அந்த படத்துல விஜய் கூட மட்டும் நடிச்சிருந்தா ரேஞ்சே வேற! சிம்பிளா டிரெஸ் பண்ணீட்டு கார்ல சலூன் வந்தது அவங்களா!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் பிரபலமான சொகுசு கார்களில் (Luxury Cars) ஒன்று பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7). சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை, திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரும் வைத்துள்ளனர். ஜெயிலர் (Jailer) திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றதற்காக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு (Super Star Rajinikanth), தயாரிப்பாளர் கலாநிதி மாறன் (Kalanithi Maran) விலை உயர்ந்த பரிசை வழங்கிய நிகழ்வு உங்களுக்கு நியாபகம் இருக்கும் என நம்புகிறோம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார்தான் அந்த விலை உயர்ந்த பரிசு ஆகும். நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் 650 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரி குவித்த சந்தோஷத்தில், பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு, கலாநிதி மாறன் பரிசாக வழங்கினார்.

Yami Gautam Once Again Spotted In BMW X7

இந்த விலை உயர்ந்த காரை அடிக்கடி பயன்படுத்தி கொண்டுள்ள நபர்களில் ஒருவர் யாமி கௌதம் (Yami Gautam). பிரபல நடிகையான இவர், ஹிந்தி, தெலுங்கு, கன்னடா மற்றும் பஞ்சாபி மொழி திரைப்படங்களில் நடித்து கொண்டுள்ளார். தமிழிலும் கூட, கௌரவம் மற்றும் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் உள்ளிட்ட திரைப்படங்களில் யாமி கௌதம் நடித்துள்ளார்.

நடிகரும், தவெக என சுருக்கமாக குறிப்பிடப்படும் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவருமான (TVK - Tamilaga Vettri Kazhagam) விஜய் (Vijay) நடிப்பில் உருவான தலைவா படத்தில் கூட முதலில் அமலா பால் இடத்தில் யாமி கௌதம்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்காமல் போய் விட்டது.

BMW X7

ஒருவேளை தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக யாமி கௌதம் நடித்திருந்தால், தமிழிலும் அவர் புகழ் பெற்ற நடிகையாக மாறியிருந்திருக்கலாம். ஆனால் படக்குழு கடைசி நேரத்தில் அமலா பாலை தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் என்ன? என்பது பொது வெளியில் அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவின் மற்ற நடிகைகளை போலவே, யாமி கௌதமும் சொகுசு கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர். அவரை பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில் அடிக்கடி காண முடியும். இந்த வரிசையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில், மிகவும் எளிமையான உடையில், யாமி கௌதம் வந்து இறங்கிய வைரல் வீடியோ ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ மும்பையில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள ஜூஹூ பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு சலூன் கடைக்கு, பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில், யாமி கௌதம் வந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. யாமி கௌதம் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி மிகவும் விலை உயர்ந்தது.

வேரியண்ட்களை பொறுத்து, 1.53 கோடி ரூபாய் முதல் 1.64 கோடி ரூபாய் வரையிலான ஆன்-ரோடு விலைகளில் (On-Road Price), பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) போன்ற கார்களுடன், பிஎம்டபிள்யூ எக்ஸ்7 போட்டியிட்டு கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ எக்ஸ்7, சொகுசானது என்பதுடன், பாதுகாப்பான ஒன்றாகவும் திகழ்கிறது. குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற்றுள்ளது. பிரபலங்கள் இந்த காரை விரும்புவதற்கு இதுவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக திகழ்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 6, 2025, 23:56 [IST]
English summary
Bollywood actress yami gautam once again spotted in bmw x7 in mumbai viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+