மின்னல் வேகத்தில் செல்லும் தனி விமானத்தில் பறந்து சென்ற கௌதம் அதானி... வைரலாகும் வீடியோ!
உலக பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி இடம் இல்லாத வாகனங்களே இருக்க முடியாது என கூறலாம். இவரிடத்தில் எண்ணற்ற சொகுசு மற்றும் ஆடம்பர வசதி கொண்ட கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதேபோல், அவரிடத்தில் விலையுயர்ந்த விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் சிலவும் பயன்பாட்டில் இருக்கின்றன.
அப்படியான அதானிக்கு சொந்தமான ஓர் விமானத்திலேயே அவர் விறுவிறுப்பாக கிளம்பிச் செல்லும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வாயிலாகவே அவர் தனது சொந்த தனி நபர் விமானம் வாயிலாக புறப்பட்டு இருக்கின்றார்.

விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் செடான் ரக சொகுசு காரில் வந்திறங்கிய அவர், பிரைவேட் ஜெட்டில் ஏறும் காட்சிகளும், அந்த விமானம் அவர் ஏறிய உடன் பறப்பதற்கு கிளம்பும் காட்சிகளே தற்போது வெளியாகி உள்ளன. கௌதம் அதானியின் விமானம் காட்சிக்குள்ளாவது இதுவே முதல் முறையாகும்.
இவ்வளவு தெளிவாக இதற்கு முன்னதாக அவ்விமானம் காட்சியளித்ததில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. பாம்பார்டியர் குளோபல் 6500 (Bombardier Global 6500) பிரைவேட் ஜெட்டையே அவர் வைத்திருக்கின்றார். நவீன மற்றும் ஆடம்பர வசதிகளுக்கு பெயர்போன பிரைவேட் ஜெட் இதுவாகும். உலக அளவில் குறிப்பிட்ட சில செல்வந்தர்கள் மட்டுமே இந்த விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்களில் கௌதம் அதானியும் ஒருவர் ஆவார். கௌதம் அதானி உடன் சேர்ந்து அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங்கும் அந்த விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகின்றது. இந்த பிரைவேட் ஜெட்டின் மதிப்பு 53 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது, இந்தி ரூபாய் மதிப்பில் ரூ. 500 கோடி ஆகும்.
உலக தரம் வாய்ந்த நட்சத்திர விடுதிகளில் காணப்படக் கூடிய சகல வசதிகளும் இந்த விமானத்தில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், அதீத பாதுகாப்பு திறன் கொண்டதாகவும் பாம்பார்டியர் குளோபல் 6500 வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. எனவேதான் பிரைவேட் ஜெட் உலகில் இந்த விமானத்திற்கு என்று தனி மவுசு நிலவுகின்றது.

13 முதல் 17 பேர் வரை இந்த விமானத்தில் பயணிக்க முடியும். இரு எஞ்ஜின் கொண்ட விமானம் இதுவாகும். வழக்கமான பயணிகள் விமானங்களைவிட இது அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் அதிகபட்ச க்ரூஸிங் வேகம் 516 ஆகும்.
6,145 அடி நீள ஓடு தளமே இது டேக்-ஆஃப் செய்ய போதுமானதாக இருக்கின்றது. மேலும், 2,236 நீள இடை வெளியிலேயே இது லேண்டிங்கும் ஆகிவிடும். இத்தகைய சிறப்புகள் கொண்ட பிரைவேட் ஜெட்டையே கௌதம் அதானி தற்போது பயன்படுத்தி வருகின்றார். இதேபோல் விமான நிலையத்திற்குள் வர அவர் பயன்படுத்திய வாகனம் மிக மிக அதிக விலைக் கொண்டதாகவும், பாதுகாப்பு திறன்மிக்கதாகவும் இருக்கின்றது.
புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரிலேயே அவர் விமானம் நிலையம் வந்திருக்கின்றார். இந்த வாகனத்தில் அவர் காட்சியளிப்பது இதுவே முதல் முறையாகும். மிக மிக அதிக சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகள் கொண்ட இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 1.5 கோடிகள் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் மதிப்பு மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் பலமடங்கு அதிகமானதாகக் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மசாஜ் செய்யும் வசதிக் கொண்ட இருக்கை, பொழுதுபோக்கிற்கான திரைகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், லெதர் இருக்கைகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிமோட் கன்ட்ரோல் பார்க்கிங், எலெக்ட்ரிக் அட்ஜஸ்டபிள் இருக்கைகள் என பன்முக அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









