தலை சுத்துது... மயக்கம் போட வைக்கும் விலையில் சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை... யார்னு தெரியுமா?

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மிகவும் விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தலை சுத்துது... மயக்கம் போட வைக்கும் விலையில் சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை... யார்னு தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி, மெர்சிடிஸ்-பென்ஸ் வி-க்ளாஸ் சொகுசு எம்பிவி (Mercedes-Benz V-Class Luxury MPV) காரை தற்போது வாங்கியுள்ளார். ஷில்பா ஷெட்டியிடம் ஏற்கனவே பிஎம்டபிள்யூ ஐ8, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் உள்பட பல்வேறு விலை உயர்ந்த கார்கள் உள்ளன. இந்த வரிசையில் மெர்சிடிஸ்-பென்ஸ் வி-க்ளாஸ் தற்போது புதிதாக இணைந்துள்ளது.

தலை சுத்துது... மயக்கம் போட வைக்கும் விலையில் சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை... யார்னு தெரியுமா?

மெர்சிடிஸ்-பென்ஸ் வி-க்ளாஸ் சொகுசு எம்பிவி காரை, ஷில்பா ஷெட்டி கருப்பு நிறத்தில் வாங்கியுள்ளார். இந்த காரின் எக்ஸ்ப்ரஸன் வேரியண்ட்டை ஷில்பா ஷெட்டி தேர்வு செய்துள்ளார். இதுதான் மெர்சிடிஸ்-பென்ஸ் வி-க்ளாஸ் காரின் பேஸ் வேரியண்ட் ஆகும். பேஸ் வேரியண்ட் என்றாலும், இதன் விலை 71.10 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே.

தலை சுத்துது... மயக்கம் போட வைக்கும் விலையில் சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை... யார்னு தெரியுமா?

மும்பையில் இந்த வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை சுமாராக 89.16 லட்ச ரூபாய் வருகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை உயர்ந்த எம்பிவி கார்களில் ஒன்றாக மெர்சிடிஸ்-பென்ஸ் வி-க்ளாஸ் உள்ளது. இதன் பேஸ் வேரியண்ட்டின் விலை ஏற்கனவே நாம் கூறியதை போல், 71.10 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 1.46 கோடி ரூபாய் ஆகும்.

தலை சுத்துது... மயக்கம் போட வைக்கும் விலையில் சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை... யார்னு தெரியுமா?

இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலைதான். மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனமானது வி-க்ளாஸ் எம்பிவி காரின் எக்ஸ்ப்ரஸன் வேரியண்ட்டில் மட்டுமே லாங்-வீல்பேஸ் வெர்ஷனை வழங்குகிறது. இதன் காரணமாக இந்த வேரியண்ட்டில் ஒரே நேரத்தில் 7 பேர் அமர்ந்து பயணம் செய்ய முடியும். ஆனால் எஞ்சிய அனைத்து வேரியண்ட்களும் 6 சீட்டர் மாடலாக மட்டுமே வருகின்றன.

தலை சுத்துது... மயக்கம் போட வைக்கும் விலையில் சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை... யார்னு தெரியுமா?

எக்ஸ்ப்ரஸன் வேரியண்ட்டின் வீல்பேஸ் நீளம் 3430 மிமீ ஆகும். அதே சமயம் இந்த வேரியண்ட் 5370 மிமீ நீளமுடையது. எஞ்சிய அனைத்து வேரியண்ட்களும் 3200 மிமீ வீல்பேஸ் நீளமும், 5140 மிமீ நீளமும் கொண்டவை. இதேபோல் மெர்சிடிஸ்-பென்ஸ் வி-க்ளாஸ் சொகுசு எம்பிவி காரின் இன்ஜின் தேர்வுகளிலும் வேறுபாடு காணப்படுகிறது.

தலை சுத்துது... மயக்கம் போட வைக்கும் விலையில் சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை... யார்னு தெரியுமா?

இதன்படி எக்ஸ்ப்ரஸன், மார்கோ போலோ, மார்கோ போலோ ஹரிஸன் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் ஆகிய வேரியண்ட்களில், 2.1 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 163 பிஎஸ் பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது.

தலை சுத்துது... மயக்கம் போட வைக்கும் விலையில் சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை... யார்னு தெரியுமா?

அதே சமயம் எலைட் வேரியண்ட்டில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வு கொடுக்கப்படுகிறது. இந்த இன்ஜினும் அதே பவர் மற்றும் டார்க் திறனைதான் வழங்கும். ஆனால் இந்த இன்ஜினுடன் 9ஜி-ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இன்ஜின்களுமே மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானவைதான்.

தலை சுத்துது... மயக்கம் போட வைக்கும் விலையில் சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை... யார்னு தெரியுமா?

ஷில்பா ஷெட்டிக்கு முன்னதாக ஏற்கனவே இந்திய பிரபலங்கள் பலரிடம் மெர்சிடிஸ்-பென்ஸ் வி-க்ளாஸ் சொகுசு எம்பிவி கார் சொந்தமாக இருந்து வருகிறது. கொடுக்கும் விலைக்கு ஏற்ப சொகுசான பயணத்தை இந்த கார் வழங்கும். அதற்கு ஏற்ப மெர்சிடிஸ்-பென்ஸ் வி-க்ளாஸ் சொகுசு எம்பிவி காரில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Actress Shilpa Shetty Buys Mercedes-Benz V-Class - Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X