இவ்வளவு விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரா... பிரபல நடிகை வாங்கியுள்ள ஜிஎல்எஸ்600!! விலையை பாருங்களேன்...
பிரபல பாலிவுட் நடிகையும், நடிகர் ரன்வீர் சிங்கின் மனைவியுமான தீபிகா படுகோனே ரூ.2.80 கோடி மதிப்பிலான பென்ஸ் கார் ஒன்றை புதியதாக வாங்கியுள்ளார். இதுகுறித்த இன்ஸ்டாகிராம் பதிவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எத்தனை கார்கள் தான் தங்களது கேரேஜில் நின்று கொண்டிருந்தாலும் சினிமா பிரபலங்கள் சந்தையில் புதியதாக அறிமுகமாகும் சொகுசு கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவர் என்பது நமக்கு தெரிந்த விஷயமே. அதிலிலும் பாலிவுட் நடிகர், நடிகையினர் வைத்துள்ள லக்சரி கார்களின் லிஸ்ட் மிக பெரியது.

அத்தகையவர்களில் ஒருவர் தான் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. பாலிவுட் நடிகை என்பதை சொல்வதை காட்டிலும் இந்திய நடிகை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இவர் நேரடி தமிழ் படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, பிற மாநில மொழி படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். இவரது கணவர் ரன்வீர் சிங்கும் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் ஆவார்.

இந்த நிலையில் தீபிகா படுகோனே மெர்சிடிஸ்-மேபக் பிராண்டின் புதிய லக்சரி எஸ்யூவி காரான ஜிஎல்எஸ்600 காரை வாங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள படத்தில் பளபளப்பான அடர் நீல நிறத்தில் காட்சி தரும் மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 காரின் அருகிலோ அல்லது உள்ளேயோ தீபிகா படுகோனேவை பார்க்க முடியவில்லை.

ஆனால், இந்த கார் தீபிகா படுகோனேவிற்கு சென்று சேரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவேளை டெலிவிரிக்கு செய்யப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட படமாக இது இருக்கலாம். இருப்பினும், காரில் ஆர்டிஓ அலுவலக பதிவெண் பொருத்தப்பட்டுள்ளது. இது சற்று சந்தேகத்தை கிளப்பவே, காரின் பதிவெண்ணை பரிவாஹன் இணையத்தள பக்கத்தில் ஆராய்ந்து பார்த்ததில், தீபிகா பிரகாஷ் படுகோனே என்கிற பெயரில் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் ஒன்றில் இந்த மெர்சிடிஸ் கார் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்சமயம் ரூ.2.8 கோடியை எக்ஸ்-ஷோரூம் விலையாக கொண்டுள்ள மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 காரை நடிகை தீபிகா படுகோனேவின் கணவர் நடிகர் ரன்வீர் சிங் கடந்த 2021 ஜூன் மாதத்திலேயே தனது 36வது பிறந்தநாளை முன்னிட்டு வாங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்வீர் சிங்கின் ஜிஎல்எஸ்600 காரும் அடர் நீல நிறத்தை கொண்டது ஆகும். மெர்சிடிஸ்-மேபக் நிறுவனத்தின் மிகவும் விலையுயர்ந்த லக்சரி காரான ஜிஎல்எஸ்600 எஸ்யூவியின் உட்புற கேபினும் வெளிப்புற தோற்றத்திற்கு ஏற்ப நப்பா லெதர் என்ற பிரீமியம் தரத்திலான லெதரால் அலங்கரிக்கப்படுகிறது. அத்துடன் எலக்ட்ரானிக் பனோராமிக் சன்ரூஃப், மடக்கும் வசதி கொண்ட மஸாஜ் இருக்கைகள் உள்ளிட்ட பிரீமியம் தரத்திலான அம்சங்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 கார் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதில் 4.0 லிட்டர் வி8 என்ஜின், 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரிட் அமைப்புடன் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அமைப்பின் மூலமாக 557 பிஎஸ் & 730 என்எம் டார்க் திறனை பெற முடியும். அதுவே ஹைப்ரிட் அமைப்பின் வாயிலாக கூடுதலாக 22 பிஎஸ் & 250 என்எம் டார்க் திறனை பெறலாம்.

இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 காரை தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் மட்டுமின்றி க்ரிட்டி சனோன், அர்ஜூன் கபூர் என ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்களும் வைத்துள்ளனர். நடிகர் ரன்வீர் சிங்கிடம் இந்த மெர்சிடிஸ் கார் மட்டுமில்லாமல், லம்போர்கினி உருஸ் பேர்ல் கேப்சூல் எடிசன் காரும் உள்ளது.


Click it and Unblock the Notifications








