ரூ.3 கோடிக்கு ஏலம் போன கார் நிறுத்தும் இடம்

By Saravana
Car Parking Space
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்த கார் பார்க்கிங் பகுதி ரூ.3 கோடிக்கு ஏலம் போய் வியக்க வைத்துள்ளது.

பாஸ்டன் நகரில் வரி ஏய்ப்பு நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இடத்தை வருவாய் துறை ஏலம் விட்டது.

இரண்டு கார்களை நிறுத்தும் வசதி கொண்ட அந்த இடம் முக்கிய பகுதியில் இருந்ததால், ஏலத்தில் எடுக்க ஏராளமானோர் குவிந்தனர்.

குறைந்தபட்ச ஏலத்தொகையாக 42,000 டாலர் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில நொடிகளில் அந்த இடத்தை எடுக்க போட்டா போட்டி ஏற்பட்டது.

இறுதியில் அந்த இடத்துக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த லிசா புளுமென்த்தால் என்ற கோடீஸ்வர பெண்மணி 5,60,000 டாலருக்கு கேட்டு ஏலத்தில் வெற்றி பெற்றார்.

இந்திய மதிப்பில் ரூ.3 கோடிக்கு அந்த கார் நிறுத்தும் இடத்தை அவர் ஏலத்தில் எடுத்தார். அங்கு குழுமியிருந்த பலரும் இதே கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கினர்.

"அங்கு என்ன நடக்கிறது என்று யூகிக்க முடியவில்லை. இவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது வியப்பளிப்பதாக ஏலத்திற்கு வந்த ஒருவர் கூறினார். 15 நிமிடத்தில் ஏலம் முடிந்துவிட்டது.

பாஸ்டன் நகரில் குடியிருப்பு வீடு 3,00,000 டாலருக்கு விற்பனையாகிறது. இந்த நிலையில், அந்த பெண்மணி கார் நிறுத்தும் இடத்தை இவ்வளவு தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 15, 2013, 10:59 [IST]
English summary
A lady has agreed to pay a whopping USD 560,000 for a space to park two cars near her home in downtown Boston.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+