வீடு கட்ட செங்கல் வாங்குவதை போல இந்த மனுஷன் சூப்பர் கார்களை வாங்கிட்டு இருக்காரு..
ஆயுத பூஜையை பெரும் சூப்பர் கார் படையுடன் ஓர் நபர் கொண்டாடும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகியது. பிரென் கராஜ் (Bren Garage) எனும் பெயரிலேயே அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் பூபேஷ் ரெட்டி. இவருக்கு சொந்தமானதே பிரென் கராஜ் ஆகும். பிரென் கார்பரேஷன் (Bren Corporation) எனும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இவர் ஆவார். ஏற்கனவே பெரும் எண்ணிக்கையில் சூப்பர் கார்களை வைத்திருக்கும் இவர், தற்போது மேலும் ஓர் விலை உயர்ந்த சூப்பர் காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர், போர்ஷே 911 ஜிடி3 ஆர்எஸ் (Porsche 911 GT3 RS) சூப்பர் கார் மாடலையே வாங்கி இருக்கின்றார். இந்த காரை இந்தியாவில் ஒரு சில நபர்களே பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், நடிகர் அஜித் கூட இந்த கார் மாடலை சமீபத்திலேயே வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இவரை போலவே நாக சைதன்யா, பிரித்வி ராஜ் உள்ளிட்டோரும் இந்த கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர். 911 ஜிடி3 கார் வெவ்வேறு வெர்ஷன்களை இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் வரிசையிலேயே 911 ஜிடி3 ஆர்எஸ் மாடலை வாங்கியதன் வாயிலாக பூபேஷ் ரெட்டி இணைந்திருக்கின்றார்.
இதன் ஒரு யூனிட்டின் விலையே ரூ. 3.5 கோடி ஆகும். இத்தகைய விலை உயர்ந்த காரை பூபேஷ் ரெட்டி வாங்கி இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் அந்த காருடன் நிற்கும் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படத்தை ஆட்டோமொபிலி ஆர்டென்ட் அதன் இன்ஸ்டா பக்கத்தின் வாயிலாக வெளியிட்டு இருக்கின்றது.

முழுக்க மஞ்சள் நிறத்தில் இருக்கும் போர்ஷே 911 ஜிடி3 ஆர்எஸ் கார் மாடலையே பூபேஷ் ரெட்டி வாங்கி இருக்கின்றார். அதேநேரத்தில், அவர் வாங்கியிருக்கும் காரின் வீல்கள் தனித்துவமான சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இது அக்காருக்கு கூடுதல் ஸ்போர்ட்டி லுக்கை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
இது ஓர் மக்னீசியம் ஃபோர்ஜ்ட் வீல் ஆகும். இந்த வீலை பிரத்யேக பேக்கேஜ் வாயிலாகவே நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பேக்கேஜ் வாயிலாக 21 அங்குல அல்லது 21 அங்குல வீல், கார்பன் ஃபைபர் ரூஃப், ஆன்டி ரோல் பார்கள், கூப்லிங் ராட்கள் மற்றும் பிற செயல்திறனை அதிகரிக்கச் செய்யக் கூடிய பாகங்களை அவர்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் அதிக பவர்ஃபுல் மோட்டாரான 4.0 லிட்டர் 6 சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 518 பிஎச்பி ஆற்றலையும், 468 என்எம் டார்க்கையும் உருவாக்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 296 கிமீ ஆகும்.
மேலும், இதனால் வெறும் 3.2 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இத்தகைய அதீத ஆற்றலை உருவாக்கும் காரையே புதிதாக தன்னுடைய கார் சேகரிப்பில் பூபேஷ் ரெட்டி இணைத்திருக்கின்றார். இந்த கார் மட்டுமில்லைங்க, இதுபோன்று இன்னும் பல சூப்பர் மற்றும் அதிக ஆற்றலை உருவாக்கும் காரை பூபேஷ் ரெட்டி பயன்படுத்தி வருகின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சூப்பர் காரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. எனவே, வரும் நாட்களில் இன்னும் பலமடங்காக சூப்பர் காரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே பூபேஷ் ரெட்டி, நடிகர்கள் உள்ளிட்டோரின் செயல் அமைந்து வருகின்றது.


Click it and Unblock the Notifications








