ஒரு சிங்கரிடம் எப்படி கோடி ரூபாய் மதிப்பில் இத்தனை கார்கள்... அரிதான ரோல்ஸ்-ராய்ஸ் காரும் இருக்கு!!

பாலிவுட் பாடகர் பாட்சாவை பற்றி பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். வட மாநில 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர். இப்போது அவ்வப்போது பாடல்களை எழுதி, பாடும் பாட்சா என்பது இவரது புனைப்பெயரே ஆகும். இவரது உண்மையான பெயர் ஆதித்யா ப்ராதீக் சிங் சிசோடியா ஆகும். விலையுயர்ந்த கார்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் கொண்டவரான இவரிடம் உள்ள சொகுசு கார்களை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரோல்ஸ்-ராய்ஸ் வ்ராய்த்

பாட்சாவிடம் மிக விலையுயர்ந்த கார் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஆகும். வ்ராய்த் ஆனது ரோல்ஸ்-ராய்ஸின் 2 கதவுகளை மட்டுமே கொண்ட சொகுசு கார் ஆகும். ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இதனை இந்திய சாலைகளில் காண்பது அரிதான விஷயம் ஆகும். ஏனெனில் இந்தியாவில் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை வைத்திருப்போர் மிகவும் குறைவே.

ஒரு சிங்கரிடம் எப்படி கோடி ரூபாய் மதிப்பில் இத்தனை கார்கள்!!

அதுமட்டுமின்றி, இந்த காரை பெரும்பாலான தொழிலதிபர்கள் வாங்க விரும்புவதில்லை என்பதும் உண்மையே. இருப்பினும் பாடகர் பாட்சா வாங்கியுள்ளார். இவரிடம் இருப்பது வெள்ளை நிற வ்ராய்த் கார் ஆகும். இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இல்லை. இந்த காரை பாட்சா யூஸ்டு கார் மார்க்கெட்டில் இருந்து வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்ஷே கேமன் 718

தற்சமயம் போர்ஷே பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் விலை குறைவான கார் மகன் ஆகும். ஆனால் இதன் வருகைக்கு முன்பு வரையில் கேமன் தான் விலை குறைவான போர்ஷே காராக விளங்கியது. 911 கர்ரேரா கார் அளவிற்கு இல்லையென்றாலும், கேமனும் செயல்திறன்மிக்க போர்ஷே கார் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒரு சிங்கரிடம் எப்படி கோடி ரூபாய் மதிப்பில் இத்தனை கார்கள்!!

சாலையில் செல்வோர் எவரையும் ஒரு கணம் திரும்பி பார்க்க வைக்கக்கூடிய வகையில் தோற்றத்தை கொண்ட இந்த காரில் வெறும் 2 கதவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. பாட்சாவிடம் கிரே நிறத்தில் உள்ள கேமன் 718 கார் சண்டிகரில் உள்ள அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் 350டி

பாட்சா சினிமா நுழைந்த ஆரம்ப காலக்கட்டத்தில் வாங்கிய சொகுசு கார் இதுவாகும். கருப்பு நிறத்தில் இவரிடம் உள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் கார் முந்தைய தலைமுறை மாடல் ஆகும். ஆனால் இந்தியாவில் அதன்பின் கடந்த 2021இல் புதிய தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் கார் சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் ஒரு சமயத்தில் மிக பிரபலமாக விளங்கியது.

ஒரு சிங்கரிடம் எப்படி கோடி ரூபாய் மதிப்பில் இத்தனை கார்கள்!!

ஜீப் வ்ராங்லர்

பாட்சாவிடம் உள்ள விலை குறைவான கார் ஜீப் வ்ராங்லர் ஆகும். இருப்பினும் இந்த வாகனத்தை இந்த வரிசையில் நாம் பார்ப்பதற்கு காரணம், ஆஃப்-ரோடு பயணங்களை விரும்புவோர் மத்தியில் இந்த அமெரிக்கன் ஸ்டைல் எஸ்யூவி வாகனம் பிரபலமானதாக விளங்குகிறது. தற்சமயம் விற்பனையில் உள்ள ஜீப் வ்ராங்லர் கார் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது என்றாலும், பாட்சா வைத்துள்ள முந்தைய தலைமுறை ஜீப் வ்ராங்லர் சிபியூ-ஆக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஆகும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

சினிமா நட்சத்திரங்கள் இவ்வாறான சொகுசு கார்களை வைத்திருப்பது ஒன்றும் ஆச்சிரியமான விஷயம் அல்ல. ஆனால் ராப் பாடகரான பாட்சா ரோல்ஸ்-ராய்ஸ் வ்ராய்த் போன்ற அரிதான கார்களை வைத்திருப்பது உண்மையில் ஆச்சிரியப்பட வைக்கிறது. இதில் இருந்து ஆட்டோமொபைல் வாகனங்கள் மீதும், லக்சரி கார்கள் மீதும் அவர் வைத்துள்ள ஆர்வத்தை அறிய முடிகிறது.

Article Published On: Friday, March 24, 2023, 16:56 [IST]
English summary
Bollywood rap singer badshah car collection
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+