தட்கல் டிக்கெட் புக் பண்ணும் போது பிரச்சனை வந்துட்டே இருக்குதா? இந்த டெக்னிக்கை ட்ரை பண்ணி பாருங்க!

ஐஆர்சிடிசி தளத்தில் பலர் தட்கல் டிக்கெட்டை புக்கிங் செய்யும் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு டிக்கெட் புக் செய்ய முடியாத நிலையைச் சந்தித்து வருகின்றனர். ஆனால் பிரச்சனை ஏற்படாத வண்ணம் ஐஆர்சிடிசி டிக்கெட் பணப் பரிவர்த்தனைக்கு ஒரு சுலபமான வழியை வைத்திருக்கிறது. பலருக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாது. ஆனால் இதைப் பயன்படுத்தினால் டிக்கெட் புக்கிங் செய்யும் போது ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கலாம். இது என்ன முறை? இதை எப்படிப் பயன்படுத்துவது? விரிவாகக் காணலாம் வாருங்கள்.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்வதற்காக ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் புக் செய்கின்றனர். அவசர பயணத்திற்காகப் பலர் தட்கல் டிக்கெட்டை புக்கிங் செய்கின்றனர். இப்படியாக தட்கல் டிக்கெட்டை புக் செய்யும் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் மீண்டும் முதலிலிருந்து டிக்கெட்டை புக் செய்ய வேண்டியது இருக்கும். இப்படிச் செய்தால் அதற்குள் டிக்கெட் காலியாகிவிடும். இப்படியான நேரங்களில் எளிதாக டிக்கெட்டை புக் செய்யப் பலர் முன்னேற்பாடாகப் பல விஷயங்களைச் செய்து வைத்திருப்பார்கள்.

தட்கல் டிக்கெட் புக் பண்ணும் போது பிரச்சனை வந்துட்டே இருக்குதா? இந்த டெக்னிக்கை ட்ரை பண்ணி பாருங்க!

உதாரணமாக தட்கட் டிக்கெட் ஓப்பன் செய்யப்படும் முன்பே பயணிகளுக்கான பட்டியலை ஏற்றி வைத்திருப்பது, கையில் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றைத் தயாராக வைத்திருப்பது, பயணம் குறித்த தகவல்களைச் சரியாக வைத்திருப்பது என எல்லாம் செட் செய்து வைத்திருப்பார்கள். தட்கல் டிக்கட் ஓப்பன் ஆனதும் உடனடியாக சென்று புக் செய்துவிடுவார்கள். இப்படியாக டிக்கெட் புக் செய்யும் பலருக்கு பணம் செலுத்தும் போது பேங்க் வெப்சைட்டில் தான் பிரச்சனை ஏற்படும்.

இதை தடுக்க ஒரு யுக்தி இருக்கிறது. இதை தான் இங்கே காணப்போகிறோம். ஐஆர்சிடிசி நிறுவனம் தங்கள் பயனர்களுக்கான இ வாலட் என்ற ஒரு சிஸ்டத்தை வைத்திருக்கிறது. அதன்படி அந்த வாலெட்டில் பணத்தை முன்னரே ஏற்றி வைத்துக்கொண்டால் தட்கல் டிக்கெட்டை புக் செய்யும் போது அந்த பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தேவையில்லாமல் வங்கி வெப்சைட்டிற்கு சென்று பணம் செலுத்த வேண்டியதில்லை. இதனால் தட்கல் டிக்கெட்டை புக் செய்யும் போது இடையில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு குறையும், தட்கல் டிக்கெட்டும் புக் ஆக அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.

இதை இ-வாலெட்டை பயன்படுத்துவதால் சுலபமாகவும் பாதுகாப்பாகவும் பணத்தைப் பரிவர்த்தனை செய்ய முடியும். வங்கி கணக்கிலிருந்து பணத்தைச் செலுத்துவதை விட குறைந்த நேரத்தில் இதிலிருந்து பணத்தை செலுத்திவிட முடியும். அதே போல ஒவ்வொரு ரயில் டிக்கெட் புக்கிங்கிற்கும் பேமெண்ட் கேட்வே கட்டணத்தைச் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. டிக்கெட்டிற்கான காசை மட்டும் செலுத்தினால் போதும். ஆன்லைனிலேயே பணத்தைப் போட்டு ஆன்லைனிலேயே பரிவர்த்தனை செய்யலாம். குறிப்பிட்ட நேரத்தில் வங்கி வெப்சைட் வேலை செய்யுமா என்ற கவலை வேண்டாம், ஐஆர்சிடிசி வேலை செய்தாலே இந்த வாலெட்டும் வேலை செய்யும்.

