'இந்திய மஹாராஜாக்களும், கார்களும்' புத்தகம் டெல்லியில் வெளியீடு

மஹாராஜாக்கள் பயன்படுத்திய கார்கள், அதில் இருந்த வசதிகள் பற்றி இந்த புத்தகத்தில் சுவைபட கூறப்பட்டுள்ளது. மேலும், கார்களை அவர்கள் தேர்வு செய்தவிதம், கார்களால் இந்திய மஹாராஜாக்களுக்கும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கும் அவர்களுக்கு இருந்த தொடர்புகள் குறித்தும் பல அரிய தகவல்கள் மற்றும் கார் புகைப்படங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த புத்தகத்தின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு சில மாதங்களுக்கு முன் பிரான்சில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ஆங்கில பதிப்பு டெல்லியிலுள்ள பிரெஞ்சு தூதரகத்தில் நடந்த விழாவில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் ஜெரோம் போனோபான்ட் வெளியிட்டார்.
இதுகுறித்து புத்தக ஆசிரியர் கவுதம் சென் கூறுகையில்," பிரெஞ்சு மொழியில் இந்த புத்தகத்தை முதலில் வெளியிட்டதற்கு பல காரணங்கள் உள்ளன. நான் தற்போது பிரான்சில் வசித்து வருகிறேன். எனது மனைவியும் பிரான்சை சேர்ந்தவர். மேலும், இந்திய மஹாராஜாக்கள் அவரது ஆடம்பர வாழ்க்கை குறித்து பிரான்ஸ் மக்கள் பலர் நன்கு அறிந்து வைத்துள்ளதால், முதலில் பிரெஞ்சு மொழியில் இந்த புத்தகத்தை வெளியிட்டேன்," என்றார்.
டெல்லி பிரெஞ்சு தூதரகத்தில் நடந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது, மஹாராஜாக்கள் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் லீ பரோன் கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது, விழாவில் கலந்துகொண்டவர்களை வெகுவாக கவர்ந்தது.


Click it and Unblock the Notifications








