30 கோடி ரூபா சொத்துக்கு ஓனர்னு சொன்னா சத்தியமா நம்ப முடியல! நடிகையை பைக்கில் அழைத்து சென்றவர் யாராக இருக்கும்?

பைக் டாக்ஸி (Bike Taxi), இந்தியாவின் பொது போக்குவரத்தாக மாறிவரும் ஒன்று. பைக் மற்றும் ஸ்கூட்டரில் செயல்படுத்தப்படுவதால், குறைந்த கட்டணத்தில் போக்குவரத்தை எதிர்பார்ப்போரின் முதன்மையான தேர்வாக பைக் டாக்ஸி உள்ளது. இதனாலேயே பைக் டாக்ஸியை பரவலாக அதிகம் பயன்படுத்துபவர்கள் யாரென்று பார்த்தால் ஏழை, எளியோரும், மிடில்-கிளாஸ் மக்களாகவே உள்ளனர்.

பணக்காரர்கள் பைக் டாக்ஸியை பயன்படுத்துவதை பார்ப்பதே மிகவும் அரிதானது என்றுதான் சொல்ல வேண்டும். அதிலிலும், சினிமா பிரபலம் பைக் டாக்ஸியை பயன்படுத்துகிறார் என்றால் அது பெரிய செய்தியாகும். அப்படியொரு ஒரு செய்திதான் தற்போது கிடைத்துள்ளது. இளம் நடிகை (Actress) நடிகை ஒருவர் பைக் டாக்ஸியில் சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளது.

tripti dimri used bike taxi

இந்த நடிகையின் பெயர், திரிப்தி திம்ரி (Tripti Dimri) ஆகும். பாலிவுட் சினிமா (Bollywood Cinema) துறையை சேர்ந்தவரான இவர், 2017ஆம் ஆண்டில் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் 'மாம்' (Mom) திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன்பின், அனிமல், பூல் பூலையா பாகம் 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனிக்கத்தக்க நடிகையாக மாறிய திரிப்தி திம்ரியின் நடிப்பில் அடுத்ததாக தடாக் 2 திரைப்படம் திரைக்குவர உள்ளது.

இந்த நிலையில்தான், திரிப்தி திம்ரி தான் ஒரு நடிகை என்பதையும் மறந்து பைக் டாக்ஸியை பயன்படுத்தி உள்ளார். திரிப்தி திம்ரி பைக் டாக்ஸியை பயன்படுத்துவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. இதேபோன்று, இந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் கூட பைக் டாக்ஸியில் நடிகை திரிப்தி திம்ரி பயணம் செய்து இருந்தார்.

tripti dimri used bike taxi

இன்னும் சொல்லப் போனால், அப்போது நடிகை திப்ரிதி திம்ரியை அழைத்து சென்ற அதே பைக் டாக்ஸி ரைடர் தான் இப்போதும் அழைத்து சென்றுள்ளார். இரு நிகழ்வுகளிலும் பைக்கை ஓட்டுபவரின் ஹெல்மெட் (Helmet) ஒரே மாதிரியாக இருப்பதை வைத்து இருவரும் ஒரே ஆள் என்பதை அறிய முடிகிறது. அதாவது, ஒரே பைக் டாக்ஸி டிரைவரை தான் இருமுறையும் நடிகை திரிப்தி திம்ரி பயன்படுத்தி உள்ளார்.

மும்பையில் ஒரு இடத்திற்கு விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) காரில் வந்த நடிகை திரிப்தி திம்ரி, பின்னர் அங்கிருந்து செல்லும்போது பைக் டாக்ஸியில் சென்றுள்ளார். இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது யாராக இருந்தாலும் ஹெல்மெட் அணிவது அவசியமாகும். ஆனால், இந்த நிகழ்வில் ரைடர் மட்டுமே ஹெல்மெட் அணிந்திருப்பதையும், நடிகை திரிப்தி திம்ரி முக கவசம் மட்டுமே அணிந்திருப்பதையும் காணலாம்.

பைக் டாக்ஸியில் செல்வதற்கு முன், நடிகை திரிப்தி திம்ரி பயணம் செய்து வந்த ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் இந்த கார் எச்.எஸ்.இ டைனாமிக், ஆட்டோபயோகிராபி மற்றும் எஸ்வி எடிசன் என 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.45 கோடியில் இருந்து ரூ.2.95 கோடி வரையில் உள்ளன.

மொத்தம் 11 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை அடர் நீல நிறத்தில் நடிகை திரிப்தி திம்ரி வைத்துள்ளார். 3 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் மற்றும் 3 லிட்டர் பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக் பயணங்களுக்கு ஹெல்மெட் அவசியம் என்பதை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஒரு நடிகையாக இருந்துக் கொண்டு போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதது பார்ப்போரை சற்று முகம் சுளிக்க வைக்கிறது. யாருக்கும் முகம் தெரியக் கூடாது என முகத்தை மறைத்தவருக்கு பைக்கில் பயணம் செய்ய ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, April 25, 2025, 23:33 [IST]
English summary
Bollywood actress tripti dimri used bike taxi in mumbai viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+