இந்த காலத்தில் காரில் இது இல்லையென்றால் ரொம்ப கஷ்டம்... மேட்-இன்-இந்தியா டேஷ்போர்டு கேமராவை ஆதரிப்போம்!!
இன்றைய கால உலகில் சாலையில் எது எப்போது நடக்கும் என்றே தெரியவில்லை. இதனால், எல்லாவற்றிற்கும் முன்னெச்சரிக்கையாக தயாராக இருந்தால் நல்லது. இந்த வகையில், டேஷ்போர்டு கேமரா (Dashcam)-ஐ உங்கள் காரில் வாங்கி பொருத்திக் கொள்வது பல பிரச்சனைகளில் இருந்தும், மோசடிகளில் இருந்தும் உங்களை காப்பாற்றும். இதற்காகவே, போல்ட் (Boult) நிறுவனம் க்ரூஸ்கேம் எக்ஸ்1 (CruiseCam X1) மற்றும் எக்ஸ்1 ஜிபிஎஸ் (X1 GPS) என 2 விதமான கார் டேஷ்போர்டு கேமராக்களை மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டேஷ்போர்டு கேமராக்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவை சேர்ந்த பிரபல ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸ் நிறுவனம் போல்ட் ஆகும். 2017ஆம் ஆண்டில் வருண் குப்தா மற்றும் தருண் குப்தா என இருவர் இந்த நிறுவனத்தை நிறுவினர். தொழிற்நுட்ப கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாக விளங்கும் போல்ட் இந்த புதிய டேஷ்போர்டு கேமராக்கள் மூலமாக ஆட்டோமொபைல் துறையிலும் நுழைந்துள்ளது.

புதிய க்ரூஸ்கேம் எக்ஸ்1 மற்றும் எக்ஸ்1 ஜிபிஎஸ் டேஷ்போர்டு கேமராக்கள் சிறப்பான வீடியோ தரத்தை வெளிப்படுத்தக் கூடியவைகளாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறும் போல்ட் நிறுவனம், இந்த கேமராக்களில் அட்வான்ஸ்டு பாதுகாப்பு வசதிகள் மற்றும் தடையற்ற இணைப்பு வசதிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால், கார் ஓட்டுனர்கள் தடங்கலற்ற வீடியோவை தங்களது மொபைல் போனில் பார்க்கலாம் என போல்ட் தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டில் இருந்து ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸ்களை மட்டுமே உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுப்பட்டு வந்த போல்ட் நிறுவனம் சமீபத்தில்தான் முதல்முறையாக அதிக சத்தத்தை வழங்கக்கூடிய சவுண்ட்பார் ஸ்பீக்கர்களை உருவாக்கும் பணியில் ஈடுப்பட ஆரம்பித்தது. இந்த நிலையில் தற்போது, புதிய க்ரூஸ்கேம் எக்ஸ்1 மற்றும் எக்ஸ்1 ஜிபிஎஸ் மூலமாக ஆட்டோமொபைல் துறையிலும் இறங்கியுள்ளது.

இந்த டேஷ்போர்டு கேமராக்கள் 1080 பிக்ஸெலில் ஃபுல்-எச்டி ரிசொலியுஷனில் காட்சிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த டேஷ்போர்டு கேமரா செட்-அப்பில் 2 மெகா பிக்ஸெல் சென்சாரும் இடம்பெற்றுள்ளன. இந்த இரு கேமராக்களில் எக்ஸ்1 ஜிபிஎஸ் ஆனது அதன் பெயருக்கு ஏற்றப்படி, ஜிபிஎஸ்-இன் உதவியுடன் செயல்படக்கூடியதாக உள்ளது.
இதன் மூலமாக, வாகனம் இயங்கிக் கொண்டிருக்கும் இடம், வேகம் உள்ளிட்டவற்றை ஓட்டுனர்கள் அறியலாம். அதற்கேற்ப தங்களது பயணத்தின் திசையை மாற்றிக் கொள்ளலாம். மேலும், ஜிபிஎஸ் உதவியுடன் அருகாமையில் உள்ள சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட விபத்துகள் உள்ளிட்ட நிகழ்வுகளையும் வாகன ஓட்டிகள் அறிய முடியும்.

இந்த கேமராக்களில் 170 டிகிரியில் நன்கு அகலமான லென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக, கிட்டத்தட்ட முழு சாலையையும் உங்களால் காண முடியும். இந்த கேமராக்களை பயன்படுத்த உங்கள் மொபைல் போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியிருக்கும். இந்த செயலியில், முக்கியமான நிகழ்வுகளின் வீடியோக்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலமாக வாகன ஓட்டிகள் எப்போதும் கேமரா உடன் இணைப்பில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்கிறது போல்ட் நிறுவனம்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, மோதல் ஏற்பட போவதை முன்கூட்டியே எச்சரிக்கும் வசதியை இந்த கேமராக்கள் கொண்டுள்ளன. இதற்காக ஜி சென்சார் இந்த கேமராக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சென்சார் ஆட்டோமேட்டிக்காக மோதலை உணர்ந்து, அதனை வீடியோவாக காட்சிப்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த சென்சாரை கொண்ட டேஷ்போர்டு கேமராக்களில் வழக்கமான லித்தியம் பேட்டரிகளுக்கு பதிலாக சூப்பர் மின்தேக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய போல்ட் க்ரூஸ்கேம் எக்ஸ்1 மற்றும் எக்ஸ்1 ஜிபிஎஸ் டேஷ்போர்டு கேமராக்களின் விலைகள் முறையே ரூ.2,999 மற்றும் ரூ.3,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பல விபத்துகளை தடுத்து உங்களது உயிரை காப்பாற்றுவதுடன், மோசடிகளில் இருந்தும் உங்களை பாதுகாக்கும் என்பதால், இவ்வளவு பணத்தை செலவழிப்பதில் எந்த தவறும் இல்லை.


Click it and Unblock the Notifications









