இயக்குனர் வெற்றிமாறனை தொடர்ந்து விலை உயர்ந்த பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... எவ்ளோனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க!
பிரபல நடிகர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த பைக்கை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

திரைப்பட நடிகர்கள் பெரும்பாலும் சொகுசு கார்களை விரும்ப கூடியவர்களாக உள்ளனர். எனவே ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்களை திரைப்பட நடிகர்கள் அதிகளவில் வாங்குகின்றனர். இது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

இந்த சூழலில் ஒரு சில நடிகர்கள் பைக்குகள் மீது காதல் கொண்டவர்களாகவும் உள்ளனர். தமிழ் திரையுலகை பொறுத்தவரை அஜீத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். அதேபோல் பாலிவுட் திரையுலகிலும் ஏராளமான நடிகர்கள் பைக்குகளை அதிகம் நேசிக்க கூடியவர்களாக இருக்கின்றனர். இதற்கு ஷாகித் கபூர் (Shahid Kapoor) மிகச்சிறந்த உதாரணம்.

நீங்கள் மும்பையில் வசிக்க கூடியவர் என்றால், ஷாகித் கபூர் பைக்குகளில் வலம் வருவதை பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கிரிக்கெட் வீரர் டோனி மற்றும் நடிகர் அஜீத் ஆகியோரை போன்று ஷாகித் கபூரும் அவ்வப்போது சாலைகளில் சர்வ சாதாரணமாக பைக்குகளில் வலம் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

சொகுசு கார்களை ஓட்டுவதையும், அதில் பயணிப்பதையும் ஷாகித் கபூர் விரும்ப கூடியவர்தான். அதற்கு நிகராக பைக்குகளும் அவருக்கு மிகவும் பிடிக்கும். எனவே சந்தையில் கிடைக்கும் சக்தி வாய்ந்த மற்றும் அனைவரையும் கவர்ந்து இழுக்க கூடிய தோற்றம் கொண்ட பல்வேறு பைக்குகள் ஷாகித் கபூரின் வீட்டில் இருக்கின்றன.

ஷாகித் கபூரிடம் இருப்பதில், ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் (Harley-Davidson Fat Boy), பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் (BMW G 310 R) மற்றும் யமஹா எம்டி-01 (Yamaha MT-01) ஆகிய பைக்குகள் குறிப்பிடத்தக்கவை. இந்த சூழலில், ஷாகித் கபூர் தனது பைக் கலெக்ஸனில் மற்றொரு பைக்கையும் சமீபத்தில் புதிதாக சேர்த்துள்ளார்.

அவர் இம்முறை வாங்கியிருப்பது டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 (Ducati Scrambler 1100) பைக் ஆகும். எனவே இந்த பைக்குடனும் ரசிகர்கள் ஷாகித் கபூரை சாலையில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நாளுக்காக ஷாகித் கபூரின் ரசிகர்களும், டுகாட்டி பைக் ஆர்வலர்களும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கில், 1100 சிசி, 'L' ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 83 பிஹெச்பி பவரையும் மற்றும் 4,750 ஆர்பிஎம்மில் 88 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. செயல்திறன் மிக்க இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த இன்ஜின் தேர்வுடன், ரைடர்களுக்கு தேவையான பல்வேறு அதிநவீன வசதிகளையும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் பெற்றுள்ளது. இதன்படி டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கில், ட்யூயல் சேனல் ஏபிஎஸ், எல்சிடி கன்சோல், ரைடிங் மோடுகள் மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் வெறும் 3.7 வினாடிகளில் எட்டி விடும். அதே சமயம் இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 209 கிலோ மீட்டர்களாக உள்ளது. பொதுவாக டுகாட்டி நிறுவனத்தின் பைக்குகள் விலை உயர்ந்தவை ஆகும். இதற்கு டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கும் விதிவிலக்கு அல்ல.

இந்திய சந்தையில் 11 லட்ச ரூபாய் முதல் 13.7 லட்ச ரூபாய் வரையிலான விலையில் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் கிடைக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கில் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் அசுரன் என பல்வேறு வெற்றி படங்களை வழங்கிய இயக்குனரான வெற்றிமாறன் சமீபத்தில் விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கியிருந்தார். இந்த செய்தியை நீங்கள் படித்திருக்க கூடும். இந்த வரிசையில் ஷாகித் கபூர் வாங்கியுள்ள விலை உயர்ந்த பைக்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications








