சொந்தமாக விமானம் வைத்திருக்கும் இந்தி திரைப்பட பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
இந்தி சினிமா பிரபலங்கள் பலர் தங்கள் வசம் தனியார் ஜெட் விமானம் வைத்துள்ளனர். அவர்ககள் யார் யார் என்ற விபரம் உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவில் அதிகம் பணம் புழங்கும் ஒரு துறையாக சினிமா துறை திகழ்கிறது. சினிமாவில் ஜெயித்த நடிகர்கள், நடிகைகள், டைக்டர்கள் பெரும்பாலும் சொகுசு வாழ்க்கையே வாழ்கின்றனர். ஆடம்பரமான வீடு, ஆடம்பர கார், ஆடம்பர உடை என கலக்கும் இவர்களில் பலர் தங்களுக்கு என சொந்தமான விமானம் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு இவர்கள் குறித்த விபரம் இதோ:

ஷாரூக் கான்
இந்தியாவின் சினிமா ரசிகைகளின் கனவு காதலனாக வலம் வருகிறார் ஷாரூக் கான். இவருக்கு பல பெண் ரசிகைகள் இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். இவரிம் சொந்தமாக ஒரு சிறிய ரக விமானமும் இருக்கிறது.

சல்மான் கான்
தனது ஆம்ஸையும், சிக்ஸ் பேக் உடற்கட்டையும் காப்பித்தே ஏகோபித்த ரசிகர்களை தன் வசப்படுத்திய சல்மான் கானிடமும் தனியார் ஜெட் விமானம் இருக்கிறது.

அஜய் தேவ்கான்
சுமார் 30 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் நடித்து வருபவரும், தமிழில் வெளியான சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தவருமான அஜய் தேவ்கானுக்கும் தனியாக தனியார் ஜெட் விமானம் இருக்கிறது.

ஹிரித்திக் ரோஷன்
30 ஆண்டுகளுக்கு முன் குரூப் டான்ஸர்களுள் ஒருவராக ஆடி இந்தி சினிமாவிற்குள் நுழைந்து, துாம், கிரிஷ் என பல ஹிட் படங்களை அளித்த ஹரித்திக் ரோஷன் இன்று தனியார் ஜெட் விமானம் வைத்திருக்கும் நிலைக்கு வளர்ந்து விட்டார்.

ஷில்பா ஷெட்டி
பல படங்களில் நடித்தி பிரபலமாகியிருந்தாலும், வெளிநாட்டில் நடந்த பிக் பிரதர் ஷோ வில் நடந்த சர்ச்சை மூலம் பிரபலமாகி அந்த ஷோவிலும் வெற்றிபெற்று உலக பிரபலமான ஷில்பா ஷெட்டிக்கும் அவரது கணவர் ராஜ் குந்திராவிற்கும் தனியார் ஜெட் விமானம் இருக்கிறது.

அமிதாப் பச்சன்
இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என போற்றகூடிய அளவிற்கு வளர்ந்துள்ள அமிதாப் பச்சன் இன்று எவ்வளவு சொகுசு வாழக்கை வாழ்ந்து வருகிறார் என்று நமக்கு தெரியும். அவரிடம் தனியா் ஜெட் விமானம் இருக்காதா என்ன?

மாதுரி தீக்ஷித்
இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை மாதுரி தீக்ஷித் தனதும் தனக்கென தனியார் ஜெட் விமானம் ஒன்றை வைத்துள்ளா்.

ஸ்ரீ தேவி
தமிழ் சினிமாவில் 16 வயதினிலே படத்தில் "மயிலு" என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி இந்திய அளவில் மிக முக்கிய நடிகைகளுள் வருவராகவலம் வந்து சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியும் தனியார் ஜெட் விமானம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

சன்னி லியோன்
கேராளவில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளவந்த போது இவரை பார்க்க கூடிய கூட்டம் பெரும் வரலாறையே படைத்திருக்கும் போல, சன்னி லியோனின் புகழுக்கு இதுவே சாட்சி. இவரும் தனியார் ஜெட் விமானம் வைத்திருக்கிறார்.

தில்ஷித் தோஷஞ்
பிரபல பஞ்சாபி நடிகரும் பாடகருமான தில்ஷித் தோஷஞ் தனியார் ஜெட் விமானம் வைத்துள்ளார்.

அணில் கபூர்
இந்திய சினிமா நடிகரும் பிரபல டி.வி., தொகுப்பாளருமான அணில் கபூரும் தனியார் ஜெட் விமானம் வைத்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா
உலக அழகி பட்டம் பெற்று தனது திறமையால் இன்று உலக முக்கிய பெண் பிரபலங்களில் ஒருவராக திகழும் பிரியங்கா சோப்ராவும் தன் வசம் தனியார் ஜெட் விமானத்தை வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications