அதிர்ஷ்டசாலிகள் நொய்டா வாசிகள்... வாசல் தேடி வரும் சிறப்பு வசதி.. என்னனு தெரியுமா..?

பெட்ரோலிய பொருட்களை வீட்டு வாசலுக்கே வந்து டெலிவரி செய்வதற்கான சிறப்பு ஆப் ஒன்றினை பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதிர்ஷ்டசாலிகள் நொய்டா வாசிகள்... வாசல் தேடி வரும் சிறப்பு வசதி.. என்னனு தெரியுமா..?

நாட்டின் பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம், அரசின் வசம் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அண்மைக் காலங்களாக ஏற்பட்டு வரும் பொருளாதார இழப்பினை சீர்கட்டும் விதமாக, இந்நிறுவனத்தை தனியார் ஒப்படைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

அதிர்ஷ்டசாலிகள் நொய்டா வாசிகள்... வாசல் தேடி வரும் சிறப்பு வசதி.. என்னனு தெரியுமா..?

இதுகுறித்த அறிவிப்பை அண்மையில் டில்லியில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிபிசிஎல், எஸ்சிஐ மற்றும் கன்கார் நிறுவனத்தில் அரசின் வசமுள்ள பங்குகலளை விற்பனைச் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது.

இம்முடிவை, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுத்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

அதிர்ஷ்டசாலிகள் நொய்டா வாசிகள்... வாசல் தேடி வரும் சிறப்பு வசதி.. என்னனு தெரியுமா..?

ஆகையால், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில், மத்திய அரசின் வசமுள்ள 53.29 சதவீத பங்குகளையும் விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பிபிசிஎல் முற்றிலுமாக தனியார் வசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, எஸ்சிஐ நிறுவனத்தில் அரசின் வசமுள்ள 63.75 சதவீத பங்குகளில் 53.75 சதவீதத்தையும், கான்கார் நிறுவனத்தில் உள்ள 54.80 சதவீத பங்குகளில், 30.9 சதவீத பங்குகளை விற்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதிர்ஷ்டசாலிகள் நொய்டா வாசிகள்... வாசல் தேடி வரும் சிறப்பு வசதி.. என்னனு தெரியுமா..?

அதேசமயம், அசாமில் உள்ள நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மட்டும் மத்திய அரசின் கட்டுபாட்டில் இருக்கும் அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு பாரத் பெட்ரோலியத்தை கூறு போட்டு விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில், வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் ஓர் முயற்சிாக பாரத் பெட்ரோலியம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதிர்ஷ்டசாலிகள் நொய்டா வாசிகள்... வாசல் தேடி வரும் சிறப்பு வசதி.. என்னனு தெரியுமா..?

இதனடிப்படையில், பாரத் பெட்ரோலியம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் விதமாக பெட்ரோலியப் பொருட்களை டூர் டெலிவரி செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த சேவையை உத்தரபிரேதச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் முதல்கட்டமாக தொடங்கியுள்ளது அந்நிறுவனம்.

மேலும், இதனை நொய்டாவின் செக்டார் 95-இல் உள்ள ஷாகித் ராமேந்திரா பிரதாப் சிங் என்ற பெட்ரோலில் பம்பிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டசாலிகள் நொய்டா வாசிகள்... வாசல் தேடி வரும் சிறப்பு வசதி.. என்னனு தெரியுமா..?

இதற்காக பிரத்யேக ஆப் ஒன்றையும் அது உருவாக்கியுள்ளது. ஃபில் நேவ் (FillNow) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆப் மூலம் எரிபொருளை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான கொள்ளளவை மினி டேங்கர் லாரிகள் மூலம் டூர் டெலிவரி செய்ய இருக்கின்றது பாரத் பெட்ரோலியம்.

அதேசமயம், பாரத் பெட்ரோலியத்தின் இத்திட்டத்தின்மூலம் சிறிய மற்றும் பெரிய தொழில்நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் என்று கூறப்படுகின்றது.

அதிர்ஷ்டசாலிகள் நொய்டா வாசிகள்... வாசல் தேடி வரும் சிறப்பு வசதி.. என்னனு தெரியுமா..?

