பரபரப்பான சாலையில் நிலவிய போக்குவரத்தை ஒழுங்கப்படுத்திய 7 வயது சிறுவன்... குவியும் பாராட்டு!

Written By:

ஒருநாள் போக்குவரத்து காவலராக 7 வயது சிறுவன் ஒருவன் சாலையில் செல்லும் வாகனங்களை ஒழுங்கப்படுத்தும் பணியில் ஈடுபட்டது உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவன் அப்துல்லாவும் போக்குவரத்து காவலர்களும்..!!

7 வயது சிறுவனான அப்துல்லா அல் கத்பி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உல்ல ரஸ் அல் கமியா நகரில் வசித்து வருகிறான்.

சிறுவன் அப்துல்லாவும் போக்குவரத்து காவலர்களும்..!!

போலீஸாக வேண்டும் என்ற குறிக்கோள் உடைய சிறுவன் அப்துல்லாவிற்கு போக்குவரத்து காவலராக வேண்டும் என்பது கனவு.

சிறுவன் அப்துல்லாவும் போக்குவரத்து காவலர்களும்..!!

மகன் அப்துல்லாவின் விருப்பத்தை அறிந்த தந்தை, ரஸ் அல் கமியா நகர காவல்துறையை தொடர்புகொண்டு, மகன் விருப்பத்தினை தெரிவித்தார்.

சிறுவன் அப்துல்லாவும் போக்குவரத்து காவலர்களும்..!!

அப்துல்லாவின் காவல்துறை மீதான ஆர்வத்தை உணர்ந்த அந்நகர போலீசார், உடனே ஒரு ஆச்சர்ய அறிவிப்பை வந்திருந்த தந்தைக்கு தெரிவித்தனர்.

சிறுவன் அப்துல்லாவும் போக்குவரத்து காவலர்களும்..!!

கடந்த ஞாயிற்று கிழமை காலை படுக்கையில் இருந்து எழுந்த மகன் அப்துல்லாவிற்கு, அவனது தந்தை ஐக்கிய அரபு அமீரக போலீஸாரின் உடையை பரிசாக வழங்கினார்.

சிறுவன் அப்துல்லாவும் போக்குவரத்து காவலர்களும்..!!

இதைப்பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்த அப்துல்லாவை அழைத்துக்கொண்டு ரஸ் அல் கமியா நகரின் மையப்பகுதிக்கு காரில் கூட்டி சென்றார் தந்தை.

சிறுவன் அப்துல்லாவும் போக்குவரத்து காவலர்களும்..!!

கார் நின்ற பகுதியில் இறங்கிய சிறுவனை வரவேற்க அந்நகர போக்குவரத்து காவல் துறை ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

சிறுவன் அப்துல்லாவும் போக்குவரத்து காவலர்களும்..!!

இதனை பார்த்த சிறுவன் அப்துல்லா ஆச்சர்யம் அடைந்தான். அவனது முகம் உற்சாகத்தால் பொங்கியது. காவலர்கள் அனைவரும் அப்துல்லாவை வரவேற்றனர்.

சிறுவன் அப்துல்லாவும் போக்குவரத்து காவலர்களும்..!!

மகனின் சந்தோஷத்தை பார்த்து பூரித்து போயிருந்த தந்தை அவனுக்கான மேலும் ஒரு ஆச்சர்யத்தை வழங்க இருந்தார்.

சிறுவன் அப்துல்லாவும் போக்குவரத்து காவலர்களும்..!!

போக்குவரத்து காவல்துறை பணியில் சேரவேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ள அப்துல்லாவிற்கு, காவல்துறையினர் சிறப்பு பயிற்சிகளை வழங்கினர்.

சிறுவன் அப்துல்லாவும் போக்குவரத்து காவலர்களும்..!!

இதை கவனமாக கேட்டுக்கொண்ட சிறுவன், சிறிது நேரத்தில் அவனாகவே ரஸ் அல் கமியாவின் மையப்பகுதியில் இருந்த போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த தொடங்கினான்.

சிறுவன் அப்துல்லாவும் போக்குவரத்து காவலர்களும்..!!

சிறுவன் ஒருவன் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் இருப்பதை பார்த்த அப்பகுதி வாகன ஓட்டிகள் அப்துல்லா குறித்த செய்தியை உடனே தங்களது வலைதளங்களில் பகிர தொடங்கினர்.

சிறுவன் அப்துல்லாவும் போக்குவரத்து காவலர்களும்..!!

மேலும் சிறுவன், ரஸ் அல் கமியா நகர போக்குவரத்து காவல்துறையினர் உடன் செல்ஃபி மற்றும் வீடியோக்களை எடுத்து அவற்றையும் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டனர்.

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில்,

சிறுவன் அப்துல்லாவின் கனவு மெய்படவேண்டும் என்ற வாழ்த்துக்களும் மற்றும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அவனது தந்தைக்கு பாராட்டுதல்களும் தொடர்ந்து குவிந்த வண்னம் உள்ளன .

சிறுவன் அப்துல்லாவும் போக்குவரத்து காவலர்களும்..!!

சிறுவனின் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்த ரஸ் அல் கமியா போலீஸாருக்கும் உலகளவில் பல மக்கள் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

சிறுவன் அப்துல்லாவும் போக்குவரத்து காவலர்களும்..!!

வைரலாக பரவிய இந்த சம்பவத்தை பார்த்த ஐக்கிய அமீரக அரசு, எதிர்காலத்தில் குழந்தைககள் மக்களை பாதுகாக்கும் காவல்துறை பணியை தேர்ந்தெடுத்தால் அதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வலியுறுத்தியுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Boy 7 Controls Peak Hour Traffic acclaimed By Public. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark