பலருக்கு கனவாக இருக்கும் காரை சொந்தமாக்கியது இந்த பாடகரா? ஷோரூமுக்கு மொத்த குடும்பத்துடன் போய்ட்டாரு!!

சினிமா பிரபலங்கள் அவ்வப்போது, புதியது, புதியதாக சொகுசு கார்களை வாங்குவார்கள் என்பதை பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். தங்களை அப்டேட்டாக காட்டிக் கொள்ள மாடர்ன் கார்களை அடிக்கடி யாராவது ஒருவர் வாங்கிக் கொண்டே இருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது பிரபல பாடகர் ஒருவர் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) காரை வாங்கியுள்ளார். மேலும், இது தொடர்பான படங்களையும் அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். யார் அந்த பாடகர் என்பதையும், அவர் புதியதாக வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ காரை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களுக்கு இந்தியாவில் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலமாக, கடந்த 6 மாதங்களில் கார்கள் விற்பனையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் 21% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் சுமார் 6,734 பிஎம்டபிள்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை இல்லாமல், 364 மினி கார்களும் கடந்த 6 மாதங்களில் விற்கப்பட்டுள்ளன.

akhil sachdeva buys bmw x7

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பிஎம்டபிள்யூ கார்களில் லக்சரி தரத்திலானவையாக 7 சீரிஸ், ஐ7, எக்ஸ்7 மற்றும் எக்ஸ்.எம் கார்கள் பார்க்கப்படுகின்றன. இதில் அதிகம் விற்பனையாகும் கார் என்றால், அது எக்ஸ்7 ஆகும். அத்தகைய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை தான் இந்தியாவின் பிரபல பாடகர்களுள் ஒருவரான அகில் சச்தேவா (Akhil Sachdeva) வாங்கியுள்ளார்.

இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்ட அகில் சச்தேவாவை நம் தமிழ்நாட்டில் நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கலாம். ஏனெனில், இவர் 2009ஆம் ஆண்டில் தனது இசை பயணத்தை துவங்கியது டெல்லியை சேர்ந்த நாஷா என்கிற இசை குழு உடன் ஆகும். அதன்பின், பாலிவுட் சினிமாவில் நிறைய திரைப்படங்களுக்கு பாடல்களை பாடும் வாய்ப்பை அகில் பெற்றார்.

akhil sachdeva buys bmw x7

குறிப்பாக, சில வருடங்களுக்கு முன் திரைக்கு வந்த கபீர் சிங் திரைப்படத்திற்காக இவர் பாடிய டெரா பேன் ஜாவுங்கா பாடல் ரசிகர்களிடையே அகில் சச்தேவாவை இன்னும் நெருக்கமாக கொண்டு சென்றது. தற்சமயம், வெப் சீரிஸ் திரைப்படங்களுக்காகவும் பாடல்களை பாடிவரும் அகில் சச்தேவா புதியதாக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை வாங்கி உள்ளார்.

குடும்பத்துடன் டீலர்ஷிப் ஷோரூமுக்கு சென்று பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை டெலிவிரி பெற்றுள்ள பாடகர் அகில் சச்தேவா அங்கு புதிய காருக்கு அருகே நின்றவாறு குடுபத்தினருடன் பல்வேறு விதமான போஸ்களில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். மேலும், ஷோரூமில் வைத்து காருக்கு மேற்கொள்ளப்பட்ட பூஜைகளும் படமாக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

akhil sachdeva buys bmw x7

எக்ஸ்7 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஏற்கனவே கூறியதுபோல் பிஎம்டபிள்யூவின் விலையுயர்ந்த லக்சரி காராக எக்ஸ்7 விளங்குகிறது. இதற்கேற்ப உயர் தரத்திலான உட்பக்க கேபின் மற்றும் அதிக எண்ணிக்கையிலான தொழிற்நுட்ப அம்சங்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, காரினுள் டேஸ்போர்டில் வளைவான டிஸ்பிளே, மெரினோ அப்ஹோல்ஸ்ட்ரி, ஐடிரைவ் கண்ட்ரோலர், பிஎம்டபிள்யூ ஆப்ரேட்டிங் சிஸ்டம் 8.5, பிஎம்டபிள்யூ சைகை கண்ட்ரோல் உள்ளிட்டவை எக்ஸ்7 காரில் வழங்கப்படும் முக்கியமான அம்சங்கள் ஆகும்.

இந்த விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரில் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் எந்த என்ஜின் ஆப்ஷன் உடன் எக்ஸ்7 காரை பாடகர் அகில் சச்தேவா வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. 0-இல் இருந்து 100kmph வேகத்தை விரைவாக 5.8 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.27 கோடியில் இருந்து ரூ.1.30 கோடி வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஆனது செல்வந்தர்கள் மத்தியில் தற்சமயம் மிகுந்த பிரபலமாக இருக்கும் பிஎம்டபிள்யூ கார் ஆகும். ஆதலால், இத்தகைய காரை இந்திய அளவில் பிரபலமான ஒரு திரைப்பட பாடகர் வாங்கியிருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காருக்கு கருப்பு நிறம் தான் நன்கு எடுப்பாக இருக்கும் என்பதை அறிந்து அதே நிறத்தில் அகில் சச்தேவா இந்த காரை வாங்கியுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 11, 2024, 15:13 [IST]
English summary
Bollywood singer akhil sachdeva buys bmw x7 luxury car check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X