ரோட்ல பைக் ஓட்டீட்டு வந்தது இவரா! முகத்தை பார்த்ததும் ஸ்டண் ஆன மக்கள்! பாதுகாப்பு படை ரகசியமா வந்திருக்கு!
சாலையில் சுதந்திரமாக பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசை பிரபலமான மனிதர்களுக்கு நிச்சயமாக இருக்கும். ஆனால் பொதுமக்கள் கூட்டம் கூடி விடும் என்பதால், பிரபலமான மனிதர்கள் அவ்வளவு எளிதாக வெளியில் முகம் காட்டுவதில்லை. அதற்கு பதிலாக வெளிநாடுகளை அவர்கள் தேர்வு செய்கின்றனர்.
இந்தியாவை சேர்ந்த பிரபலமான மனிதர்கள், வெளிநாடுகளில் பைக் ஓட்டும் வீடியோ (Video) மற்றும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் அவ்வப்போது வைரல் (Viral) ஆவதுண்டு. எனினும் ஒரு சில பிரபலங்கள், இந்தியாவிலேயே சர்வ சாதாரணமாக பைக் ஓட்டி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் டோனி (Dhoni) போன்ற பிரபலங்களை சென்னை (Chennai) சாலைகளில் பைக்கில் பார்த்து, வாயை பிளந்தவர்கள் ஏராளம்.

அந்த வீடியோக்களும் சமூக வலை தளங்களில் காட்டு தீயாய் பரவி விடும். இந்த வரிசையில் பிரபலமான நபர் ஒருவர் வெகு சமீபத்தில் பொது சாலைகளில் பைக் ஓட்டியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படத்தில் நடித்த பிரபல நடிகையான சோனாக்ஸி சின்ஹாதான் (Sonakshi Sinha) அந்த பிரபலமான நபர். மும்பை (Mumbai) சாலைகளில் அவர் உற்சாகமாக பைக் ஓட்டியுள்ளார்.
சோனாக்ஸி சின்ஹா ஓட்டியது ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) பைக் ஆகும். இது இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையாகி வரக்கூடிய ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளில் ஒன்று. இந்த பைக்கை சோனாக்ஸி சின்ஹா ஓட்டி வந்ததை பார்த்து, பொதுமக்கள் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
சோனாக்ஸி சின்ஹா பைக்கை தனியாக ஓட்டியிருந்தாலும் கூட, காரில் அவரது பாதுகாப்பிற்காக ஒரு சிலர் பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. நமக்கு தற்போது கிடைத்துள்ள வீடியோவில், சோனாக்ஸி சின்ஹா பைக் ஓட்டி கொண்டு ஒரு கட்டிடத்திற்குள் நுழைவதை காண முடிகிறது. அப்போது அவரை பின்தொடர்ந்து கார் ஒன்று வருகிறது.
எனவே சோனாக்ஸி சின்ஹா தனது பாதுகாப்பு குழுவை அருகில் வைத்து கொண்டு பைக் ஓட்டியிருக்கலாம் என கருதப்படுகிறது. சோனாக்ஸி சின்ஹா ஓட்டிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கானது, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 'J' பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டிருப்பது 349 சிசி இன்ஜின் ஆகும்.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.4 பிஎஸ் பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் 2.01 லட்ச ரூபாய் முதல் 2.19 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் (Price) ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கை காட்டிலும் அதிக சக்தி வாய்ந்த ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650) என்ற புதிய பைக், வெகு சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