இந்த ஐஆர்சிடிசி இ-வாலெட்டை பயன்படுத்தப் பயனர் தனது பான் அல்லது ஆதார் கார்டை வெரிஃபை செய்ய வேண்டும். ஐஆர்சிடிசி இந்த இ-வாலெட்டிற்கு ஒரு டிரான்ஷாக்ஷன் பாஸ்வேர்டு அல்லது பின் நம்பரை வழங்குகிறது. அதனால் பரிவர்த்தனையின் போது நாம் அந்த பாஸ்வேர்டை கொடுத்தால் மட்டுமே வாலெட்டிலிருந்து பணம் போகும், இதனால் பணம் பாதுகாப்பாக இருக்கும். இதுவரை இ-வாலெட்டிலிருந்து எவ்வளவு பணம் எந்த டிக்கெட்டிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு பணம் உள்ளே வந்துள்ள என அத்தனை தகவல்களும் சேமிக்கப்பட்டிருக்கும்.

ஐஆர்சிடிசியில் டிக்கெட்டை இந்த இ-வாலெட்டிலிருந்து புக் செய்து பின்னர் கேன்சல் செய்தால் ரீஃபன்ட் பணம் முழுவதும் இந்த வாலெட்டிற்கு மறுநாளே வந்துவிடும். இந்த பணத்தை நாம் மறுநாளே பயன்படுத்த முடியும். இந்த இ-வாலெட்டை பயன்படுத்தப் பதிவு கட்டணமாக ரூ50 மற்றும் சேவை வரியைச் செலுத்த வேண்டும். அதன்பின் பரிவர்த்தனை கட்டணமாக ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு ரூ10 மற்றும் சேவை வரியைச் செலுத்தவேண்டும். இந்த வாலாட்டில் ஒரு முறை பணத்தை ஏற்றிவிட்டால் அதைத் திரும்பப் பணமாக எடுக்க முடியாது.

இந்த வாலெட்டில் உள்ள பணத்தை வைத்து ரயில் டிக்கெட்களை மட்டுமே புக்கிங் செய்ய முடியும். ரயில்வே வழங்கும், உணவு டெலிவரி மற்றும் பிற சேவைகளுக்கு இந்த வாலெட்டில் உள்ள பணத்தைச் செலவு செய்ய முடியாது. இந்த வாலெட்டை இந்தியக் குடியுரிமை கொண்டவர்கள் மட்டுமே அதுவும் இந்திய மொபைல் எண் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். வெளிநாட்டினருக்கு இதைப் பயன்படுத்த அனுமதியில்லை.

இந்த சேவையைப் பயன்படுத்த நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் ஐஆர்சிடிசி ஆப்பில் லாக்கின் செய்து கொள்ளுங்கள், அதில் பிளான் மை டிராவல் பக்கத்தில் ஐஆர்சிடிசி இ-வாலெட் ரிஜிஸ்ட்ரேஷன் என்ற ஒரு பட்டன் இருக்கும் அதைப் பயன்படுத்திப் பதிவு செய்ய வேண்டும். அதில் ஆதார் அல்லது பான் எண்ணைச் சரிபார்த்த பின்பு பதிவு கட்டணமாக ரூ50 மற்றும் சேவை வரியை செலுத்தவேண்டும். அதன்பின் வாலெட் உருவாக்கப்பட்டுவிடும். அந்த வாலெட்டில் நீங்கள் குறைந்தது ரூ100 முதல் அதிகபட்சமாக ரூ10ஆயிரம் வரை பணத்தைப் போட்டு டிக்கெட்டை புக் செய்து கொள்ளலாம். டிக்கெட் புக் செய்யும் போது ஐஆர்சிடிசி வாலெட்டும் மற்ற தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் அதைத் தேர்வு செய்து புக் செய்ய வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Book your tatkal ticket easily by using irctc e wallet
Story first published: Monday, December 5, 2022, 12:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X