பெரிய நடிகர்கள் வந்தா கூட இவ்ளோ கூட்டம் கூடுமான்னு தெரியல! இவங்க கார்ல ஏர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு
திரையுலகில் கோடிகளில் சம்பளம் பெறும் நடிகைகள், அவ்வப்போது வெளியிடங்களில் தலை காட்டுவது வழக்கமான ஒரு விஷயம்தான். தோழிகளுடன் டின்னர், திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் என திரையுலக நடிகைகளை அடிக்கடி வெளியிடங்களில் காண முடியும். இதில், கிட்டத்தட்ட அனைத்து நடிகைகளுக்கும் இருக்கும் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால், அது விலை உயர்ந்த கார்கள்தான். ஆம், திரையுலக நடிகைகள் வெளியிடங்களுக்கு வரும் சமயங்களில் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த கார்களைதான் பயன்படுத்தி கொண்டுள்ளனர். நடிகைகளை பிஎம்டபிள்யூ கார்களில் (BMW Cars), அடிக்கடி பார்க்கலாம்.
அதேபோல் ஆடி (Audi) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் கார்களிலும் கூட அவர்களை காண முடியும். ஆனால் மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டொயோட்டா (Toyota) போன்ற நிறுவனங்களின் எளிமையான கார்களில் அவ்வளவு எளிதாக எந்தவொரு நடிகையையும் காண முடியாது.

இதற்கு ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor) மட்டும் விதிவிலக்கு. இவர் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் பாலிவுட் நடிகைகளில் (Bollywood Actresses) ஒருவர். இவரது சொத்து மதிப்பு (Net Worth) சுமார் 150 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு இவர் 5-7 கோடி ரூபாய் வரை சம்பளம் (Salary) பெறுவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் மற்ற நடிகைகளை போல் அல்லாமல் மிகவும் எளிமையான வாழ்க்கையை ஷ்ரத்தா கபூர் வாழ்ந்து வருகிறார். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்ற எளிமையான கார்களில் ஷ்ரத்தா கபூரை அடிக்கடி காண முடியும். இது தொடர்பான செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கடந்த காலங்களில், வாசகர்களுக்கு வழங்கியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த வரிசையில் ஷ்ரத்தா கபூர் மீண்டும் ஒரு முறை டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை பயன்படுத்தியுள்ளார். செல்போனில் வீடியோ, புகைப்படம் எடுத்து கொண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நடந்து வந்த ஷ்ரத்தா கபூர், டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் ஏறி செல்லும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
ஷ்ரத்தா கபூர் பயன்படுத்திய டொயோட்டா ஃபார்ச்சூனர் சற்று விலை உயர்ந்ததுதான். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 33.78-51.94 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-showroom Price) டொயோட்டா ஃபார்ச்சூனர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பாலிவுட் நட்சத்திரங்களை பொறுத்தவரையில், இது எளிமையான ஒரு காராகவே கருதப்படுகிறது.
இருப்பினும் ஷ்ரத்தா கபூர் போன்ற திரையுலக நட்சத்திரங்கள் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை விரும்புவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் இந்திய சந்தையில் முதல் முறையாக கடந்த 2009ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த கார் விற்பனைக்கு களமிறக்கப்பட்டு சுமார் 16 ஆண்டுகள் ஆகி விட்டன.
இருப்பினும் தற்போதும் கூட ஒவ்வொரு மாதமும் சுமார் 3 ஆயிரம் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் இந்திய சந்தையில் விற்பனையாகி கொண்டுள்ளன. இதன் மூலம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக டொயோட்டா ஃபார்ச்சூனர் திகழ்கிறது.
டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் விரும்புவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இதில், சக்தி வாய்ந்த 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் முதன்மையாக காரணம் ஆகும். அத்துடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் ஆப்ஷனல் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
எனவே ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்வதற்கு ஏற்ற காராகவும் டொயோட்டா ஃபார்ச்சூனர் திகழ்கிறது. மேலும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் 7 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும். இதன் விசாலமான இடவசதியும், டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை வாடிக்கையாளர்கள் விரும்புவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி பாலிவுட் திரையுலக நட்சத்திரங்களை பொறுத்தவரையில், டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி மிகவும் எளிமையான கார்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. இருப்பினும் ஷ்ரத்தா கபூரை போலவே, ஆமிர் கான் (Aamir Khan), ரன்வீர் சிங் (Ranveer Singh) மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் (Riteish Deshmukh) போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் பலரிடமும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் இருக்கிறது.
பிரபல நடிகரான கார்த்திக் ஆர்யன் (Kartik Aaryan) கூட சமீபத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் பயணம் செய்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், கூடிய விரைவில் இந்த காரில், புதிய மைல்டு ஹைப்ரிட் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மைல்டு ஹைப்ரிட் ஆப்ஷன் உடன் கூடிய டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் கடந்த 2024ம் ஆண்டின் முதல் பாதியில் தென் ஆப்ரிக்காவில் (South Africa) அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஆப்ஷன் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் நடப்பு 2025ம் ஆண்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆப்ஷன் வழங்கப்பட்டால், மைலேஜ் சற்று அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications








