67 வயதுனு சொன்னா சத்தியமா யாரும் நம்ப மாட்டாங்க! தமிழில் ஒரேயொரு பாடலை பாடிய பாடகர் வாங்கிய காஸ்ட்லீயான கார்!

லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனம் உற்பத்தி செய்யும் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களுக்கு உலகம் முழுவதிலுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் நமது இந்தியா மட்டும் விதிவிலக்காகவா இருக்க போகிறது? இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சினிமா (Cinema) துறையை சேர்ந்தவர்கள் அவ்வப்போது புது, புது ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்குவதை தொடர்ச்சியாக நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். இந்த வரிசையில் தற்போது பிரபல இந்திய பாடகர் ஒருவர் ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார்.

இவரது பெயர், குமார் சானு (Kumar Sanu). இவரை நம்மில் நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கலாம். ஏனெனில், இவர் இந்தி பாடகர் ஆவார். இந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்களை பாடிய அனுபவமிக்கவராக குமார் சானு விளங்குகிறார். குறிப்பாக, ஒரு சமயத்தில் பாலிவுட்டில் திரைப்படத்தின் ஹீரோ அறிமுக பாடல்களை பாட இவரை தான் அதிகமாக அழைத்தனர்.

bollywood singer buys range rover

இந்தி, பெங்காலி மொழிகளில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், ஒடிசா, அசாமி, பஞ்சாபி, போஜ்புரி, நேபாளி, ராஜஸ்தானி, உருது என கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழி திரைப்படங்களுக்கும் குமார் சானு பாடல்களை பாடியுள்ளார். ஒட்டுமொத்தமாக சேர்த்து பார்த்தால், சுமார் 500க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடிய இந்தியாவின் மிகுந்த அனுபவமிக்க பாடகராக குமார் சானு விளங்குகிறார்.

தமிழிலும் 1997இல் நடிகர் பிரசாத்தின் நடிப்பில் வெளியான 'மன்னவா' திரைப்படத்திற்காக 'யம்மா... யம்மா' என்கிற ஹீரோ அறிமுக பாடலை பாடியுள்ளார். ஆனால், தமிழில் இதுவரையில் பாடகர் குமார் சானு பாடி ஒரேயொரு பாடல் இது மட்டுமே ஆகும். திரைப்படங்களுக்கு மட்டுமில்லாமல், நிறைய ஆல்பம் பாடல்களையும் குமார் சானு பாடியுள்ளார்.

bollywood singer buys range rover

இதன் மூலமாக, வட இந்திய மக்கள் மத்தியில் மிக பிரபலமான பாடகராக விளங்கும் 67 வயதான குமார் சானு 'மெலடி கிஃப் ஆஃப் பாலிவுட்' (Melody King of Bollywood) என அழைக்கப்படுகிறார். இத்தகையவர் தான் தற்போது லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை மும்பையில் வாங்கியுள்ளார்.

இதனை சம்பந்தப்பட்ட மும்பை லேண்ட் ரோவர் ஷோரூம் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் படங்கள் உடன் தெரிவித்துள்ளது. இந்த படங்களின் மூலம் பார்க்கும்போது, புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் கார் பாடகர் குமார் சானுவின் இருப்பிடத்திற்கே வந்து டெலிவிரி செய்யப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் கார்கள் பல்வேறு விதமான உடலமைப்புகளில், பல்வேறு விதமான பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

ரேஞ்ச் ரோவர் (Velar), ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Sport), ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் எவோக் (Evoque) என்பன அவை ஆகும். இதில், பாடகர் குமார் சானு தற்போது வாங்கியிருப்பது ரேஞ்ச் ரோவர் வேலர் கார் ஆகும். ரேஞ்ச் ரோவர் கார்களில் வேலர் ஆனது மிகவும் விலையுயர்ந்த மாடல் கிடையாது; அதேநேரம் விலை குறைவான ரேஞ்ச் ரோவர் என்றும் கூற முடியாது.

இரண்டிற்கும் மத்தியில், ரூ.87.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் வேலர் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதே விலையில் தான் பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் வேலர் கார் விற்பனை செய்யப்படுகிறது. அளவில் பெரியதான காராக இருப்பினும், ரேஞ்ச் ரோவர் வேலர் ஆனது 5 இருக்கைகளை மட்டுமே கொண்ட விலையுயர்ந்த கார் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரம்மாண்டமான கார் என்பது மட்டுமின்றி, 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற பாதுகாப்பான கார் ரேஞ்ச் ரோவர் வேலர் ஆகும். இதனாலேயே பாலிவுட் சினிமா துறையை சேர்ந்த பலர் ஆர்வமாக ரேஞ்ச் ரோவர் வேலர் காரை வாங்குகின்றனர். அந்த வரிசையில் புதியதாக பிரபல பாடகர் குமார் சானு இணைந்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 15, 2025, 15:41 [IST]
English summary
Bollywood singer kumar sanu buys range rover velar luxury car
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+