அம்பானி, அதானியிடமும் கூட இந்த கார் இல்லை.. இந்தியால யாரிடமும் இல்லாத காரை வாங்கிய பூபேஷ் ரெட்டி! யார் இவர்?
இந்தியாவின் பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் அதானி போன்றோரிடமே இல்லாத கார் மாடல் ஒன்றை இந்தியாவைச் சேர்ந்த மற்றுமொரு பணக்காரர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பூபேஷ் ரெட்டி, இவரே அந்த பணக்காரர் ஆவார். இவர் புதிதாக லெக்சஸ் ஆர்சி-எஃப் எனும் ஸ்போர்ட்ஸ் கார் மாடலையே வாங்கி இருக்கின்றார். இந்தியாவில் இந்த காரை வாங்கும் முதல் நபர் இவரே ஆவார். ஆமாங்க, நம் நாட்டில் வேறு யாரிடும் இந்த கார் மாடல் இல்லை.
கார்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவரே இந்த பூபேஷ் ரெட்டி. இவருக்கு சொந்தமாக பிரென் கராஜ் எனும் மிகப் பெரிய கார் கராஜ் உள்ளது. இதில் ஏகப்பட்ட ஆடம்பர மற்றும் ஸ்போர்ட்ஸ் வகையைச் சேர்ந்த கார் மாடல்கள் உள்ளன. போர்ஷே, ஃபெர்ராரி மற்றும் லம்போர்கினி போன்ற அரிய வகை கார் மாடல்களே பிரென் கராஜில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்த மாதிரியான சூழலிலேயே பூபேஷ் ரெட்டி லெக்சஸ் ஆர்சி-எஃப் கார் மாடலை வாங்கி இருக்கின்றார்.

இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பே ரூ. 2 கோடிக்கும் அதிகம் ஆகும். இந்த காரை பெங்களூரு லெக்சஸ் கார் விற்பனையாளர் வாயிலாகவே பூபேஷ் ரெட்டி வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கி இருக்கும் அந்த கார் பிரத்யேக ஸ்போர்ட்டி சோலார் ஃப்ளேர் வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதன் பான்னெட் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக கருப்பு நிறம் அதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், இதன் வீல்கள் சாம்பல் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன.
உலக அளவில் இந்த கார் எப்போதோ விற்பனைக்கு வந்துவிட்டாலும் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டிற்கு பின்னரே முதல் முறையாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. ஆனால், இப்போதே இந்த காரை முதல் இந்தியராக பூபேஷ் ரெட்டி வாங்கி இருக்கின்றார். இந்த காரில் 5.0 லிட்டர் வி8 வகை எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 471 பிஎச்பி மற்றும் 530 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 270 கிமீ ஆகும். இதுமட்டுமல்ல இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 4.4 செகண்டுகளே போதுமானது. இத்தகைய அதிக ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய ஸ்போர்ட்ஸ் காரையே தற்போது பூபேஷ் ரெட்டி வாங்கி இருக்கின்றார். இதன் எக்சாஸ்ட் சத்தம் ஓர் இசையை போல இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பிரென் கராஜில் ஃபெர்ராரி பிராண்டின் தயாரிப்பு மட்டுமே ஐந்துக்கும் மேற்பட்டவை இருக்கின்றன. அந்தவகையில், எஃப்430, 458 ஸ்பெஷல், 488 பிஸ்தா, எஸ்எஃப் 90 ஸ்ட்ரேடில் மற்றும் 812 காம்படிசியோன் உள்ளிட்டவையே அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இதேபோல், போர்ஷேவின் 911, கேமேன் ஜிடி4, கேமேன் ஜிடி4 ஆர்எஸ், 911 ஜிடி2 ஆர்எஸ், 992 911 ஜிடி3 ஆர்எஸ், 991 911 டர்போ எஸ் மற்றும் ரேர் கார் மாடலான 911 ஆர் உள்ளிட்டவற்றையும் அவர் வைத்திருக்கின்றார்.

இதுமட்டுமல்ல இதுபோன்று இன்னும் பல சூப்பர் மற்றும் அரிய வகை கார் மாடல்களை அவர் வைத்திருக்கின்றார். இந்த மாதிரியான கார் கலெக்சனை மட்டுமல்ல இவர் தனக்கென ரேஸ் டிராக்கையும் உருவாக்கி இருக்கின்றார். சுமார் 95 ஏக்கர் பரப்பளவில் 4.1 கிமீ நீளம் கொண்ட டிராக்கையே அவர் பெங்களூருக்கு அருகில் தயார் செய்திருக்கின்றார். இந்த ரேஸ் டிராக்கின் மதிப்பு ரூ. 175 கோடி ஆகும். இதற்கு 'பிரென் ரேஸ் வே' என்கிற பெயரை அவர் சூட்டி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பூபேஷ் ரெட்டி, இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவர் முக்கிய தொழில் ரியல் எஸ்டேட் ஆகும். இப்போது லக்சூரி வகை வீடுகளைக் கட்டி தரும் தொழிலில் இவர் ஈடுபட்டு வருகின்றார். இந்த தொழிலே அவரை இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாற்றியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









