அம்பானி, அதானி எல்லாம் ஓரமா போ! இவர் கிட்ட இருக்குற காரை பார்க்க இரண்டு கண் போதாது நமக்கு!

இந்தியா முழுவதும் தற்போது ஆயுத பூஜை நடந்து முடிந்த நிலையில் பல பிரபலங்கள் தங்கள் காஸ்ட்லியான கார்களுக்கு ஆயுத பூஜை நடத்திய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதன்படி பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது காஸ்ட்லியான கார்களுக்கு ஆயுத பூஜை நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் அவர் பயன்படுத்தி வரும் கார்கள் பலரை பிரமிக்க வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா முழுவதும் தற்போது பண்டிகை காலம் கோலாகலமாக நடந்து வருகிறது. முக்கியமாக நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக இந்தியாவின் முழுவதும் பல்வேறு விதமான பகுதிகளில் பல்வேறு விதமான பெயர்களில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. பொதுவாக ஆயுத பூஜை என்று பலர் தங்களது தொழில் கருவிகள் மற்றும் ஆயுதங்களுக்கு பூஜை போடுவது வழக்கம்.

Boopesh reddy ayudha pooja

இப்படியாக ஆயுத பூஜை என்று பலர் தங்கள் வாகனங்களை சுத்தப்படுத்தி அதற்கு பூஜை போடுவார்கள். வாகனங்கள் என்பது ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான தேவை என்பதால் அந்த வாகனத்திற்கு ஒரு நாள் கவனிக்கும் விதமாக இந்த பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பல செலிபிரிட்டிகள் மற்றும் பிரபலங்கள் தங்கள் சொகுசு கார்களுக்கும் பூஜை போடுவது வழக்கம்.

இப்படியாக பெங்களூருவில் உள்ள போரன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ள பூபேஷ் ரெட்டி தனது கார்களுக்கு பூஜை போட்டு உள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிபராக இருக்கிறார். இது மட்டுமல்லாமல் போரன் கராஜ் என்ற பெயரில் இவர் சூப்பர் கார்களுக்கான கராஜையும் வைத்துள்ளார்.

Boopesh reddy ayudha pooja

இந்த கராஜ்களில் உள்ள இவரது சூப்பர் கார்களுக்கு இவர் ஆயுத பூஜை கொண்டாடினார். இந்த கார்களை எல்லாம் வட்டமான ஒரு இடத்தில் நிறுத்தி அதற்கு முன்பு பூஜை செய்து இவர் ஆயுத பூஜை கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர்களிடம் இந்தியாவிலேயே வெகு சிலரிடம் மட்டும் இருக்கும் பல்வேறு விதமான சூப்பர் கார்கள் இருக்கின்றன.

ஃபெராரி நிறுவனத்தின் 458 Speciale, லாம்போர்கினி ஹாரகேன், லாம்போர்கினி உரூஸ், லாம்போர்கினி அபென்டேட்டர் எஸ்விஜே மற்றும் லம்போகினி Murcielago உள்ளிட்ட கார்கள் சூப்பர் கார்களாக இவரிடம் உள்ளது. இது முழுமையான கார் பட்டியல் அல்ல இவரிடம் இன்னும் ஏராளமான கார்கள் பட்டியிலில் இருக்கிறது. முழுமையான கார் பட்டியலை பார்த்தால் நமக்கு மயக்கமே வந்து விடும் போல. அந்த அளவுக்கு கார்களை அதிக அளவில் வைத்திருக்கிறார்.

Boopesh reddy ayudha pooja

இவரிடம் உள்ள மற்ற கார்களை பற்றி பார்க்கும் போது ஃபெராரி மாடலில் உள்ள எஸ்எஃப் 90 ஸ்டிராடேல்,488 பிஸ்தா, 296 ஜிடிபி, 812 சூப்பர் ஃபாஸ்ட், 296 ஜிடிபி மற்றும் 812 சூப்பர் பாஸ்ட், போ்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ், போர்ஷே கேமேன் ஜிடி4, போர்ஷே 911 கெய்யன் எஸ், போர்ஷே 911 ஜிடி3 ஆர் எஸ், போ்ஷே 911 டர்போ எஸ் ஆகிய கார்களும் இவரிடம் உள்ளன.

மேலும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி வகையில் மட்டும் இவர் ஏஎம்ஜி ஜி63, மெஸ்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி, மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ், உள்ளிட்ட கார்கள் உள்ளன. இது போக ஆஸ்டான் மார்ட்டின் டிபிஎஸ் கார்பன் பிளாக் ஆகிய கார்களையும் வைத்திருக்கிறார். இந்தியாவிலேயே எஸ்டிஓ காரை முதன் முதலில் வாங்கிய இந்தியர் இவர் தான். மேலும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரியஸ் காரையும் முதலில் இவர் தான் வாங்கியுள்ளார்.

இந்தியாவின் முதல் ஃபெராரி பெர்சாங்குவே கார் இவரது தான் முதன் முதலில் வந்தது இந்த கார் கடந்து 2022ம் ஆண்டு தான் உலகிற்கே முதல் எஸ்யூவி ஃபெராரி காராக அறிமுகமானது. இந்த கார் கடந்த பிப்ரவரி மாதம் இவரால் வாங்கப்பட்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாவதற்கு முன்பே இவர் வாங்கியுள்ளார். இதுபோக இவரிடம் பென்ட்லி பென்டயகா, லாம்போர்கினி உரூஸ் பெர்பார்மென்ஸ், அஸ்டான் மார்டின் டிபிஎக்ஸ், மஸரிடி லெவன்டே ட்ரோஃபோ உள்ளிட்ட கார்களும் உள்ளன.

இவரிடம் உள்ள கார்களிலேயே பவர் ஃபுல் இன்ஜின் கொண்ட காராக 6.5 லிட்டர் கொண்ட வீடு இன்ஜின் பொருத்தப்பட்ட கார் தான் இருக்கிறது. இது 715 பிஎச்பி பவரையும் 716 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது 2 ஸ்பீடு பவர் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 8 ஸ்பீடு கொண்ட டிசிடி ரியல் செட் டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.3 நொடியில் பிக்கப் செய்துவிடுகிறது.

இந்த கார் அதிகபட்சமாக 310 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த காரில் சென்டர் ஆக்டிவ் சஸ்பென்ஷன், செராமிக் பிரேக், டார்க் வெக்டரின், எலெக்ட்ரானிக் டிஃப்ரன்சியல், 4 வீல் ஸ்டியரிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த கார் ரூபாய் 10.5 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் காஸ்ட்லியான கார்களை வைத்து ஆயுத பூஜை கொண்டாடுவது ஒவ்வொரு ஆண்டும் ஒரு டிரெண்டாக இருந்து வருகிறது. இதன்படி இவர் கொண்டாடிய ஆயுத பூஜை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இவரிடம் உள்ள கார்களை பார்த்தால் இந்தியாவில் அம்பானியை தோற்றுப் போகும் போல அவ்வளவு கார்கள் வைத்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Monday, October 14, 2024, 13:15 [IST]
English summary
Boopesh reddy ayudha pooja supercars viral video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X