காருக்கு அடியில் சிக்கிய 6அடி பாம்பை அசால்ட்டாக மீட்ட 14வயது சிறுவன்

காரின் அடியில் தஞ்சம் புகுந்த பாம்பை வெறும் கைகளால் மீட்டுள்ளான் பள்ளிச் சிறுவன் ஒருவன். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கேற்ப பாம்பை கண்டால் பயப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதிலும் சிறுவர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை, ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஆனால் பள்ளி செல்லும் 14 வயது சிறுவன் ஒருவன் 6 அடி நீளம் கொண்ட பாம்பை பயமில்லாமல், மிகவும் துனிச்சலுடன் தன் கையாலேயே பிடித்துள்ள சம்பவம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

காரில் புகுந்த பாம்புடன் மல்லுக்கட்டிய 14 வயது சிறுவன்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த ‘ஒலி வார்ட்ரோப்' எனும் 14 வயதே நிரம்பிய பள்ளி செல்லும் சிறுவனின் வீட்டில் உள்ள டொயோட்டா க்ரூஸர் ட்ரக்கின் அடியில் 6 அடி நீள மலைப்பாம்பு ஒன்று தஞ்சம் புகுந்தது.

காரில் புகுந்த பாம்புடன் மல்லுக்கட்டிய 14 வயது சிறுவன்

காலையில் பள்ளி செல்லும் முன் இதனை கண்ட அச்சிறுவன் சிறிதும் தயங்காமல் ட்ரக்கின் அடியில் சென்று படுத்துக்கொண்டே, டிரக்கில் பின்னிப்பிணைந்த மலைப்பாம்பை வெளியே எடுக்க முயற்சித்துள்ளான்.

காரில் புகுந்த பாம்புடன் மல்லுக்கட்டிய 14 வயது சிறுவன்

பாம்பின் தலையை கச்சிதமாக பிடித்துக்கொண்டு படுத்தவாறே ட்ரக்கின் அடியில் இருந்து வெளியே வந்த அவன், தான் பிடித்த பாம்பை சாக்கு பையினுள் தினித்துவிட்டு மிகவும் கூலாக பள்ளிக்கு கிளம்பிச் சென்றான்.

காரில் புகுந்த பாம்புடன் மல்லுக்கட்டிய 14 வயது சிறுவன்

வெப்பமான இடங்களை புகலிடமாக தேடிச் செல்லும் பாம்புகளுக்கு கார் போன்ற வெதுவெதுப்பான இயந்திரம் மிகவும் விருப்பமான ஒன்றாகவே இருந்துவருகிறது. இதுபோல் பல சம்பவங்களை நாம் முன்னதாகவே பார்த்துள்ளோம்.

அடுத்த முறை காரை எடுக்கும் முன்பு இதுபோல் பாம்பு ஏதேனும் தஞ்சம் புகுந்துள்ளதா என்பதனை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

மெர்சிடஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் காரின் படங்கள்:

More from DriveSpark

Article Published On: Wednesday, March 8, 2017, 10:54 [IST]
English summary
Snakes are cold-blooded animals and look to vehicles' warm motor to increase their body temperature; here is a teenager wrestling out a python out of a truck.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+