போது ஜார்ஜியா ஆண்ட்ரியானி பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி அவரது சொந்த கார்தான். அவர் இந்த காரில் பொது இடங்களுக்கு வருவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாகவும் பல முறை இதே மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரில், ஜார்ஜியா ஆண்ட்ரியானியை நம்மால் பார்க்க முடிந்துள்ளது.
இது 5 சீட்டர் கார் ஆகும். இந்த விலை உயர்ந்த காரில், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. இந்த 2 இன்ஜின்கள் உடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்படுகிறது.
இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், சொகுசு வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் கிடையாது. வசதிகளை பொறுத்தவரையில், 11.9 இன்ச் MBUX டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, பனரோமிக் சன்ரூஃப் மற்றும் 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமானவையாக உள்ளன.
மறுபக்கம் பாதுகாப்பு (Safety) வசதிகளை பொறுத்தவரையில், 9 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வால்வோ எக்ஸ்சி60 (Volvo XC60), ஆடி க்யூ5 (Audi Q5) மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3) போன்ற கார்களுக்கு எல்லாம், ஜார்ஜியா ஆண்ட்ரியானி பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு எஸ்யூவி கார் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