ஏனென்றால், தற்போதைய டெலிவரி வாகனம் முழுமையாக 4,000 லிட்டர் கொள்ளளவைக் கொண்டதாகும். இது, மால்கள், மருத்துவமனைகள், மிகப்பெரிய போக்குவரத்து சேவையைச் செய்துவரும் தனியார் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள் உள்ளிட்டவற்றிற்கு கொண்டு செல்லும் வகையிலேயே தயார் செய்யப்பட்டிருப்பதாக பிபிசிஎல் நிறுவனத்தின் விற்பனைத்துறை அதிகாரி கிர்த்தி குமார் தெரிவித்துள்ளார்.

அதிர்ஷ்டசாலிகள் நொய்டா வாசிகள்... வாசல் தேடி வரும் சிறப்பு வசதி.. என்னனு தெரியுமா..?

மேலும், இந்த சேவையை விரைவில் தனியார் கார் உரிமையாளர்களுக்கும் வழங்க இருப்பதாகவும் அவர் கூறினார். அதேசமயம், இந்த பாரத் பெட்ரோலியத்தின் இந்த சேவையில் தற்போது டீசல் மட்டுமே டெலிவரி செய்யப்பட உள்ளது. ஆகையால், விரைவில் பெட்ரோலும் டூர் டெலிவரிக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சேவையில் அளவிலும், தரத்திலும் எந்த மாற்றமும் இருக்காது என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டசாலிகள் நொய்டா வாசிகள்... வாசல் தேடி வரும் சிறப்பு வசதி.. என்னனு தெரியுமா..?

எரிபொருளை நிரப்பிக் கொண்டு டெலிவரி செய்ய வரும் வாகனங்களை ஜிபிஎஸ் மூலம் கண்கானிக்கும் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால், டெலிவரிக்கு புரப்படும் வாகனங்கள் நேரடியாக புக்கிங் செய்யப்பட்ட இடங்களுக்கு மட்டுமே செல்லும். இதில் தவறும் பட்சத்தில் அந்த வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எரிபொருளில் கலப்படம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என அந்நிறுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டசாலிகள் நொய்டா வாசிகள்... வாசல் தேடி வரும் சிறப்பு வசதி.. என்னனு தெரியுமா..?

மேலும், ஃபில் நேவ் ஆப்பினை டவுண்லோடு செய்து அதில், பெயர், தொலைபேசி எண், முகவரி மற்றும் தேவைப்படும் எரிபொருள் கொள்ளளவு உள்ளிட்ட தகவல்களைப் பரிமாற வேண்டும். இதுமட்டுமின்றி, எந்த நேரத்தில் டெலிவரி தேவை என்ற காலத்திட்ட வசதியும் அதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலைப் பெற்ற பின்னர் உடனடியாக பாரத் பெட்ரோலியம் சார்பில் குறுஞ்செய்தி ஒன்று பயனாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதிர்ஷ்டசாலிகள் நொய்டா வாசிகள்... வாசல் தேடி வரும் சிறப்பு வசதி.. என்னனு தெரியுமா..?

இத்துடன், இந்த சேவைக்கான கட்டணத்தை பணமாகவே அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ரசீதை ஃபில் நேவ் ஆப் மூலமாகவே நாம் டவுண்லோடு செய்துகொள்ள முடியும்.

இந்த தற்போது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆன்ட்ராய்டு ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே தரவிறக்க செய்ய முடியும்.

கார் பழுதாகிவிட்டதா? கவலை வேண்டாம் - இனி வீடு தேடிவரும் சர்வீஸ் சென்டர்!

தற்போது பாரத் பெட்ரோலியம் தொடங்கியுள்ள இந்த சேவையைப் போலவே, பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று கார்களை சர்வீஸ் செய்யும் சேவையை வீடு தேடி வந்து செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

கார் பழுதாகிவிட்டதா? கவலை வேண்டாம் - இனி வீடு தேடிவரும் சர்வீஸ் சென்டர்!

டெயோடா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும்விதமாக 'சர்வீஸ் எக்ஸ்பிரஸ்' என்ற புதிய சேவை தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே சென்று சேவையை அளிக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தேவையில்லாமல் அலைக்கழிப்பது தவிர்க்கப்படுகிறது.

கார் பழுதாகிவிட்டதா? கவலை வேண்டாம் - இனி வீடு தேடிவரும் சர்வீஸ் சென்டர்!

