சன்னி லியோன் வெச்சிருக்கற காரை போட்டி போட்டு கொண்டு வாங்கும் நடிகைகள்! ஓ இதுதான் உண்மையான காரணமா!
இந்தியாவை சேர்ந்த நடிகைகள், மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் வலம் வருவதைதான் விரும்புகின்றனர். ஆனால் விதிவிலக்காக ஒரு சில 'மாஸ் மார்க்கெட்' கார்களும் கூட, இந்திய நடிகைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. இதில், எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) மிகவும் முக்கியமானது. இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் ஜீப் மெரிடியன் (Jeep Meridian) போன்ற கார்களுடன், எம்ஜி க்ளோஸ்ட்டர் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி க்ளோஸ்ட்டர் காரின் ஆரம்ப விலை 38.80 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 43.87 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

'மாஸ் மார்க்கெட்' காராக இருந்தாலும் கூட, இந்தியாவை சேர்ந்த பிரபல நடிகைகள் பலரும், எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி ரக காரை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை பற்றிய தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். சரி, வாருங்கள். இனி நேரடியாக செய்திக்குள் செல்லாம்.
சன்னி லியோன் (Sunny Leone): இந்தியாவில் தற்போது நிறைய நடிகைகள் எம்ஜி க்ளோஸ்ட்டர் காரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் அடித்தளம் போட்டு கொடுத்தவர் சன்னி லியோன்தான். ஆம், இந்தியாவில் எம்ஜி க்ளோஸ்ட்டர் காரை வாங்கிய முதல் சில நடிகைகளில் சன்னி லியோனும் ஒருவர். அதற்கு பிறகுதான், மற்ற நடிகைகள் எல்லாம் இந்த காரை வாங்க தொடங்கினர்.

ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh): பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங்கிடமும், எம்ஜி க்ளோஸ்ட்டர் கார் உள்ளது. அவரிடம் இருப்பது வெள்ளை நிற கார் ஆகும். பொதுவாக பிரபல நடிகைகள் பலரும் எம்ஜி க்ளோஸ்ட்டர் காரை வெள்ளை நிறத்தில்தான் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சுஷ்மிதா சென் (Sushmita Sen): தற்போது சற்று வயதாகி விட்டாலும் கூட, இந்திய ரசிகர்கள் மத்தியில் சுஷ்மிதா சென் இன்னும் புகழை இழக்கவில்லை. 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் வென்றவர்களில் ஒருவரான சுஷ்மிதா சென்னிடமும், வெள்ளை நிற எம்ஜி க்ளோஸ்ட்டர் கார் உள்ளது.
இவர்கள் எல்லாம் தவிர, ஷெர்லின் சோப்ரா (Sherlyn Chopra) மற்றும் மசாபா குப்தா (Masaba Gupta) போன்ற நடிகைகளிடமும், எம்ஜி க்ளோஸ்ட்டர் கார் உள்ளது. எம்ஜி க்ளோஸ்ட்டர் கார், எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது என்பதால், தாராளமான இடவசதி கிடைக்கிறது. 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனையாகி கொண்டுள்ளது.
எனவே அதிகம் பேர் ஒன்றாகவும் பயணம் செய்ய முடியும். அத்துடன் 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளும் (Features) எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரில் வழங்கப்படுகின்றன.
மேலும் முன்பகுதியில் வென்டிலேஷன் உடன் கூடிய இருக்கைகள், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் அடாஸ் ஆகிய வசதிகளும் எம்ஜி க்ளோஸ்ட்டர் காரில் உள்ளன. இது போன்ற காரணங்களால்தான், பிரபல நடிகைகளும் கூட, எம்ஜி க்ளோஸ்ட்டர் காரை தேர்வு செய்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி நிறுவனம் க்ளோஸ்ட்டர் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், இன்னும் நிறைய பிரபலங்கள், அதை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








