பெரிய நடிகரா இருந்தாலும் இப்படியா!.. எக்சாஸ்ட் பைப்பிற்காக இப்படியா பணத்தை வாரி இரைக்கிறது?.. ஷாக்காயிட்டோம்!
இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஜான் ஆபிரகாமும் ஒருவர் ஆவார். இவர் மற்ற நடிகர்களில் இருந்து சற்றே மாறுபட்டவர் ஆவர். பெரும்பாலான நடிகர்கள் ஆடம்பர வகை கார் விரும்பிகளாக இருக்கின்ற சூழலில், நடிகர் ஜான் ஆபிரகாமோ பைக் காதலராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இதற்கு சான்றாக அவரிடத்தில் ஏகப்பட்ட சூப்பர் மற்றும் அரிய வகை பைக் மாடல்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், இவருக்கு பைக் மீதுள்ள அதீத ஆர்வத்தின் பிரபல பைக் உற்பத்தி நிறுவனமான அப்ரில்லா அவரை இந்தியாவிற்கான பிராண்ட் அம்பாசிடராக நியமித்துள்ளது.
சமீபத்திலேயே இந்த நிகழ்வு அரங்கேறியது. இதனைத் தொடர்ந்து நடிகர் ஜான் ஆபிரகாம் அப்ரில்லா ஆர்எஸ் 457 ஸ்போர்ட்ஸ் பைக் (Aprilia RS457 Sports Bike)-கை வாங்கினார். இந்த நிலையிலேயே தன்னுடைய சேகரிப்பில் மற்றுமொரு சூப்பர் பைக்காக அவர், அப்ரில்லா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி அல்ட்ரா டார்க் (Aprilia RSV4 Ultra Dark Edition) பதிப்பை இணைத்தார்.

இந்த பைக்கையே அவர் தற்போது எஸ்சி ப்ராஜெக்ட் ஜிபி-22 எக்சாஸ்ட்டைக் கொண்டு மேம்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ஜான் ஆபிரகாமின் இந்த செயல் அவருக்கு பைக் மீதுள்ள அதீத காதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த எக்சாஸ்ட் சிஸ்டத்தின் விலை ரூ. 1.7 லட்சம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
எஸ்சி ப்ராஜெக்ட் ஜிபி-22 எக்சாஸ்ட் அதன் மேம்பட்ட வடிவமைப்பிற்கும், செயல் திறனுக்கும் புகழ்பெற்றதாகக் காட்சியளிக்கின்றது. இதைக் கொண்டு அப்ரில்லா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி அல்ட்ரா டார்க் பைக் அலங்காரம் செய்யப்பட்டு இருப்பது, அந்த பைக்கிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது.
2022 மோட்டோஜிபி உலக சாம்பியன்ஷிப்பில், பிரபல ரைடர்களான அலீக்ஸ் எஸ்பர்காரோ மற்றும் மேவரிக் வினாலேஸ் ஆகியோர் இந்த எக்சாஸ்ட் சிஸ்டத்தையே தங்களுடைய பந்தய பைக் மாடலில் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எக்சாஸ்ட், ஒரு சிறப்பு டைட்டானியம் அலாய் மூலம் தயாரிக்கப்பட்டது மற்றும் 500 கிராம் எடை மட்டுமே கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், இந்த எக்சாஸ்ட் 8,000 ஆர்பிஎம்மில் கூடுதலாக 6 பிஎச்பி மற்றும் 6 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்ற உதவுகின்றது. இத்துடன், இந்த பைப்பில் இருந்து வெளிவரும் ஒலி அனைத்து விதமான பைக் காதலர்களையும் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. இத்தகைய புகை வெளியேற்றும் குழாயையே ஜான் ஆபிரகாம் தன்னுடைய லேட்டஸ்ட் கொள்முதல் பைக்கில் பயன்படுத்தி இருக்கின்றார்.
அவர் வாங்கியிருக்கும் அப்ரில்லா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி அல்ட்ரா டார்க் பைக்கின் மதிப்பு ரூ. 31.26 லட்சம் ஆகும். இந்த பைக்கில் 1,099 சிசி திறனை வெளியேற்றக் கூடிய வி4 எஞ்சினே பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13,000 ஆர்பிஎம்மில் 214 பிஎச்பி பவரையும், 10,550 ஆர்பிஎம்மில் 125 என்எம் டார்க் ஆற்றலையும் வெளிப்படுத்தும்.
மேலும், இந்த பைக்கில் சிறந்த ரைடு அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக முன் பக்கத்தில் 43 மிமீ அளவுள்ள அட்ஜஸ்டபிள் ஓஹ்லின்ஸ் யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் ஓஹ்லின்ஸ்-இன் எலெக்ட்ரிக்கல்லி கன்ட்ரோல்டு மோனோஷாக் முழு அட்ஜெஸ்ட் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுவே இந்த பைக்கை இந்தியாவிற்கு ஏற்ற பைக்காகம மாற்றி இருக்கின்றது.
இதேபோல், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக பைக்கின் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க்குடன் கூடிய பிரெம்போ 2 பிஸ்டன் காலிபர் பிரேக்கும், முன் பக்கத்தில் 330 மிமீ டிஸ்க்குடன் கூடிய பிரெம்போ ஸ்டைலிமோ மோனோபிளாக் ரேடியர் காலிபர்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும்.
இதுதவிர எஞ்சின் பிரேக்கிங் ஆப்ஷன், கார்னரிங் ஏபிஎஸ், வீலி கண்ட்ரோல், டிராக்சன் கண்ட்ரோல், லாஞ்ச் கன்ட்ரோல், ஸ்பீடு லிமிட்டர், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பை-டைரக்ஷனல் குயிக்-ஷிஃப்டர் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, 5 அங்குல டிஎஃப்டி கன்சோலும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுமாதிரியான சிறப்புகளைத் தாங்கிய பைக்கையே மேலும் சிறப்பானதாக மாற்றி இருக்கின்றார், ஜான் ஆபிரகாம். அவரின் இந்த மாதிரியான செயலே இந்தியாவில் அப்ரிலியா மோட்டார்சைக்கிள்களுக்கான பிராண்ட் தூதராகவும் ஆக்கியுள்ளது. மேலும், அவரை மிக சிறந்த பைக் காதலர் என்பதையும் வெளிக்காட்டியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








