வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்... மனைவிக்கு விசித்திரமான காரை பரிசளித்த பிரபல இயக்குனர்... யார்னு தெரியுமா?

பிரபல இயக்குனர் ஒருவர் தனது மனைவிக்கு விசித்திரமான காரை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்... மனைவிக்கு விசித்திரமான காரை பரிசளித்த பிரபல இயக்குனர்... யார்னு தெரியுமா?

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவர் அகமது கான் (Ahmed Khan). திரைப்பட இயக்குனர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என இவருக்கு பல முகங்கள் உள்ளன. பல்வேறு டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களிலும் அகமது கான் நடுவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்... மனைவிக்கு விசித்திரமான காரை பரிசளித்த பிரபல இயக்குனர்... யார்னு தெரியுமா?

இந்த சூழலில் தனது மனைவி சாய்ரா அகமது கானுக்கு (Shaira Ahmed Khan) மிகவும் அரிதான பேட்மொபைலை (Batmobile) தற்போது பரிசாக வழங்கியுள்ளார். மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் இந்த வித்தியாசமான பரிசை கொடுத்து அசத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை சாய்ரா அகமது கான் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.

வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்... மனைவிக்கு விசித்திரமான காரை பரிசளித்த பிரபல இயக்குனர்... யார்னு தெரியுமா?

இந்த வித்தியாசமான பரிசை வழங்கியதற்காக அகமது கானுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் கனவு நிறைவேறி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சாய்ரா அகமது கான் பகிர்ந்து புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பாலிவுட் பிரபலங்கள் பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்... மனைவிக்கு விசித்திரமான காரை பரிசளித்த பிரபல இயக்குனர்... யார்னு தெரியுமா?

கடந்த 1989ம் ஆண்டு பேட்மேன் (Batman) திரைப்படம் வெளியானது. இதில், மைக்கேல் கீடன் (Michael Keaton) நடித்திருந்தார். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனம்தான் பேட்மொபைல். இந்த பேட்மொபைல் மூலம் பேட்மேன் பல்வேறு சாகசங்களை செய்வார். பின் பகுதியில் நெருப்பை கக்கி கொண்டு, பேட்மொபைல் அதிவேகத்தில் செல்லும்.

வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்... மனைவிக்கு விசித்திரமான காரை பரிசளித்த பிரபல இயக்குனர்... யார்னு தெரியுமா?

குறிப்பாக சேஸிங் காட்சிகள் அனல் பறக்கும். அகமது கான் தற்போது அவரது மனைவிக்கு பரிசாக வழங்கியுள்ள பேட்மொபைல், திரைப்படத்தில் பேட்மேன் பயன்படுத்திய பேட்மொபைலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது திரைத்துறையில் மிகவும் தனித்துவமான வாகனங்களில் ஒன்றாகும்.

வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்... மனைவிக்கு விசித்திரமான காரை பரிசளித்த பிரபல இயக்குனர்... யார்னு தெரியுமா?

பலர் இந்த வாகனத்தை பேட்மேன் திரைப்படத்தின் கேரக்டராகவே கருதுகின்றனர். பெரிய திரையில் மீண்டும் ஒரு முறை பேட்மொபைல் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் வரும் 2022ம் ஆண்டு வெளியாகவுள்ள திரைப்படம் ஒன்றில் பேட்மொபைல் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்... மனைவிக்கு விசித்திரமான காரை பரிசளித்த பிரபல இயக்குனர்... யார்னு தெரியுமா?

அகமது கான் தற்போது தனது மனைவி சாய்ராவிற்கு பரிசாக வழங்கியுள்ள பேட்மொபைல் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து பேட்மொபைல் இந்தியா வருவதற்கு சுமார் 8 மாதங்கள் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் இந்த பேட்மொபைல் மும்பையில் அசெம்பிள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்... மனைவிக்கு விசித்திரமான காரை பரிசளித்த பிரபல இயக்குனர்... யார்னு தெரியுமா?

சரி, இனி மைக்கேல் கீடனின் பேட்மொபைலுக்கு வருவோம். பேட்மேன் மற்றும் பேட்மேன் ரிடர்ன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் இந்த பேட்மொபைல் தோன்றியுள்ளது. செவர்லே இம்பாலா (Chevrolet Impala) காரின் சேஸிஸ் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டது. இது மிகவும் பழமையான கார்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்... மனைவிக்கு விசித்திரமான காரை பரிசளித்த பிரபல இயக்குனர்... யார்னு தெரியுமா?

பேட்மொபைலில் வி8 இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதுவும் செவர்லே நிறுவனத்திடம் இருந்துதான் பெறப்பட்டது. தற்போது அகமது கான் தனது மனைவி சாய்ராவிற்கு மிகவும் அரிதான பேட்மொபைலை பரிசாக வழங்கியிருப்பது பேட்மேன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் இந்த புகைப்படங்களை தற்போது சமூக வலை தளங்களில் ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.

வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்... மனைவிக்கு விசித்திரமான காரை பரிசளித்த பிரபல இயக்குனர்... யார்னு தெரியுமா?

பொதுவாக திரைப்பட நடிகர்கள், இயக்குனர்கள் போன்ற திரையுலகினர் தங்கள் மனைவிகளின் பிறந்த நாளுக்கு கார்களை பரிசாக வழங்குவது வழக்கம்தான். ஆனால் மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ, லம்போர்கினி போன்ற நிறுவனங்களின் விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கியது குறித்த செய்திகளைதான் நாம் இதற்கு முன்பு அதிகம் கேள்விபட்டுள்ளோம்.

வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்... மனைவிக்கு விசித்திரமான காரை பரிசளித்த பிரபல இயக்குனர்... யார்னு தெரியுமா?

ஆனால் அகமது கான் அரிதிலும் அரிதாக தனது மனைவி சாய்ராவிற்கு, அவரது பிறந்த நாளை முன்னிட்டு மிகவும் வித்தியாசமான பேட்மொபைல் வாகனத்தை பரிசாக வழங்கியுள்ளார். ஆனால் இதன் மதிப்பு எவ்வளவு? என்பது சரியாக தெரியவில்லை. எனினும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த பேட்மொபைல் வாகனம் நிச்சயம் விலை உயர்ந்த ஒன்றாகதான் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood celebrity ahmed khan gifts wife shaira a batmobile check details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X