பல கோடி ரூபாய் கார்களுடன் ஆயுத பூஜை கொண்டாடியது அவரா! இவருக்கு முன்னாடி அம்பானிலாம் ஓரமாதான் நிக்கணும்!

கர்நாடக மாநிலம் பெங்களூர் (Bangalore) நகரை சேர்ந்த நிறுவனம் ப்ரன் கார்ப்பரேஷன் (Bren Corporation). இது மிகவும் பிரபலமான ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் (Real Estate Developers) நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருப்பவர் பூபேஷ் ரெட்டி (Boopesh Reddy). இவரையும், இவரது சூப்பர் கார்களையும் நீங்கள் இதற்கு முன்பாக இணையத்தில் பார்த்திருக்கலாம். இந்த வரிசையில் பூபேஷ் ரெட்டியின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Boopesh Reddy Ayudha Pooja Celebration With Super Cars

இந்த வீடியோவில் தனது சூப்பர் கார்களுடன் (Super Cars) அவர் ஆயுத பூஜை (Ayudha Pooja) கொண்டாடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அவரது வீட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோவில் அவரது நிறைய கார்கள் காட்டப்பட்டுள்ளன. இது நமக்கு பிரம்மிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

பூபேஷ் ரெட்டியின் கார் கலெக்ஸனில் உள்ள கார்களின் பெயர்களை ஒவ்வொன்றாக கூறுகிறோம். இடை இடையே கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொண்டு படியுங்கள். லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ (Lamborghini Huracan STO), லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜே (Lamborghini Aventador SVJ) மற்றும் லம்போர்கினி முர்சிலகோ (Lamborghini Murcielago) உள்ளிட்ட கார்கள் அவரிடம் இருக்கின்றன.

Boopesh Reddy Super Cars

இதுதவிர ஃபெராரி எஸ்எஃப்90 ஸ்ட்ராடேல் (Ferrari SF90 Stradale), ஃபெராரி 488 பிஸ்டா (Ferrari 488 Pista), ஃபெராரி 458 ஸ்பிலாலே (Ferrari 458 Speciale), ஃபெராரி 296 ஜிடிபி (Ferrari 296 GTB) மற்றும் ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் (Ferrari 812 Superfast) ஆகிய கார்களும் கூட, பூபேஷ் ரெட்டியிடம் இருக்கின்றன. இருங்கள். இந்த பட்டியல் இன்னும் முடியவில்லை.

போர்ஷே 911 ஆர் (Porsche 911 R), போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் (Porsche 911 GT2 RS), போர்ஷே கேமென் ஜிடி4 (Porsche Cayman GT4), போர்ஷே 911 கரெரா எஸ் (Porsche 911 Carrera S), போர்ஷே 911 ஜிடி3 ஆர்எஸ் (Porsche 911 GT3 RS) மற்றும் போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S) ஆகிய கார்களையும் அவர் வைத்துள்ளார்.

சரி, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து கொள்ளுங்கள். இப்ப மறுபடியும் ஆரம்பிக்கலாமா? மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (Mercedes-AMG G63), மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி (Mercedes-Benz SLS AMG), மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ் (Mercedes-AMG GT Black Series) ஆகிய கார்களையும் பூபேஷ் ரெட்டி வைத்துள்ளார். தலை சுற்றுகிறதா?

இந்த விலை உயர்ந்த கார்களுடன் டுகாட்டி 1098 (Ducati 1098) மற்றும் யமஹா ஆர்எக்ஸ்100 (Yamaha RX100) ஆகிய பைக்குகளையும் பூபேஷ் ரெட்டி வைத்துள்ளார். உங்கள் சிரமம் புரிகிறது. எனவே இத்துடன் நிறுத்தி கொள்கிறோம். ஆனால் இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான கார் கலெக்ஸனை வைத்துள்ளவர்களின் பட்டியலில் பூபேஷ் ரெட்டிக்கு நிச்சயம் இடம் உண்டு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது போன்ற ஒரு ஆயுத பூஜை கொண்டாட்டத்தை நம்மில் நிறைய பேர் பார்ப்பது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும். பூபேஷ் ரெட்டி வரும் காலங்களில் இன்னும் நிறைய சூப்பர் கார்களை வாங்கி குவிக்க டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 27, 2023, 17:57 [IST]
English summary
Boopesh reddy ayudha pooja celebration with super cars viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+