சொகுசு வசதிகளில் வேற லெவல்... ஆடி காரை வாங்கிய பிரபல நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

பிரபல நடிகை ஒருவர் மிகவும் விலை உயர்ந்த ஆடி காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சொகுசு வசதிகளில் வேற லெவல்... ஆடி காரை வாங்கிய பிரபல நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் என்றாலே மிகவும் விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகளை வாங்குவது வழக்கம். இந்த வரிசையில் மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி (Kiara Advani) மிகவும் விலை உயர்ந்த ஆடி கார் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார். கியாரா அத்வானி வாங்கியிருப்பது ஆடி ஏ8 எல் கார் ஆகும் (Audi A8 L).

சொகுசு வசதிகளில் வேற லெவல்... ஆடி காரை வாங்கிய பிரபல நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இது லக்ஸரி செடான் ரகத்தை சேர்ந்த கார் என்பது குறிப்பிடத்தக்கது. கியாரா அத்வானியிடம் ஏற்கனவே மிகவும் விலை உயர்ந்த கார்கள் நிறைய இருக்கின்றன. இதில், பிஎம்டபிள்யூ எக்ஸ்5, மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 530டி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தற்போது இந்த வரியைல் ஆடி ஏ8 எல் காரும் இணைந்துள்ளது.

சொகுசு வசதிகளில் வேற லெவல்... ஆடி காரை வாங்கிய பிரபல நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ஆடி ஏ8 எல் காருடன் கியாரா அத்வானி இருக்கும் புகைப்படங்களை ஆடி இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலை தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. கியாரா அத்வானியின் ரசிகர்கள் தற்போது அந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். ஆடி ஏ8 எல் சொகுசு செடான் கார் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சொகுசு வசதிகளில் வேற லெவல்... ஆடி காரை வாங்கிய பிரபல நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இந்திய சந்தையில் 1.56 கோடி ரூபாய் என்ற ஆரம்ப விலையில் ஆடி ஏ8 எல் சொகுசு செடான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்தியாவில் ஆடி ஏ8 எல் சொகுசு செடான் காரின் லாங் வீல் பேஸ் வெர்ஷன் விற்பனை செய்யப்படுகிறது. ஆடி ஏ8 எல் சொகுசு செடான் காரில், 3 லிட்டர் வி6 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

சொகுசு வசதிகளில் வேற லெவல்... ஆடி காரை வாங்கிய பிரபல நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இதனுடன் 10Ah லித்தியம் அயான் பேட்டரியுடன் எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடி ஏ8 எல் சொகுசு செடான் காரில் 19 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரின் உட்புறத்தில் ஏராளமான சொகுசு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதில், பின்புற பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கால்களை மசாஜ் செய்யும் வசதி முக்கியமானது.

சொகுசு வசதிகளில் வேற லெவல்... ஆடி காரை வாங்கிய பிரபல நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

மேலும் முன் பக்க இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்டின் பின் பகுதியில் கழற்றி மாற்றக்கூடிய வகையில் 2 ஆண்ட்ராய்டு டேப்லெட்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் கூல் பாக்ஸ் ஆகிய வசதிகளையும் ஆடி ஏ8 எல் சொகுசு செடான் கார் பெற்றுள்ளது. இதுதவிர 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் டிஸ்ப்ளே, மேட்ரிக்ஸ் எல்இடி ரீடிங் லைட்கள் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

சொகுசு வசதிகளில் வேற லெவல்... ஆடி காரை வாங்கிய பிரபல நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ஏ8 எல் சொகுசு செடான் காரில் ஆடி நிறுவனம் நிறைய பாதுகாப்பு வசதிகளையும் வழங்கியுள்ளது. இதன்படி 2 ஆப்ஷனல் சென்ட்ரல் ஏர்பேக்குகள் உடன் 8 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், லேன் அஸிஸ்ட் வார்னிங் சிஸ்டம் மற்றும் 360 டிகிரி கேமரா உள்பட பல்வேறு வசதிகளை ஆடி ஏ8 எல் சொகுசு செடான் கார் பெற்றுள்ளது.

சொகுசு வசதிகளில் வேற லெவல்... ஆடி காரை வாங்கிய பிரபல நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இந்தியாவில் இதற்கு முன்பாகவும் நிறைய பிரபலங்கள் ஆடி ஏ8 எல் சொகுசு செடான் காரை வாங்கியுள்ளார். இதில், பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் மிகவும் முக்கியமானவர். அவர் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் ஆடி ஏ8 எல் சொகுசு செடான் காரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வாங்கிய கார் சில்வர் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது.

சொகுசு வசதிகளில் வேற லெவல்... ஆடி காரை வாங்கிய பிரபல நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

கரண் ஜோஹரிடமும் ஏற்கனவே நிறைய சொகுசு கார்கள் இருக்கின்றன. இதில், மெர்சிடிஸ் மேபக் எஸ்500, ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் மற்றும் பிஎம்டபிள்யூ 570டி ஆகிய கார்கள் குறிப்பிடத்தக்கவை. இந்திய பிரபலங்கள் நிறைய பேர் ஆடி நிறுவனத்தின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். இதில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி மிகவும் முக்கியமானவர்.

சொகுசு வசதிகளில் வேற லெவல்... ஆடி காரை வாங்கிய பிரபல நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

அவரிடம் நிறைய ஆடி நிறுவன கார்கள் உள்ளன. பொதுவாக திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களை போல் கிரிக்கெட் வீரர்களும் சொகுசு கார்களை வாங்கி குவிக்க கூடியவர்கள்தான். கிரிக்கெட் வீரர்கள் சொகுசு கார்களை வாங்கிய செய்திகளை செய்தி தாள்களிலும், இணையதளங்களிலும் அடிக்கடி காண முடியும்.

சொகுசு வசதிகளில் வேற லெவல்... ஆடி காரை வாங்கிய பிரபல நடிகை... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இதன்படி விராட் கோஹ்லியும் நிறைய சொகுசு கார்களை வாங்கியுள்ளார். ஆனால் அதில் ஒரு சில கார்களை விராட் கோஹ்லி விற்பனை செய்து விடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாகும். இந்த நிலையில் தற்போது புதிதாக ஆடி ஏ8 எல் சொகுசு செடான் காரை வாங்கியுள்ள கியாரா அத்வானிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood actress kiara advani buys audi a8 l luxury sedan check details here
Story first published: Wednesday, December 15, 2021, 13:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X