விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு! முயல் வேகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி.. போஷ் அதிரடி

கொரோனா தொற்றை முயல் வேகத்தில் கண்டறியும் கருவியை கண்டுபிடித்திருப்பதாக பிரபல போஷ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு.. முயல் வேகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி.. போஷ் அதிரடி!

தன்னைத் தானே வல்லாதிக்க நாடு என கூறிக் கொண்ட சில வல்லரசு நாடுகள்கூட தற்போது பெருத்த அச்சத்தில் உரைந்திருக்கின்றன. எப்போதும், பிசியாக இருந்த வான் வழித் தடங்கள் தற்போது முற்றிலுமாக முடங்கியிருக்கின்றது. இதேநிலைதான் தற்போது தரை வழி போக்குவரத்துகளுக்கும். அதிக சத்தத்துடன், முன்னாடி செல்பவர்களை பயமுறுத்திச் சென்றுக் கொண்டிருந்த வாகனங்கள் தற்போது சாலையோரங்களிலும், பணிமனைகளிலும் தனித்துவிடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு.. முயல் வேகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி.. போஷ் அதிரடி!

இந்த திடீர் மாற்றத்தால் முன்பெப்போதும் இல்லாத அளவில் புவி மாசடைவது குறைந்திருக்கின்றது. மேலும், விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிய ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக, நீரோடைகள் அசுத்தமாவது மிக அதிகளவில் குறைந்திருக்கின்றது.

விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு.. முயல் வேகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி.. போஷ் அதிரடி!

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தாலும், பல வழிகளில் நன்மையை ஏற்படுத்தியிருக்கின்றன. முக்கியமாக, நாம் மறந்த பாதுகாப்பு வழிமுறைகள், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்டவற்றை கொரோன மீண்டும் நியாகப்படுத்தியுள்ளது.

விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு.. முயல் வேகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி.. போஷ் அதிரடி!

இருப்பினும், இந்த வைரஸ் உயிர் கொல்லியாக இருப்பதால் இதனை அடியோடு அழிப்பது கட்டாயமாகியிருக்கின்றது. இதனால், தினந்தோறும் ஏராளமான உயிர்கள் பரிதாபமாக உலகை விட்டு பிரிந்து வருகின்றன. முக்கியமாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோரே அதிகமாக இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு.. முயல் வேகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி.. போஷ் அதிரடி!

ஆகையால், கொரோனா தொற்றைத் தவிர்ப்பது மிக அவசியமானதாக மாறியிருக்கின்றது. எனவே, உலக நாடுகள் அனைத்திலும் பிரபல நிறுவனங்கள் கொரோன தொற்றைக் கண்டறியக் கூடிய கருவிகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு.. முயல் வேகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி.. போஷ் அதிரடி!

அந்தவகையில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான போஷ், மிக விரைவில் கொரோனா வைரஸைக் கண்டறியும் கருவி ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு.. முயல் வேகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி.. போஷ் அதிரடி!

இந்த கருவி கொரோனோ தொற்றை முயல் வேகத்தில் கண்டறிய உதவும் என கூறப்படுகின்றது. அதாவது, வெறும் 2.5 மணி நேரங்களிலேயே போஷ் நிறுவனத்தின் பரிசோதனை உபகரணம் கொரோனோ தொற்றை உறுதி செய்து விடுமாம்.

விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு.. முயல் வேகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி.. போஷ் அதிரடி!

இந்த கருவி பயன்பாட்டிற்கு வருமேயானால் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் மனிதர்களால் வெற்றிப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனவிற்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் அதன் தொற்றைக் கண்டறிவதிலேயே அதிக சவால் நிலவுகின்றது. ஒருவர் கொரோனா தொற்றைப் பெற்றிருக்கின்றாரா என்பதை உறுதிச் செய்யவே குறைந்தது ஒரு நாள் வரை எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு.. முயல் வேகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி.. போஷ் அதிரடி!

இதனால், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாத நபர், தனக்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லை என நினைத்து தன்னையறியாமல் மற்றவர்களுக்கும் பரப்பி வருகின்றனர். இந்த அவலநிலையை போக்க போஷ் நிறுவனத்தின் கோவிட்-19 வைரஸைக் கண்டறியும் கருவி உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. போஷ் நிறுவனம் இந்த கருவிக்கு போஷ் ரேபிட் கோவிட்-19 என்ற புனைப் பெயரை வைத்துள்ளது.

விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு.. முயல் வேகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி.. போஷ் அதிரடி!

மேலும், இந்த கருவி இன்னும் ஆறு வாரங்களுக்கு உள்ளாகவே பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருக்கின்றதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்த கருவி கொரோனை தொற்று குறித்த தகவலை 95 சதவீதம் மிக துள்ளியமாக வழங்கும் என உறுதியாக தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 28, 2020, 13:37 [IST]
English summary
Bosch Develops CoronaVirus Test Kit. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+