பாலிவுட் நட்சத்திரங்களும், அவர்களது காஸ்ட்லி பைக் மாடல்களும்...!!

By Saravana

பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களது அந்தஸ்தின் அடையாளமாக கருதுவதில் முக்கிய இடம்பெறுவது விலை உயர்ந்த கார்களும், பைக்குகளும்தான். பெரும்பாலும் நடிகர்கள்தான் பைக் காதலர்களாக இருப்பதை பார்த்திருப்பீர்கள்.

ஆனால், பாலிவுட்டின் சில முன்னணி நடிகைகள் கூட விலை உயர்ந்த பைக்குகளில் ஓய்வு நேரங்களில் ஒரு ரவுண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் வைத்திருக்கும் விலை உயர்ந்த பைக் மாடல்களை உங்களது பார்வைக்கு வழங்குகிறோம்.

 பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

உலக அழகி பட்டம் வென்றதன் மூலமாக, தமிழன் படம் மூலமாக அறிமுககமான பிரியங்கா சோப்ரா இன்று இந்தி திரைப்பட உலகின் முன்னணி நாயகிகளில் ஒருவர். துணிச்சல் மிகுந்த பிரியங்கா சோப்ரா ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கை வைத்திருக்கிறார். இந்த பைக்கின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

பிரியங்கா சோப்ரா பைக் தொடர்ச்சி

பிரியங்கா சோப்ரா பைக் தொடர்ச்சி

ஆம், உலகம் முழுவதும் நடிகைகள் விரும்பும் பிரத்யேக வண்ணமான இளஞ்சிவப்பு நிறத்தில், தனது ஹார்லி பைக்கை கஸ்டமைஸ் செய்து வாங்கியுள்ளார். மேலும், சில முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தனது ஹார்லி பைக்கில் வந்து இறங்கி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். மும்பை சாலைகளில் பிங்க் வண்ண ஹார்லி டேவிட்சனை பார்த்தால், அது நிச்சயம் பிரியங்கா சோப்ராவாக இருக்கலாம். இந்த பைக்கை ரூ.6 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

விவேக் ஒபராய்

விவேக் ஒபராய்

விவேக் ஒபராயிடம் இரண்டு விலையுயர்ந்த பைக்குகள் உள்ளன. ஒன்று டுகாட்டி 1098 சூப்பர் பைக். மற்றொன்று யமஹா வி-மேக்ஸ். இதில், டுகாட்டி 1098 சூப்பர் பைக் ரூ.49 லட்சம் விலை மதிப்பு கொண்டது. அடுத்து யமஹா வி- மேக்ஸ் பைக் ரூ.23 லட்சம் விலை மதிப்பு கொண்டது.

 உதய் சோப்ரா

உதய் சோப்ரா

தூம் வரிசையில் வெளியான ஆக்ஷன் இந்தி படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவை. அந்த படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பல பைக்குகளுக்கு சொந்தக்காரர் இந்த உதய் சோப்ராதான். நடிகர், உதவி இயக்குனர், திரைக்கதையாசிரியர் என பன்முகம் கொண்ட வித்தகர். இவரிடம் ரூ.16 லட்சம் மதிப்புடைய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்ஆர் உள்பட பல சுஸுகி பைக்குகள் உள்ளன. இவர் சுஸுகி பைக் பிரியரும் கூட.

நீல் நிதின் முகேஷ்

நீல் நிதின் முகேஷ்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக மாறியிருக்கும் நீல் நிதின் முகேஷ் சமீபத்தில் டுகாட்டி 848 பைக்குடன் பாலிவுட்டின் சூப்பர் பைக் கிளப்பில் ஐக்கியமாகியுள்ளார். இந்த பைக் ரூ.16 லட்சம் மதிப்புடையது.

 சல்மான்கான்

சல்மான்கான்

அதிக ரசிகர்களை கொண்ட இந்தி நடிகர்களில் ஒருவரான சல்மான்கானின் மோட்டார் உலகம் மிகப்பெரியது. ஆனாலும், அவர் மிகவும் விரும்புவது சுஸுகி சூப்பர் பைக்குகளைதான். அதற்காகவே, சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார். இவரிடம் ரூ.16 லட்சம் மதிப்புடைய சுஸுகி இன்ட்ரூடர் எம்1800ஆர்இசட், ரூ.15 லட்சம் மதிப்புடைய சுஸுகி ஹயபுசா போன்ற பைக் மாடல்கள் உள்ளன. இவரது கராஜில் கார், பைக்குகள் வரிசை கட்டி நின்றாலும், இந்த சுஸுகி பைக் மாடல்களுக்கு சல்மான்கான் மனதில் தனி இடமுண்டு.