மேலும், இத்திட்டத்துக்காக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 'மொபைல் சர்வீஸ்' வேன்களை தயாராக வைத்துள்ளன. அனைத்து விதமான டெயோட்டா கார்களையும் சர்வீஸ் செய்யக்கூடிய உபகரணங்கள் அந்த வேனில் நிறுவப்பட்டுள்ளன.

கார் பழுதாகிவிட்டதா? கவலை வேண்டாம் - இனி வீடு தேடிவரும் சர்வீஸ் சென்டர்!

அதேபோல், இந்த வாகனத்தின்மூலம் பிரேக் டவுண் உள்பட சிறு சிறு கோளாறுகளை மட்டுமே சரிசெய்யப்படும். ஏனென்றால், கார்கள் மிகப்பெறிய அளவில் சேதம் அடைந்திருந்தால் அதனை நினைத்த இடத்தில் வைத்து சர்வீஸ் செய்ய முடியாது. அவற்றை, முறையான சர்வீஸ் மையங்களில் வைத்து மட்டுமே சரிசெய்ய முடியும். ஆகையால், இந்த வேன்மூலம் சிறு சிறு பிரச்னைகள் மட்டும் சீர்செய்யப்படும்.

கார் பழுதாகிவிட்டதா? கவலை வேண்டாம் - இனி வீடு தேடிவரும் சர்வீஸ் சென்டர்!

குறிப்பாக, சர்வீஸ் எக்ஸ்பிரஸ் மூலம், வீல் பேலன்சிங், வீலை அலைன்மெண்ட் செய்வது மற்றும் ஈகோ கார் வாஷ் உள்ளிட்ட பணிகள் மட்டுமே மேற்கொள்ள முடியும். இவ்வாறு வாடிக்கையாளர்களின் உடனடி தேவையை நிவரத்தி செய்யும் வகையில் இந்த வேன் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், பெயிண்டிங் உட்பட வாகன அலங்கார பணிகளையும் இந்த வேன்மூலம் செய்ய இருப்பதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார் பழுதாகிவிட்டதா? கவலை வேண்டாம் - இனி வீடு தேடிவரும் சர்வீஸ் சென்டர்!

இதுகுறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனர் ராஜா கூறியதாவது, "நாட்டில் உள்ள தொலைதூர கிராமங்களிலும் சேவையை வழங்கும் விதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் நீண்டதூரம் பயணம் செய்து தங்களது வாகனங்களைச் சர்வீஸ் செய்யும் அலைக்கழிப்பு தவிர்கப்படும்..."

கார் பழுதாகிவிட்டதா? கவலை வேண்டாம் - இனி வீடு தேடிவரும் சர்வீஸ் சென்டர்!

"...வாடிக்கையாளர்களின் வாசலுக்கேச் சென்று சேவையை வழங்குவதன்மூலம், வாடிக்கையாளர்களை எளிதில் கவர முடியும். இத்துடன் வாடிக்கையாளர்களின் தேவையையும் உடனுக்குடன் பூர்த்திச் செய்யலாம். எங்களின் இந்த முயற்சியானது வாடிக்கையாளர்கள் பழுதடைந்த வாகனத்தை சர்வீஸ் சென்டர் நோக்கி பாதுக்காப்பற்ற முறையில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க முடியும். ரெகுலர் சர்வீஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் எங்களின் இந்த முயற்சி எடுத்து வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

கார் பழுதாகிவிட்டதா? கவலை வேண்டாம் - இனி வீடு தேடிவரும் சர்வீஸ் சென்டர்!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் இந்த சேவையானது இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சியானது வெற்றிப்பெறும் நிலையில், பிற பகுதிகளிலும் தொடங்கப்படும் என அந்த நிறவனம் அறிவித்துள்ளது.

கார் பழுதாகிவிட்டதா? கவலை வேண்டாம் - இனி வீடு தேடிவரும் சர்வீஸ் சென்டர்!

மேலும், இந்த சேவையைப் பெற டொயோட்டா வாடிக்கையாளர்கள் கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் எண்ணுக்கோ அல்லது அவர்களின் இணையதளம் மூலமாக சர்வீஸ் தேதியைப் புக் செய்தால் போதுமானது. வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கே டொயோட்டா கிர்லோஸ்கரின் சர்வீஸ் மேன்கள் வந்து வாகனத்தின் பழுது உள்பட தேவையான சர்வீஸை கணக்கச்சிதமாக செய்து விடுவார்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
BP Begins Doorstep Delivery Of Diesel In Noida. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X