Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தன்னை போலவே கவர்ச்சியான காரை வாங்கிய பிரபல நடிகை... காரையும், அவங்களையும் ஒன்னா பாத்தா கிறங்கி போயிருவீங்க!
பிரபல நடிகை ஒருவர் தன்னை போலவே கவர்ச்சியான காரை புதிதாக வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகளும், இயக்குனர்களும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த வகையில், பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி (Norah Fatehi) தற்போது புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5-Series) கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது லக்ஸரி செடான் வகையை சேர்ந்த கார் ஆகும்.

இதுகுறித்த தகவலை பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது சமூக வலை தள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. இந்த காரின் விலை 55.40 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது பெட்ரோல் ஸ்போர்ட் வேரியண்ட்டின் விலையாகும். அதே சமயம் டாப் டீசல் எம் ஸ்போர்ட் வேரியண்ட்டின் விலை 68.39 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

530ஐ ஸ்போர்ட் (530i Sport), 520டி லக்ஸரி லைன் (520d Luxury Line), 530ஐ எம் ஸ்போர்ட் (530i M Sport) மற்றும் 530டி எம் ஸ்போர்ட் (530d M Sport) என இந்திய சந்தையில் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் இந்த கார் கிடைக்கிறது. இந்த காரில் மொத்தம் மூன்று இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதில், 252 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இதுதவிர 190 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வும் இந்த காரில் கிடைக்கிறது. மேலும் 265 பிஎஸ் பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடிய 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது.

இந்த மூன்று இன்ஜின்கள் உடனும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வைதான் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்குகிறது. நான்கு-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை இந்த கார் பெற்றுள்ளது.

பாதுகாப்பை பொறுத்தவரை ஏர்பேக்குகள், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், கார்னரிங் பிரேக் கண்ட்ரோல் மற்றும் பார்க் அஸிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. உள்நாட்டு சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes-Benz E-Class), வால்வோ எஸ்90 (Volvo S90) மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் (Jaguar XF) உள்ளிட்ட கார்களுடன் இது போட்டியிட்டு வருகிறது.

இதற்கிடையே பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்கள் விலை அதிரடியாக உயரவுள்ளது. வரும் ஜனவரி 4ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்து வரும் நிலையில், அதனை ஓரளவிற்கு ஈடுகட்டும் விதமாக கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக பிஎம்டபிள்யூ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவன கார்களின் விலை வரும் ஜனவரி 4ம் தேதி முதல் உயரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக வரும் ஜனவரி 1ம் தேதி முதல் மாருதி சுஸுகி, ஃபோர்டு, கியா, எம்ஜி மோட்டார், ஹூண்டாய், ரெனால்ட், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் விலை அதிரடியாக உயரவுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.