ஜான் ஆபிரஹாம்

ஜான் ஆபிரஹாம்

ஜான் ஆபிரஹாம் வாகன பிரியர். ஆடி கார்களை மிகவும் விரும்பும் அதே நேரத்தில் பைக்குகள் என்றால் மிகவும் உற்சாகமாகிவிடுவார். அத்துடன், புதிதாக வரும் சூப்பர் பைக்குகளை ஓட்டி பார்த்து, பிடித்திருந்தால் உடனே ஆர்டரும் செய்து விடுவார். அந்த அளவு பைக் மீது பிரியம் கொண்டிருக்கும் ஜான் ஆபிரஹாமிடம் ரூ.25 லட்சம் மதிப்புடைய அப்ரிலியா ஆர்எஸ்வி4 பைக், ரூ.23 லட்சம் மதிப்புடைய யமஹா வி-மேக்ஸ், ரூ.10 லட்சம் மதிப்புடைய யமஹா எம்டி-01, ரூ.14 லட்சம் மதிப்புடைய யமஹா ஆர்1, ரூ.9 லட்சம் மதிப்புடைய யமஹா ரேவன், ரூ.17 லட்சம் மதிப்புடைய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்புடைய சுஸுகி ஹயாபுசா என பல பிராண்டுகளின் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகள் இவரது கராஜை அலங்கரிக்கக்கின்றன.

சஞ்சய் தத்

சஞ்சய் தத்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சஞ்சய் தத் சமீபத்தில் 4 ஆண்டு கால சிறைத் தண்டனைக்கு பின்னர் விடுதலையாகியுள்ளார். தனது சிறைவாச அனுபவத்தை புத்தகமாக எழுத தீர்மானித்திருக்கும் சஞ்சய் தத் இனி தனது பிரம்மாண்ட கராஜ் பக்கம் தீவிர கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கலாம். ரோல்ஸ்ராய்ஸ் உள்பட பல விலை உயர்ந்த கார்களை வைத்திருக்கும் இவரிடம் ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் மோட்டார்சைக்கிள் உள்ளது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம்.

ஷாகீத் கபூர்

ஷாகீத் கபூர்

இந்தி நடிகர் ஷாகீத் கபூரிடம் ரூ.10 லட்சம் மதிப்புடைய யமஹா எம்டி-01, ரூ.15 லட்சம் மதிப்புடைய ஹார்லி டேவிட்சன் பைக்குகள் உள்ளன.

சயீப் அலிகான்

சயீப் அலிகான்

பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகானிடம் ரூ.7 லட்சம் மதிப்புடைய ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பைக் உள்ளது. ஆனால், அவரது மனைவியும், பாலிவுட் நடிகையுமான கரீனா கபூருக்கு பைக் என்றாலே அலர்ஜியும். எனவே, அவ்வப்போது மும்பை சாலைகளில் சோலோ ரைடு செல்கிறார் சயீப் அலிகான்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

ஜான் ஆபிரஹாம் போலவே அதிக சூப்பர் பைக்குகளை வைத்திருக்கும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடுமாறிக்கொண்டிருந்த வேளையில், அவரது தந்தை ஒரு ஹோண்டா பைக்கை வாங்கி அக்ஷய் குமாருக்கு கொடுத்தாராம். ஆனால், இன்று ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் விளம்பர தூதராக வலம் வருகிறார். அக்ஷய் குமாரிடம் 13 லட்ச ரூபாய் மதிப்புடைய கஸ்டமைஸ்டு ஹோண்டா சிபிஆர் பைக் உள்ளது.

ஷ்ரதா கபூர்

ஷ்ரதா கபூர்

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டில் வலம் வருகிறார் பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர். ஓ கண்மணி படத்தின் இந்தி ரீமேக்கில் இவர் நாயகியமாகி ஒப்பந்தமாகியுள்ளார்.

குல் பணாக்

குல் பணாக்

பிரபல இந்திய நடிகை குல் பணாக் சாகச பயண விரும்பி. அவ்வப்போது, வாகனங்களில் சாகசப் பயணங்களை மேற்கொள்வது இவரது வழக்கம். வாகனங்கள் மீது அதீத பிரியம் கொண்ட இவரிடம் புல்லட் மோட்டார்சைக்கிள் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, March 7, 2016, 11:46 [IST]
English summary
Here's looking at Bollywood stars and their cool bike rides.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+