பைக்கில் போகும்போது இளம் ஜோடி செய்த காரியம்! வீடியோவை பாக்கும்போதே சூடாகுது! கண்ட்ரோல் இல்லாதவங்க பாக்காதீங்க!
சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இளைஞர்களும், இளம்பெண்களும் தற்போது செய்து வரும் அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. விதிமுறைகளை மீறி ஆட்டம் போட்ட பலரை, வைரல் வீடியோக்கள் (Viral Videos) மூலம் கண்டறிந்து, காவல் துறை அதிகாரிகள் அதிரடியாக தூக்கியுள்ளனர்.
ஆனால் இந்த அட்டகாசங்கள் எல்லாம் கூடிய விரைவில் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஏனெனில் தொடர்ந்து அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டே உள்ளன. பீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா நகரில் நடைபெற்றதாக கூறப்படும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் யமஹா ஆர்15 (Yamaha R15) பைக்கில் பயணம் செய்வதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த இளைஞர் பைக்கை ஓட்ட, இளம்பெண் பின்னால் அமர்ந்துள்ளார். அவர்கள் 2 பேருமே ஹெல்மெட் அணியவில்லை என்பது வேதனையான ஒரு விஷயம்.
அப்படி இருக்கும்போது பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண் திடீரென எழுந்து நின்று கொண்டே பயணம் செய்ய ஆரம்பிக்கிறார். பைக்கில் இதுபோன்று பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. திடீரென நிலைதடுமாறி கீழே விழ நேரிட்டால், படுகாயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படலாம் என்பதை அந்த பெண் உணரவில்லை.
அத்துடன் சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களுக்கும் இது பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதையும் அந்த பெண் கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை. நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் இங்கே மற்றொரு அதிர்ச்சிகரமான விஷயமும் இருக்கிறது. பைக்கின் பின்னால் எழுந்து நின்று ஆட்டம் போட்ட பெண்ணின் கையில் 2 துப்பாக்கிகள் இருந்தன.
ஒவ்வொரு கையிலும் தலா ஒரு துப்பாக்கியை வைத்து கொண்டே அந்த இளம்பெண் பயணம் செய்ததை பார்த்தபோது, நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்ற எண்ணம்தான் மனதில் தோன்றியது. ஆனால் அது உண்மையான துப்பாக்கியா? அல்லது பொம்மை துப்பாக்கியா? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை.
சமூக வலை தளங்களுக்கு வைரல் வீடியோக்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய யாரின் அடையாளமும் இன்னும் வெளியாகவில்லை. இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒவ்வொருவரின் தனியுரிமையும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் இத்தகைய நிகழ்வுகளை எல்லாம் தனியுரிமையுடன் தொடர்புபடுத்தி குழப்பி கொள்ள கூடாது. இது அப்பட்டமான போக்குவரத்து விதிமுறை மீறல். எனவே தவறு செய்தவர்கள் மீது அதிகாரிகள் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பைக் ஸ்டண்ட்களை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அது எங்கே நடைபெறுகிறது? எப்படி நடைபெறுகிறது? என்பதெல்லாம் மிகவும் முக்கியம். பைக் ஸ்டண்ட்கள் எல்லாம் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் தனியார் இடங்களில் நடைபெற வேண்டும். அனைவரும் பயன்படுத்தும் பொது சாலைகள், பைக் ஸ்டண்ட்களை செய்வதற்கான இடம் அல்ல.
அத்துடன் பைக் ஸ்டண்ட்களை செய்யும்போது, அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்திருக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், உடனடியாக முதலுதவி சிகிச்சைகளை வழங்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது எதையும் செய்யாமல் பொது சாலைகளில் மற்றவர்களுக்கு இடையூறாக ஸ்டண்ட்களில் ஈடுபடுபவர்கள், கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே கருத்து.
இதற்கிடையே பாட்னாவில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தின் வீடியோவை பார்க்கும் பலரும் உஷ்ணமாகி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலை தளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். இதன் பேரில் காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நாம் உறுதியாக நம்பலாம்.


Click it and Unblock the Notifications








